HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

TNPSC : GROUP II - 2018 கவனத்தில் கொள்ள வேண்டியவை!

GROUP 2 2018 – கவனத்தில் கொள்ள வேண்டியவை
• இருப்பது  92 நாட்களே... கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்... கண்டிப்பாக முதல்நிலை தேர்வில் வெற்றி பெறும்படி இந்த நாட்களில் தயார் ஆவது மிக எளிது.



• மொத்த காலிப்பணியிடங்கள் 1199 என்பதால் சுமார் 12000 பேர் மட்டுமே மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்

• தோரயமாக 
பொதுப்பிரிவினர்—372
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் -318
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்- 240 
தாழத்தபட்டோர் -180 
முஸ்லிம் -42
அருந்ததியினர் -35
பழங்குடியினர் -12 
பேருக்கு பணி கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.... இறுதி மதிப்பெண் பட்டியலில் உங்கள் தரவரிசை  உங்கள் இட ஒதுக்கீடு படி இதற்குள் இருந்தால் உங்கள் பணி உறுதி..

சமீப காலமாக போட்டி அதிகம் என்பதால் முதல்நிலைத் தேர்வில் முதல் 12000 பேர் தர வரிசையில் குறைந்தது  158+ கேள்விகள் சரியாக பதில் அளித்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.. கேள்வி எளிது என்றால் இன்னும் அதிகமாக பதில் அளிக்க வேண்டும்.. கடினம் என்றால குறைய வாய்ப்பு இருக்கிறது..
• புதிய புத்தகத்தில் தேவையானதை மட்டும் படித்து மற்றவற்றை புறந்தள்ளி விடலாம்

• முக்கியமாக மொழிப்பாடம்+கணிதம்+நடப்பு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்..ஏனெனில் முதல்நிலை மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ள போவதில்லை

• அதிகமாக பழைய மற்றும் மாதிரி வினாத் தாள்களை பயிற்சி செய்யுங்கள்
• நகராட்சி ஆணையாளர்,சார் பதிவாளர்  போன்ற பசையுள்ள பதவிகள் வந்து இருப்பதால் ஏற்கனவே குருப் 2ல் பணி புரிபவர்கள் போட்டியிட்டு போட்டியை அதிகப்படுத்த வாய்ப்புண்டு.. எனவே போட்டியோ போட்டி..போட்டிக்கு எல்லாம் போட்டி தான் இந்த தேர்வு.. மனதில் வைத்துக் கொள்ளவும்
விண்ணப்பதை பிழை இல்லாமல் விண்ணப்பிக்கவும் இந்த அறிவிக்கை க்கு பிறகு குருப் நான்கு,குருப் 2A போன்ற அறிவிக்கை வர குறைந்தது பத்து மாதங்கள் ஆகலாம்..அல்லது ஒரு வருடம் மேலே ஆகலாம்... எனவே இந்த வாய்ப்பை தவறவிட்டால் நீங்கள் வாழ்க்கையை வெறுக்க வேண்டிய சூழ்நிலை வரும்...• மெயின் தேர்வு கண்டிப்பாக இருப்பதால்  நீங்கள் படிக் வேண்டியதும் எழுதி பழக வேண்டியதும் கடல் அளவு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்...


By 
V Siva Anantha Krishnan
Duty Officer
All India Radio 
Tirunelveli