HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 10-08-2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:


திருக்குறள்:

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

உரை:
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.


பழமொழி :

After death, the doctor

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்

பொன்மொழி:

எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.

- ஆபிரஹாம் லிங்கன்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள்?
யுரேனியம்

2.இந்திய-பாகிஸ்தான் எல்லை?
வாகா

நீதிக்கதை :

ஆயிரம் நாணயங்கள் - முல்லா நீதி கதைகள்
(1000 Coins - Mulla Stories for Kids)




முல்லாவிற்கு கடவுளிடம் சத்தமாக வேண்டிக்கொள்ளும் பழக்கம் இருந்தது. தினமும் ஒரே வேண்டுதலை, ஒரே விதமாக வேண்டிக்கொள்வார். ஒரு நாள், "கடவுளே எனக்கு ஆயிரம் நாணயங்கள் வேண்டும். அதில் ஒரு நாணயம் குறைந்தாலும் வாங்க மாட்டேன்." என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு இருந்தார்.

முல்லாவின் வேண்டுதலை தினமும் கேட்டுக்கொண்டு இருந்த பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவை ஏமாற்ற நினைத்தார்.

  பக்கத்து வீட்டுக்காரர் தன் வீட்டிற்கு சென்று தன்னுடைய சேமிப்பு பணத்தில் இருந்து 999 நாணயங்களை ஒன்றாக ஒரு சிறிய பையில் கட்டிக்கொண்டு முல்லாவின் வீட்டை நோக்கி ஓடினார்.

முல்லாவின் வீட்டை அடைந்ததும் அந்த பக்கத்துக்கு வீட்டுக்காரர் தான் கொண்டு வந்த பண பையை முல்லாவின் ஜன்னல் வழியாக முல்லாவை நோக்கி வீசினார்.

முல்லா வேண்டுதலை முடித்த பிறகு அருகில் ஒரு பை இருப்பதை பார்த்தார். அதை திறந்து பார்த்த போது உள்ளே நாணயங்கள் இருப்பதை கண்டார். உடனே கடவுள் தான் வேண்டுதலை நிறைவேற்றி விட்டார் என கூறிக்கொண்டு கடவுளுக்கு நன்றி தெரிவித்து நாணயங்களை என்ன தொடங்கினார்.

முல்லா காசை என்ன தொடங்கிய பொழுது அதை ஜன்னல் வழியாக அந்த பக்கத்து வீட்டுக்காரர் வேடிக்கை பார்த்தார். முல்லாவோ நாணயங்களை எண்ணி முடித்த பிறகு அதில் நாணயங்கள் மட்டுமே இருந்தது.

பின்னர் முல்லா, "நன்றி கடவுளே, ஆனால் மீதம் உள்ள 1 நாணயத்தை சீக்ரம் குடுத்து விடு" என கடவுளிடம் வேண்டினார். இதை சற்றும் எதிர்பாராத பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் சென்று இந்த பணப்பை என்னுடையது, நான் தான் உன் வீட்டிற்குள் தூக்கி எறிந்தேன் என்னிடம் குடுத்து விடு என முல்லாவிடம் கெஞ்சினார். ஆனால் முல்லாவோ கடவுள், "உன் மூலமாக எனக்கு உதவி செய்துள்ளார் என கூறி, உனக்கு குடுக்க இயலாது" என்று கூறிவிட்டார்.

வேறு வழி இல்லாமல் அந்த பக்கத்து வீட்டுக்காரர் பஞ்சாயத்துக்கு போகலாம் என்று முல்லா விடம் கூறிவிட்டார். ஆனால் முல்லாவோ, "எனக்கு உடல் நிலை சரி இல்லை, மேலும் என்னால் நடக்கவும் இயலாது", என்று கூறினார். அதற்கு அந்த பக்கத்து வீட்டுக்காரர், "என்னுடைய கழுதையை தருகிறேன் வா", என்று முல்லாவிடம் கூறினார்.  அதற்கு முல்லாவோ, என்னுடைய உடையை பார் அழுக்காக உள்ளது என்று கூறினார்.

 அதற்கு முல்லாவோ, என்னுடைய உடையை பார் அழுக்காக உள்ளது என்று கூறி, அவருடைய உடையையும் வாங்கிக்கொண்டு பஞ்சாயத்துக்கு  சென்றார்.

இருவரும் நீதிபதியிடம் வந்து சேர்க்கின்றனர். நீதிபதி முழு கதையையும் கேட்டு அறிந்து கொண்டார். பின்னர் முல்லாவோ, நீதிபதி அவர்களே அவனை நம்பாதீர்கள். அவன் இப்பொழுது எல்லாம் மற்றவர்களின் பொருட்களை எல்லாம் தன்னுடையது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றல் என்னுடைய துணியையும், எனக்கு பின்னல் நிற்கின்ற கழுதை இரண்டையும் என்னுடையது என்றே சொல்லுவான்.

அடுத்த நொடியே அந்த பக்கத்து வீட்டுக்காரர், முல்லா அணிந்துள்ள துணி மற்றும் அந்த கழுதை இரண்டு என்னுடையது என்று நீதிபதியிடம் கூறினான்.

நீதிபதி, பார்த்தீர்களா, எனக்கு இப்பொது புரிந்து விட்டது. முல்லா நீ உனது பண பையை எடுத்து செல்லலாம். இதை கேட்டு அந்த பக்கத்து வீட்டுக்காரர் தான் ஏமாற்ற பட்டத்தை அறிந்து கண்ணீர் விட்டார்.

இறுதியில் முல்லாவோ அந்த பண பையையும் , அந்த கழுதையையும் எடுத்துக்கொண்டு இல்லம் நோக்கி நடந்தான்.

நீதி: முட்டாள் தனம்  இழப்பையே தரும்.

இன்றைய செய்தி துளிகள் :

1.தமிழகம் முழுவதும் 200 பள்ளிகளின் தரம் உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

2.எஸ்.சி, எஸ்.டி சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

 3.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி ஆகஸ்ட் 12-ம் தேதி பதவியேற்பு

4.இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ம் தேதி தொடங்குகிறது.

5.தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 3 ரன்கள் வித்தியாசத்தில் டக் வொர்த் லீவிஸ்' முறையில் த்ரில் வெற்றி கண்டது.