தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்
▼
TEACHERS
▼
IMPORTANT LINKS
▼
TV LIVE
▼
ON LINE RADIO GARDEN
▼
STUDENTS ZONE
▼
UNIVERSITIES LINKS
▼
வியாழன், 5 ஜூலை, 2018
BE - கவுன்சிலிங் நாளை துவக்கம்!
இன்ஜினியரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, சிறப்பு பிரிவினருக்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. தகுதி பெற்ற மாணவர்கள், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கு நேரில் வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து, அண்ணா பல்கலையின், இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, ஜூலை, 6ல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தகுதியுள்ள மாணவர்கள், அன்று சென்னைக்கு வந்து, கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.இதற்கான தகவல்கள், மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள், ஜூலை, 7ல் நடக்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, ஜூலை, 8ல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி பெற்றவர்கள், சென்னைக்கு வந்து கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். காலை, 9:00 மணி, 10:30 மணி மற்றும் நண்பகல், 12:00 மணி என, மூன்று கட்டங்களாக, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இதற்கான தகவல்கள், மாணவர்களுக்கு, இ - மெயில், எஸ்.எம்.எஸ்., வழியே அனுப்பப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.'ஆன்லைன்' கவுன்சிலிங் எச்சரிக்கைபொது பிரிவு மாணவர்கள், தங்களின் விருப்ப பாடப்பிரிவு மற்றும் விருப்ப கல்லுாரியை பதிவு செய்யும் நடவடிக்கைகளை, https://www.tnea.ac.in மற்றும் https://www.annauniv.edu ஆகிய இணையதளங்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என, இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் அறிவித்துள்ளார்.
மேலும், ஆன்லைன் கவுன்சிலிங்கின்நடைமுறைகளும், இன்ஜி., மாணவர் சேர்க்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.