தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்
▼
TEACHERS
▼
IMPORTANT LINKS
▼
TV LIVE
▼
ON LINE RADIO GARDEN
▼
STUDENTS ZONE
▼
UNIVERSITIES LINKS
▼
வியாழன், 26 ஏப்ரல், 2018
கல்வித்துறை அமைச்சர் அவர்கள் விடுத்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து போராட்ட குழுவின் சார்பில் பதிலறிக்கை!!!
நேற்று மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டு இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.நாங்களும் எங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால் கண்டிப்பாக உண்ணாவிரத போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெற்று விடுவோம்..நாங்களும் தயாராக தான் உள்ளோம்..நேற்று விடுத்த அறிக்கையில் பிறருடைய தூண்டுதலின் பேரில் இப்போராட்டம் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்..அதனை முற்றிலும் மறுக்கிறோம்..ஏனெனில் இந்த போராட்டம் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது..அனைத்து ஆட்சிகளிலும் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது..ஆகவே ஆசிரியர் நலனை மட்டுமே கருதி மட்டுமே போராட்டம் நடைபெற்று வருகிறது...யாருடைய ஆட்சி வந்தாலும் எங்களது போராட்டம் கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும்..மேலும் வழக்கு நிலுவையிலுள் உள்ளது என்று கூறியுள்ளார்கள்..வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது வெளியில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு விட்டால் எங்களது வழக்கை வாபஸ் பெற்று விடுவோம்..ஆகவேஎங்களது போராட்டத்தை நியாயத்தை உணர்ந்து அதை திசை திருப்பாமல் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு ஆவணம் செய்ய வேண்டும்....