தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்
▼
TEACHERS
▼
IMPORTANT LINKS
▼
TV LIVE
▼
ON LINE RADIO GARDEN
▼
STUDENTS ZONE
▼
UNIVERSITIES LINKS
▼
சனி, 28 ஏப்ரல், 2018
அரசின் பெரும்பகுதி நிதி ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவிடப்படுகிறது - போராடும் அரசு ஊழியர்கள் இதை சிந்திக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமி...
தமிழக அரசின் பெரும்பகுதி நிதி, அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவாகிறது, அதனால், கூடுதல் சம்பளம் கேட்டு போராடுவோர் சிந்திக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடியில் புதிய கட்டடங்கள் திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
இதில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, தமிழகத்தில் எட்டு கோடி பேர் உள்ளனர். 13 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இன்னும் கூடுதல் சம்பளம் வேண்டும் என ஊழியர்கள் போராடுகின்றனர்.
மாநில அரசு மூலம் 69, மத்திய அரசு மூலம் 31 சதவீத வரி அரசுக்கு கிடைக்கிறது. இதில் மாநில வரியில் 61 சதவீதம் ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. மீதிர வரி மூலம் 7.87 கோடி பேருக்கு தேவையான திட்டப்பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், போராடும் அரசு ஊழியர்கள் அவர்களை தூண்டும் எதிர்க்கட்சியினர் இதை சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.