HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

சனி, 14 ஏப்ரல், 2018

நோ.,பேனா நோ.,பேப்பர்! கையடக்க கணிணியில் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள்!


இராமநாதபுரம்: பேனா இல்லாமல் பேப்பர் இல்லாமல் (டேப் என அழைக்கப்படும்) கையடக்க கணிணியில் தேர்வு எழுதி பாடம் கற்று அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் அமைந்துள்ளது பாரிவள்ளல் நகராட்சி அரசுப் பள்ளி, இந்த பள்ளியில் ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களின் திறமையினை வளர்க்கும் வகையில் கையடக்க கணினி மூலம் தேர்வு எழுதும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழக பள்ளிகளில் பயிற்றுவிக்கும் முறை மற்றும் பயிலும் முறையில் பல்வேறு மாறுதல்கள் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றில் புத்தகங்கள் இன்றி கையடக்க கணினி மூலம் பாடங்களை பதிவேற்றி அவற்றின் மூலம் கற்பதுடன் தேர்வு எழுதும் முறையும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முன்னோட்ட திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பத்து பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியும் ஒன்று. இந்த பள்ளியில் 1 முதல் 3 வரையில் உள்ள வகுப்புகளில் பயிலும் 81 மாணவ மாணவிகள் கையடக்க கருவி மூலம் தேர்வு எழுதினர்.



நவின விஞ்ஞான உலகத்தின் இளையதலைமுறைகள் தமிழக அரசின் பள்ளிகல்வித்துறை சார்பில் சிபிஎஸ்சி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் தரத்தை உயர்த்தி வருகின்றனர்.

இந்த முயற்சிக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை.

இது குறித்து கையடக்க கணிணியில் பயிலும் முதலாவது வகுப்பு மாணவி எமிம்மாஜீலினாயிடம் பேசும் போது.,

நாங்க இப்ப டேப்ல படுச்சுகிட்டு இருக்கோம். அது எங்களுக்கு சந்தோஷமா இருக்கு. டேபுக்குள் புக்கே இருக்கு. அத நாங்க ஸ்கேன் பன்னி அதுல வர கதைகள் படங்கள் பாட்டுகள் ரைம்ஸ் இது எல்லாமே வரும். இது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இது ரொம்ப ஈஸியா இருக்கு. எங்க பெரன்ட்ஸ்கிட்டையும் இத பத்தி சொல்லிருக்கோம் ரொம்ப ஈஸியா இருக்குன்னு.

முதலாவது வகுப்பு மாணவன் ஜான்பெனடி: நாங்க டேப்பில படிக்கிறோம் அது ரொம்ப சந்தோஸம்மா இருக்கு பென்சிலு ரப்பரு ஸ்கேலு எதும்மே இல்லாம்ம படிக்கிறோம் விடியோ ஸ்டோரி எல்லாம்மே நாங்களே ஸ்கேன் பன்னி படிக்கிறோம்.

இரண்டாவது வகுப்பு மாணவி ரபினாபேகம்: நாங்க எங்க ஸ்கூல்ல டேப் வச்சுருக்கோம் நாங்க எல்லாத்தையும் டேப்ல தான் படிக்கிறோம் மொத்தம் 25 டேப் இருக்கு / 1ம் வகுப்பில் இருந்து மூன்றாவது வர டேப் யூஸ் பன்னுறோம் நாளாவது அஞ்சாவது லேப்டாப் வச்சு படிக்கிறாங்க எங்க டீச்சர் இந்த டேப்ல ரெம்ப நல்லா சொல்லி தராங்க.

பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்தர் வேணி: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முன்னோட்ட திட்டமாக கையடக்க கணினி மூலம் பாடம் பயிலும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென பயிற்சி புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களில் உள்ள பாடங்களை க்யூ-ஆர் பார்கோட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் கையடக்க கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட பாடங்களில் இருந்து 20 மதிப்பெண்களுக்கான தேர்வினை மாணவ மாணவிகள் இந்த கையடக்க கணினி மூலம் எழுதுகின்றனர். தமிழ், ஆங்கிலம் தேர்வு உள்ளிட்ட அனைத்து பாட தேர்வுகளையும் கையடக்க கணினியில் எழுத உள்ளதாக தெரிவித்தார்.

இந்த பள்ளியில் பயிலும் மாணவனின் பெற்றோர் சொர்ணகவிதா: ப்ஸ்ட்ல இருந்ததோடு வரைக்கும் பிள்ளைங்க டேப் யூஸ் பன்னுறாங்க. டேப்ல தான் பரீட்சையும் எழுதுறாங்க. சோ, இந்த மாதிரி டேப் யூஸ் பன்னுறது அரசு பள்ளியின்னு பாக்குறப்ப ரொம்ப சந்தோஷம்மா இருக்குது.

அதுமட்டும் இல்ல சிபிஎஸ்சி சில பஸ்லைய்யோ அல்லது மெட்ரிக்லோஷன் ஸ்கூல்லைய்யோ டேப் யூஸ் பன்னி எக்ஸாம் எழுதி நான் இன்னும் பாக்கல அரசு பள்ளியில டேப் யூஸ் பன்னுறது ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா இருக்கு.

நாங்க படிக்கிற காலத்துல இதெல்லலாம்இல்ல இனி ப்யூச்சர்ல பஸ்ட் ஸ்டாண்டடுல இருந்து பத்தாவது வரைக்கும் கொண்டு வந்த இன்மும் சந்தோஷம்மா இருக்கும் என கூறினார்.

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே கரையோரம் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இந்திய கடற்படையினர் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேசுவரம் அருகேயுள்ள சம்பை, மாங்காடு, ஏற்காடு, வடகாடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை (இன்று) கடற்கரையில் இருந்து ஒரு நாட்டிகள் தூரம் வரை சென்று கரையோரம் உள்ள நண்டு மற்றும் கணவாய் மீன்களை பிடித்துக் கொண்டிருந்தனர்.


அப்போது அந்தப் பகுதிக்கு வந்த இந்திய கடற்படையினர், மீனவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, மீனவர்கள் நாங்கள் கரையோரம் மீன்பிடிக்கும் மீனவர்கள் என்பதால் அடையாள அட்டை வைத்துக் கொள்வதில்லை. மேலும், கடலில் இறங்கி மீன்பிடிப்பதால் அடையாள அட்டைகளை பாதுகாக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்கமறுத்த இந்திய கடற்படை அதிகாரிகள், அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 42 மீனவர்களையும், அவர்கள் மீன்பிடிக்க பயண்படுத்தும் மிதவைகளையும் பறிமுதல் செய்து ராமேசுவரம் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர்

அங்கு விசாரணை என்ற பெயரில் மீனவர்களை சுமார் மூன்று மணி நேரம் கடலில் கடும் வெயிலில் நிறுத்தியுள்ளனர்.

தகவலறிந்த மீனவர்களின் உறவினர்கள், வீட்டில் இருந்த அடையாள அட்டைகளை எடுத்துச் சென்று காட்டிய பின்னர் அதிகாரிகள் மீனவர்களை விடுவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மீனவ கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மீனவர் கர்ணாமூர்த்தி கூறுகையில்.,

கடந்த சிலமாதமாக சர்வதேச கடல் எல்லை வழியாக பல கோடி மதிப்பிலான போதை பொருள்கள் மற்றும் தங்கம் ஆகியவை கடத்தி வரப்படுகிறது.

அதனை தடுக்க தவறிய அதிகாரிகள், கரையோரம் மீன்பிடிக்கும் மீனவர்களை விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்கின்றனர். மீனவர்கள் சார்பில் இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

ராமேசுவரம்: ராமேசுவரம் கடலோரப் பகுதியில் வெள்ளிக்கிழமை (இன்று) நிழல் இல்லாத நாள் குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் சோதனை செய்து பார்த்து மகிழ்ந்தனர்:

சூரியன் நம் தலைக்கு மேல் இருக்கும்போது நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நமது காலடியில் இருக்கும். அதாவது செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நம் கண்களுக்கு தெரியாது.

இதனை வானியல் ஆய்வாளர்கள் நிழல் பூஜ்ஜியம் (zero shadow) என குறிப்பிடுகின்றனர். இவ்வாறு சூரியன் செங்குத்தாக இருக்கும்போது, நிழல் பூஜ்ஜியமாக மாறும் நாளினை நிழல் இல்லாத நாள் என்று கூறுவர்.

அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை), ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் நிழல் இல்லாத நாள் தோன்றியது. சரியாக நண்பகல் 12.13 மணிக்கு சூரியன் நடு உச்சத்தில் இருக்கும் போது நிழல் இல்லாத நேரம் ஏற்படுகிறது.

இந்நிலையில், இதனை அறிந்த புதுரோடு அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நேரில் காணவேண்டும் என ஆசைப்பட்டனர். இதனை அறிந்த அறிவியல் ஆசிரியர்கள் அவர்களுக்கு உதவ முன்வந்தனர்.

இதனையடுத்து காலை 10.50 மணியளவில் மூன்று பொருட்களை வெயிலில் செங்குத்தாக வைத்தனர். அப்போது அந்த பொருட்களின் நிழல் மேற்கு பக்கமாக விழுந்தது. பின்னர் பகல் 12.13 மணி அளவில் அந்த பொருள்களின் நிழல் முற்றிலுமாக மறைந்தது. இதனைக் கண்ட மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.