தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்
▼
TEACHERS
▼
IMPORTANT LINKS
▼
TV LIVE
▼
ON LINE RADIO GARDEN
▼
STUDENTS ZONE
▼
UNIVERSITIES LINKS
▼
வியாழன், 26 ஏப்ரல், 2018
5 மாணவர்களோடு மூட இருந்த அரசுப் பள்ளியை 284 மாணவர்களாக வளர்த்தெடுத்த தலைமை ஆசிரியை!
வெறும் ஐந்து மாணவர்களோடு மூடப்பட இருந்த அரசுப்பள்ளியை தனது முயற்சியால் 284 மாணவர்களாக வளர்த்தெடுத்திருக்கிறார் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை.
கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிதான் அந்தப் பள்ளி. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலலிதாதான் அந்த அசத்தல் முயற்சிக்குச் சொந்தக்காரர். அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கச் சொன்னால், 'ஏன் சார், அங்க தர்மத்துக்கு பாடம் சொல்லித் தருவாங்க. பிள்ளைங்க எதிர்காலம் என்னாவது?' என்று படித்த பெற்றோர்களே அவநம்பிக்கையாக கரிச்சுக் கொட்டும் காலம்.
இந்த நிலையில், விஜயலலிதா அரசுப் பள்ளி மீதான நம்பிக்கையை 200 சதவிகிதம் அதிகரிக்கச் செய்யும் விதமாக செயல்பட்டு வருகிறார்.
கரூர் நகரத்தை ஒட்டி திருச்சி சாலையில் ஐந்து கிலோ மீட்டரில் இருக்கிறது நரிக்கட்டியூர். இந்தக் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஒரு ஆசிரியர், வெறும் ஐந்து மாணவர்களோடு மூடப்படும் நிலையில் இருந்திருக்கிறது. அதைதான் அந்தப் பள்ளிக்கு பணிக்கு வந்த தலைமை ஆசிரியை விஜயலலிதா மாணவர்களின் எண்ணிக்கையை மெல்ல மெல்ல அதிகரிக்க வைத்து, இப்போது 284 மாணவர்களாக ஆக்கி சாதனை செய்திருக்கிறார். அடுத்த வருடம் ஒன்றாம் வகுப்பு படிக்கத் தயாராக இருக்கும் நான்கு வயது சிறுவர், சிறுமியர்கள் 46 பேரை இப்போதே தனியார் பள்ளியில் உள்ளது போல் எல்.கே.ஜி வகுப்பு ஆரம்பித்து, அதில் பயில வைக்கிறார்.
தனியார் பள்ளிகள் நோக்கி தங்கள் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் போவதை தடுக்கவே இந்த ஏற்பாடாம். இன்னும் ஏகப்பட்ட அசத்தல் விஷயங்கள் இந்தப் பள்ளியில் உள்ளன. தலைமை ஆசிரியை விஜயலலிதாவோ, 'சக ஆசிரியர்கள், ஊர் மக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள், ஸ்பான்ஸர்கள்ன்னு எல்லோரும் ஊர்கூடி தேர் இழுத்து இந்தச் சாதனையைச் செய்திருக்கிறோம். இதுல என் பங்கு எல்லோரையும் ஒருங்கிணைத்ததுதான்" என்கிறார் சிம்பிளாக.