HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

சனி, 28 ஏப்ரல், 2018

இன்றைய ராசிபலன் 28.4.2018

மேஷம்
 இன்று பணவரத்து கூடும்.
ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் 
மனவருத்தம் ஏற்படலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து
 செய்வது நல்ல பலன் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம்
 உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6


ரிஷபம்
 இன்று அனாவசிய செலவுகளை நீக்கி அத்யாவசிய செலவுகளை மட்டுமே
 செய்வீர்கள். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும். அதே 
நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
 பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
 அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்
 இன்று மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு
 கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில்
 லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும்.
 வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7

கடகம்
 இன்று போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண்
 அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும்.
 மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் 
காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7

சிம்மம்
 இன்று குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின்
 பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே 
வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து
 செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி
 தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5

கன்னி
 இன்று கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி
 காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
 எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற
 கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5

துலாம்
 இன்று எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும். நேரத்திற்கேற்றார்
 போல் வளைந்து கொடுத்து காரியம் சாதித்துக் கொள்வீர்கள். கடினமான 
பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். பணவரத்து
 உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, 
அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3

விருச்சிகம்
 இன்று வீண் செலவுகள் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம்
 உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.
 எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு
 பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் 
மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3,

தனுசு
 இன்று கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை
 தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில்
 இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் 
இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை,
 மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மகரம்
 இன்று கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம்
 மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
 தொல்லைகள் நீங்கும். எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்
 இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த
 வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும். பகையை மனதில் வைத்து
 எதிரியை தகுந்த நேரம் பார்த்து வெற்றி கொள்வீர்கள். மனதில் புதிய
 உற்சாகம் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்,
 நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மீனம்
 இன்று முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து எதிர்பார்த்த
படி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கெட்ட கனவுகள்
 தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். அதிர்ஷ்ட
 நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9