HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வெள்ளி, 16 மார்ச், 2018

Phonetic method DVD இன்றிலிருந்து தினமும் kalvicikaram இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.


ஐயப்பன் என்ற தொடக்கப் பள்ளி தலைமையாசிரியரின் சீரிய உழைப்பாலும்,பயிற்சியாலும் உருவான தொகுப்பே இம்முறை.
திருப்போரூர் ஒன்றிய இடைநிலை ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்போடும்,அர்ப்பணிப்போடும் இம்முறை பாட அலகுகளாக்கப் பட்டது.

கண்ணன் மற்றும் ஞானசேகர் ஆசிரியர்கள் சூலேரிக்காட்டுக்குப்பம் என்ற கடற்கரை ஓரப் பள்ளியைத் தெரிவு செய்தார்கள்.
       அனைவரும் இணைந்து பல விதமாகத் திட்டமிட்டோம்.பலநாட்கள் இரவு பகல் பாராமல் வகுப்பறையை English Lab போல ஓவியங்களால் வடிவமைத்தோம்.
தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் இன்று காணப்படும் வகுப்பறை ஓவியங்களின் முன்னோடி இந்த வகுப்பறை தான்.

ஆசிரியர் கண்ணன் இதை சிறப்பாகச் செய்து முடித்தார்.மகாபலிபுரம் கடற்கரை அருகில் ஆங்கில படப்பதிவுக்காக உருவான  வகுப்பறையை நீங்கள் இதில் பார்க்கலாம்.script, Location, preparation போன்றவற்றை உருவாக்கவே 2 மாதங்கள் யாருமே தூங்கவில்லை.

தொடக்கக் கல்வித் துறையில் இணை இயக்குநராக இருந்த திருமதி. லதா அவர்கள் தான் இத்திட்டத்தின் ஆணிவேர்.படைப்பாளிக்கு கொடுக்க வேண்டிய அங்கீகாரத்தையும்,சுதந்திரத்தையும் எனக்குக் கொடுத்தார்கள்.

எனது பக்கபலமான தொழில்நுட்பக் கலைஞர்களோடு களம் இறங்கினேன்.அந்தோணி,ஜான்  கேமரா.வின்சி அண்ணன் எல்லா வித உதவிகளும் செய்தார்.

ஒரு சினிமா எடுக்க என்னென்ன விஷயங்கள் தேவையோ அந்த தொழில்நுட்பத் தரத்தை மனதில் கொண்டு,குழந்தைகளுக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என்ற ஈடுபாட்டோடு ஒவ்வொரு நிமிடமும் உன்னிப்பாக இருந்தோம்.

அனுபவம் ஒவ்வொரு நாளும் தொடரும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே உதவி தான்.எப்படியெல்லாம் பகிர முடியுமோ எல்லோருக்கும் பகிருங்கள்.

இதில் பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய ஆசிரியர்களின் உழைப்பினாலும்,தியாகத்தினாலும் மட்டுமே இந்த வெற்றி சாத்தியம்.முதல் நன்றிகள் இவர்களுக்கும்,ஐயப்பன் மற்றும் அமலன் ஜெரோம் ஆசிரியர்க்கும்...

Phonetic method -இன் முதல் unit இது


இந்த முதல் அத்தியாயத்தை நீங்கள் பார்ப்பதற்காய் ஆறு மாதத்திற்கும் மேலான பலருடைய உழைப்பு பின்புலமாய் இருந்துள்ளது...

அப்படி ஆறு மாதமாய் என்னத்த திட்டமிட்டீர்கள் என்று கேட்பவர்களுக்காய்...

நிறையக் கேள்விகள் எங்களுக்குள்...
கேமரா வைக்குமளவுக்கு அறை நீளமாக வேண்டுமே,சுவற்றில் flex வைப்பதா அல்லது ஓவியம் வரைவதா?
Flex வைத்து reflect ஆனால் என்ன செய்ய? எனவே ஒரு இடம் விடாமல் ஓவியம் வரைய முடியுமா?
அவ்வளவு பெரிய அறைக்கு lightings எப்படி arrange பண்ணுவது?
எல்லா சன்னல்களையும்,கதவையும் அடைத்தால் தான் lightings சீராக இருக்கும். அப்படியென்றால் 10,000 வாட்ஸ் வெளிச்ச வெப்பத்தில் நடிக்கும் ஆசிரியர்கள் தாங்குவார்களா?
ஒவ்வொரு ஆசிரியர்களும் தினசரி அதிகாலை ஒவ்வொரு இடத்திலிருந்தும் பல கிலோ மீட்டர் பயணித்து வர வேண்டும், மாலை தான் படப்பிடிப்பு முடிந்து செல்ல வேண்டும், 4 மாதம் இப்படியே தொடர்ந்து வருவார்களா?
Script முழுக்க முழுக்க ஆங்கிலமா அல்லது
தமிழா அல்லது இரண்டும் கலந்துமா?
ஆசிரியர்களுக்கு எது புரியும்? குழந்தைகளுக்கு எது படிக்கப் பிடிக்கும்?
Screenplay ல் ஒரு தொய்வில்லாமல் dialogue எப்படி எழுதுவது?
நெல்லிக்குப்பம் ஊருக்கும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் 30 கிலோ மீட்டர். சின்ன இடையூறின்றி தினசரி குழந்தைகளை யார், எப்படிக் கூட்டி வருவது?
எல்லா ஆசிரியர்களையும் ஒரே மாதிரியான சேலை 2 எடுக்கச் சொல்லி,எடுத்து விட்டார்கள்? 4 மாதங்கள் ஒரே சேலை தினசரி உடுத்துதல் சாத்தியமாகுமா?
தரையில் உட்கார வைத்தா?chair போடுவதா?
தரையில் என்ன விரிக்க?விரிப்புக்கு என்ன செய்ய?
4 மாதங்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் சாப்பாட்டுக்கு எப்படி ஏற்பாடு செய்வது?தொழில் நுட்ப கலைஞர்கள் தங்கி,சாப்பிட என்ன செய்வது?
தினசரி அனைத்தையும் காலை தயார் செய்ய வேண்டும்.மாலையில் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். இதற்கு என்ன பண்ணுவது?
Live sound recording-ல் நாய் குலைத்தால் கூட Re-take எடுக்க வேண்டும். சாத்தியமாகுமா?

இப்படி சின்னச்சின்னக் கேள்விகள். கேள்விகள் சிறிதாயினும் நடைமுறையில் இது எவ்வளவு பிரச்சினை என்பதை அணு அணுவாய் அனுபவித்தோம்.

ஒரு நாளில் இது சுலபம். ஒவ்வொரு நாளும் எவ்வளவு கடினம் என்று தெரிந்தும் போராடினோம்.
விளைவு முதல் unit தற்போது நீங்கள் பார்க்கும்படியாக.
கொஞ்சம் தான் சொல்லியிருக்கிறேன்...
அனுபவம் தொடரும்...

இது ஆங்கில பயம் போக்கும் அட்சயம். பார்ப்போம்...ஆசிரியர்கள் இதை எவ்வளவு பயன்படுத்தப் போகிறார்கள்? எத்தனை பேருக்கு share செய்து மானுடம் பயனுற வாழ வைக்கப் போகிறார்கள் என்று.
நல்லபடி நடந்தால் அரசுப்பள்ளிகள் தப்பிக்கும்.ஆங்கில பயம் அகலும். Cbse க்கு நிகரான உச்சரிப்பு நிகழும்.அடுத்த ஆண்டு சேர்க்கை அதிகரிக்கும். கொஞ்சம் முன் வருவோம்...வெறும் 43 நாட்கள் மட்டுமே போதும்.இன்றிலிருந்து ஒரு முயற்சி... முனைவோம்.