HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

செவ்வாய், 20 மார்ச், 2018

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

   *க.ஜெயசீலன்.*

*இன்று நினைவு நாள்:- மார்ச்-20.*

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🍎 *கணிதவியலாளரும், அறிவியலாளரும் தத்துவஞானி-* ஐசக் நியூட்டன் *மறைந்த தினம்.*
____________________

🍎 *ஐசக் நியூட்டன் 1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார்.*

🍎 *இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிய நியூட்டனை அவரது பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு, தாயாரும் தனது புதிய கணவருடன் வாழச் சென்றுவிட்டார்.*

🍎 *அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன்.*

🍎 *இது நாள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவராகவும் இவர் இருந்தார்.*

🍎 *1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய,* Philosophiae Naturalis Principia Mathematica *என்னும் நூலை வெளியிட்டார்.*

🍎 *இவருடைய இயக்க விதிகள் மூலம்,* (classical mechanics) *என்னும் துறைக்கு வித்திட்டார்.*

🍎 கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் *என்பவருடன் சேர்ந்து, வகையீட்டு நுண்கணிதத் துறையின் உருவாக்கத்தில் பங்கு கொண்டார்.*

🍎 *நியூட்டனின் பிரின்சிப்பியாவிலேயே, பின்வந்த மூன்று நூற்றாண்டுகளில் பௌதீக அண்டம் தொடர்பான அறிவியலாளரின் நோக்கில் ஆதிக்கம் செலுத்திய, இயக்க விதிகள், பொது ஈர்ப்பு ஆகியவை உருவாக்கம் பெற்றன.*

🍎 *இது* புவியில் பொருட்களின் இயக்கங்களையும், அண்டவெளியில் உள்ள கோள்கள் *முதலிய பொருட்களின் இயக்கங்களையும் ஒரே கோட்பாடுகளின் அடிப்படையில் விபரிக்கலாம் என விளக்கியது.*

🍎 *நியூட்டன் நடைமுறைச் சாத்தியமான* முதலாவது தெறிப்புத் தொலைநோக்கியை *உருவாக்கியதுடன்,* முப்பட்டைக் கண்ணாடி வெள்ளொளியைப் பிரித்துப் பல நிற ஒளிகளைக் *கொண்ட* நிறமாலையாகத் *தரும் கவனிப்பை அடிப்படையாகக்கொண்டு நிறக் கோட்பாடு ஒன்றையும் உருவாக்கினார்.*

🍎 ஒலியின் வேகம் *குறித்தும் இவர் ஆய்வுகள் செய்தார். நுண்கணிதத்தில் இவரது ஆய்வுகளுக்குப் புறம்பாக, ஒரு கணிதவியலாளராக, அடுக்குத் தொடர் குறித்த ஆய்வுகளுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார்.*

🍎 புவிசார் மற்றும் விண்வெளிசார் இயக்கங்களைக் *கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை முதன்முதலில் விளக்கினார்.*

🍎 *இவர் அறிவியல் புரட்சியுடனும், சூரியமையக் கோட்பாட்டின் வளர்ச்சியுடனும் தொடர்புபட்டிருந்தார். கோள்களின் இயக்கத்துக்கான கெப்ளரின் விதிகள் தொடர்பில் கணிதரீதியான நிறுவல்களை வழங்கியதில் நியூட்டனுக்கும் பங்கு உண்டு.*

🍎 *வால்வெள்ளி போன்ற விண்பொருட்களின் சுற்றுப்பாதைகள் நீள்வட்டமாக மட்டுமின்றி, பரவளைவாகவும், அதிபரவளைவாகவும்கூட இருக்கலாம் எனவும் வாதித்து, மேற்படி விதிகளை விரிவாக்கினார்.*

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🙏 *க. ஜெய்சீலன்,* *அறிவியல் ஆசிரியர்,*
*நகராட்சி நடுநிலைப்   பள்ளி,        பெத்லேகம்-ஆம்பூர்,             வேலூர்-மாவட்டம்*
*📲செல்:8122121968*🙏
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎