தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்
▼
TEACHERS
▼
IMPORTANT LINKS
▼
TV LIVE
▼
ON LINE RADIO GARDEN
▼
STUDENTS ZONE
▼
UNIVERSITIES LINKS
▼
வியாழன், 1 பிப்ரவரி, 2018
கட்டளை கிராமத்தில்வானத்திலே திருவிழா நிகழ்ச்சி
மரக்காணம் வட்டாரம் கட்டளை கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், 152 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய சிறப்பு சந்திர கிரகணத்தை பிரத்யேக பைனாகுலர் மூலம் கண்டு களிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அரிய நிகழ்வு என்பதாலும், அறிவியல் ஆர்வலர்கள் மட்டுமல்லாது அனைவரும் ஆர்வத்தோடு எதிர்நோக்கிய நிகழ்வென்பதால்...மாணவர்களிடம் மறக்கவியலாத இனிமையான அனுபவம் மற்றும் அறிவியல் உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்நிகழ்வை மாணவர்களோடு சேர்ந்து கண்டுகளிப்பது சிறப்பான ஒன்றாக அமையும் என்ற எண்ணத்தில் கட்டளை கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.இரா.துளசி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி திருமதி. வி.பாரதி மற்றும் கிராம பொதுமக்கள் , மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வானியல் நிகழ்வை கண்டு களித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் திரு.ச.சுகதேவ் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தார்....