HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

திங்கள், 6 நவம்பர், 2017

தமிழக பள்ளி கலைத் திருவிழா / கலையருவித் திட்டம்....

மாணவர்களுக்கு இசை, நடனம், நாடகம், இலக்கியம், நுண்கலை & மொழித் திறனில் 150 க்கும் மேற்பட்ட கலை இனங்களில் ஆர்வத்தை வளர்க்கவும் வெளிப்படுத்தவும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
பள்ளியளவில் முதலிலும் ஒன்றிய அளவில் அடுத்ததாகவும்
நடைபெறும்.
போட்டிகளில் முதல் இடம் பெறுபவர் அடுத்த நிலைப் போட்டியில் பங்கு பெறலாம்.
மதிப்பெண்-தரம்-மதிப்பு
70% - A - 5
60% - B - 3
50% - C - 1
போட்டி பிரிவுகள் :
பிரிவு 1 > I - V
உட்பிரிவு 1> I - II
உட்பிரிவு 2> III -V
பிரிவு 2 > VI - VIII.
I -V வரை அனைத்துப் போட்டிகளும் பொதுவானவை. ஆண் பெண் பேதமில்லை.
VI-VIII சில போட்டிகள் ஆண், பெண் தனித்தனியாய் அமையும்.
முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும்
வழங்கிட வேண்டும். 
*உட்பிரிவு I-II போட்டிகள் :*
* ஒப்புவித்தல் (தமிழ்) - மழலையர் பாடல்
*கதை கூறுல்
* பழமொழிகள் கூறுதல்
* ஆத்திச்சூடி ஒப்பித்தல்
*வண்ணம் தீட்டுதல்
* Rhymes Recitation
*திருக்குறள் ஒப்பித்தல்
*மாறுவேட போட்டி
*அழகு கையெழுத்து
*Good Handwriting
*உட்பிரிவு III-V போட்டிகள் :*
*பேச்சுப்போட்டி
*கட்டுரைப் போட்டி
*நாட்டுப்புற நடனம்(குழு)
*பரதநாட்டியம் (குழு)
*வரைந்து வண்ணம் தீட்டுதல்
*மெல்லிசை - தனிப்பாடல்
*செவ்வியல் இசை - தனிப்பாடல்
*ஒருநபர் நாடகம்
*குழு நடனம் (7-9 நபர்)
தேசபக்திப் பாடல்கள்
*களிமண் பொம்மைகள்
*திருக்குறள் ஒப்பித்தல்
*மாறுவேட போட்டி
*அழகு கையெழுத்து
*Good Handwriting.
*இசை - நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, வயலின், Guitar, Clarinet, Saxaphone.... இன்னும் பிற
*பிரிவு VI -VIII போட்டிகள் :*
*கதை எழுதுதல்
*Story Writing
*கவிதை புனைதல்
*கும்மி நடனம் (ஆண்)
*தனிநடனம்
*குழு நடனம் (7-9நபர்)
*தேசபக்தி பாடல் (7-9நபர்) - குழுப்பாட்டு
*நாடகம் (10நபர் வரை)
*பேச்சுப்போட்டி (தமிழ்)
*பேச்சுப்போட்டி (English)
*கும்மியாட்டம் (பெண்)
*திருக்குறள் ஒப்பித்தல்
*நகைச்சுவை வழங்கல்
*Poem Recitation
*மெல்லிசை - தனிப்பாட்டு
*செவ்வியல் இசை -தனிப்பாட்டு
*கிராமிய நடனம் (7-9நபர்)
*பரதநாட்டியம் (தனி)
*பரதநாட்டியம் (குழு)
*இயற்கை காட்சி வரைதல்
*ஒருநபர் நாடகம்
*வில்லுப்பாட்டு (1+4)
*கதை சொல்லுதல்
*களிமண் சுதை வேலைப்பாடு
*செதுக்குசிற்பம் (காய்கறி/ சோப்பு/ மெழுகு/ சுண்ணக்கட்டி போன்ற பிற பொருட்களில்)
* இசை - இசை - நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, வயலின், Guitar, Clarinet, Saxaphone.... தவில் கச்சேரி, பேண்டு வாத்தியம், ஆர்கெஸ்டிரா இன்னும் பிற
போட்டிகள் மாணவர் பங்கேற்கும் அளவிலானதாக அமைந்தால் போதுமானது. திரைப்பட பாடல்கள் தவிர்க்கவும். பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் போன்றவை நல்லது.
நாடகங்களில் தெருக்கூத்து, சமூக நாடகங்கள், ஓரங்க நாடகம், மிமிக்ரி மற்றும் பிற வகைகளில் இருக்கலாம்.
முதலிடம் பெறும் குழுவோ தனிநபரோ அடுத்த நிலைப் போட்டிக்கு தகுதி பெறுவர்.
கலைவிழா ஒரு பொதுநிகழ்ச்சி. பெற்றோர் & சமூக பங்கேற்போடு ஆசிரியர் மாணவர் குழுவாக செயல்பட்டு இதனை சிறப்பாக நடத்த வேண்டும். கூட்டுப் பொறுப்பும் கூட்டுச் செயல்பாடும் கலைத்திருவிழாவை செழுமைப்படுத்தும்.
கலைகளை
அறிமுகப்படுத்துவோம்!திறமைகளை
வெளிப்படுத்துவோம்!
மாணவர்களை
மேம்படுத்துவோம்!