HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

திங்கள், 20 நவம்பர், 2017

அரசுப்பள்ளிகளைக் காப்போம் இயக்கத்தின் சார்பாக புனரமைத்த கீழக்கூடலூர் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி ஒப்படைப்பு விழா

அரசுப்பள்ளிகளைக் காப்போம் இயக்கத்தின் சார்பாக புனரமைத்த
கீழக்கூடலூர் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி ஒப்படைப்பு விழா நடைபெற்றது.



குழுவின் உறுப்பினர்திரு s.அழகேசன் EX.ARMY தலைமையுரையில் நம் நோக்கம் குறித்தும் மிக சுவாரஸ்யமாகவும் அருமையாகவும் பேசினார். பொறுப்புள்ள அந்த உரை அமைப்பின் அடையாளம்.


வாழ்த்துரை வழங்கிய.
.மு.ஆதவன் பத்திரிகையாளர்...அவர்கள்

எழுத்தாளர்.மோ கணேசன்.புதிய தலைமுறைக் கல்வி ,அவர்கள்

கோ.செந்தில்குமார்.திண்ணை பயிற்சிப்பள்ளி  ஒருங்கிணைப்பாளர் அவர்கள்
N.சிவக்குமார் மாவட்ட நன்னடத்தை அலுவலர்.தேனி அவர்கள்

A.மோகன் தலைமை ஆசிரியர்.அவர்கள்..அ.மே.நி.பள்ளி .
சில்வார்பட்டி.

M.மகேஷ் .தலைமைஆசிரியர் அவர்கள்
அ.மே.நி.பள்ளி. T.சுப்புலாபுரம்..
N.செந்தில் குமார் தலைமைஆசிரியர் அவர்கள்..அ.க.மே.நி.பள்ளி.முத்தையன் செட்டிபட்டி... உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும்,
தலைமையாசிரியர்களும்  நம் அடுதத்த கட்டத்திற்கான நம்பிக்கையை அதிகப்படுத்தினர்.

NSKP தலைமையாசிரியர் கதிரேசன் சார்.  வழக்கம் போல மிகச்சரியான நேரத்திற்கு வந்திருந்தார். நாம் நிகழ்ச்சியை தொடங்க  தாமதமானதால் ஒருமணிநேரம் காத்திருந்து விட்டு அங்கிருந்த நம் உறுப்பினர்களுகு வாழ்த்து சொல்லிவிடு கிளம்பினார்.



சிறப்புவிருந்தினர்
இயக்குனர் பிரபுசாலமன் உரை முகநூலில் பகிர்ந்திருந்தேன். மிகுந்த கவனத்திற்குறிய உரை. சிறப்பான ஊக்கம் கிடைத்தது எம் குழுவினருக்கு...எனக்கும் டி-ஸர்ட் கொடுங்கள் நானும் உங்களோடு இணைகிறேன் என்று இயக்குனர் பிரபு சாலமன் சொன்னது நம்பிக்கை வார்த்தைகள்....

ஒருபடி மேலேபோய் புதிய தலைமுறை உதவி ஆசிரியர் திரு மோ.கணேசன் அவர்கள் டி-சர்ட் பெற்றுக்கொண்டு அடுத்தபள்ளிப் பணிக்கு எனது முன் பங்களிப்பு என்று 500 ரூபாயை வழங்கித் துவக்கிவிட்டார் அடுத்த பள்ளிப் பணியை அவரின் பேச்சு எங்களின் பணியை அர்த்தப்படுத்தியது என்றே எண்ணுகிறேன்.....

இதையெல்லாம்  யூ டியூப்பில் பதிவேற்ற உள்ளேன் உங்கள் பார்வைக்காக...

நன்கொடையாளர்கள் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு பொன்னாடை போர்த்தியதில்.. நன்றி தெரிவிப்பில்
விடுபடுதல் இருந்திருக்கலாம் அவற்றை எங்கள் ஊர்மக்களும் நண்பர்களும் மன்னித்திருப்பர் என்றே நினைக்கிறேன்... ஒருங்கிணைப்பில்  பலப்படுத்த வேண்டியவற்றை உணர்ந்து செயலாற்றுவோம் என்பதை பதிவு செய்து கொண்டு ,அடுத்தடுத்த நிகழ்வுகள் திட்டமிடலில்,  நிதி பற்றாக்குறை சரிசெய்தலில் நீங்களும் இணைந்தால் முற்றிலும் நிறைவான விழா அமையும்.

மற்றபடி மனம்நிறைந்த நன்றிகளுடன் எங்கள் குழு உறுப்பனர்கள் சார்பாக.....


இராஜசேகரன்...
அரசுபள்ளிகளைக் காப்போம் இயக்கம்.