தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்
▼
TEACHERS
▼
IMPORTANT LINKS
▼
TV LIVE
▼
ON LINE RADIO GARDEN
▼
STUDENTS ZONE
▼
UNIVERSITIES LINKS
▼
சனி, 18 நவம்பர், 2017
குழந்தைகள் தின கவிதை
*கொண்டாடுங்கள் குழந்தைகளை*
குழலினும் யாழினும் இசையாவினும் மேலென மழலைமொழி இனிப்பென நவின்றான் நம் முப்பால்தாத்ன சிறுதளிர்கள் மென்மலர்கள் குட்டி பிரம்மாக்கள் மகிழ்நிலாக்கள் உயிர்மகிழ்ச்சிகள் குழந்தைகள்
உங்கள் அதட்டல்களில் ஓர் அப்துல்கலாம் பொசுங்கி விடலாம் உங்கள் அச்சுறுத்தலில் புதிய சிந்தனையாளன் கருக்கலைக்கப்படலாம் உங்கள் பயமுறுத்தலில் ஒரு தத்துவஞானி தவறிப்போகலாம்..
பள்ளியில் பாடங்களோடு பாசத்தின் மேன்மையை உணர்த்துங்கள். நெறிபிறழ்நடத்தைகளின் ஊற்றுக்கண் நம்மிலிருந்தும் கூட தொடங்க நேரலாம்.
வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகளில் வலியேற்றாதீர் மாலை நேர மணியடிப்பில் மட்டுமே நாளதுவரை குதூகலிக்கின்றன குழந்தைகள்..
அவர்களைப் பொறுத்தமட்டில் பள்ளிக்கூடங்கள் காலைநேரச்சிறைகள்.. மாற்றப்பட வேண்டியது புதுமைபெற வேண்டியது பாடதிட்டங்களோ கல்விமுறையோ இல்லை கையாளும் நம் மனநிலையும் இந்த சமூக நிலையும் தான்
கற்றலில் இனிமை பூசுவோம் ஏனென்றால் நம்முன் இருப்பது மதிப்பெண் இயந்திரங்கள் அல்ல.. மனசுள்ள குழந்தைகள்