HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வியாழன், 19 அக்டோபர், 2017

TET & TNPSC தேர்வுக்கு 3-4 வருடங்கள் படித்தாலும் ஏன் சிலரால் தேர்ச்சி பெற முடிவதில்லை? - TIPS!!!


TET Exam & TNPSC Exam - How to Study without Tired - Tips

TNPSC தேர்வுக்கு ஒரு மாணவன் அல்லது மாணவி, பல வருடங்கள் படித்தாலும் ஏன் தேர்ச்சி பெற முடிவதில்லை?.
- A COMPLETE ANALYSIS.
Thanks to: Gkanthakumar GK

#ஒரு  ஆசிரியரின்  பார்வையில் மாணவர்களின் மாபெரும்தவறுகள் :
பயிற்சி மையங்களில் ஏன் தேர்ச்சி விகிதம் 10% குறைவாக இருக்கிறது?
ஒருவருக்கே ஏன் பல வேலை கிடைக்கிறது ஆனால பல வருடம் படிக்கும் ஒரு மாணவன் ஏன் ஒரு தேர்வில் கூட வெற்றி பெறுவதில்லை ?
நான் விரைவில் வெற்றி பெற்று விட்டேன் என் நண்பர்கள் ஏன் அதே புத்தகத்தை படித்தும் வெற்றி பெற முடியவில்லை போன்ற கேள்விகள் என்னிடம் எப்பொழுதும் எழுவதுண்டு.
வேலைக்கு சென்று 10 வருடம் ஆகிவிட்டது சமுகத்திற்கு ஏதாவது செய்வோம் என பீகாரின் ஆனந்து அவர்களின் சூப்பர் 30 போன்று 2 பேருடன் ஆரம்பித்த எனது அமைப்பில், நான் இரண்டு வருடம் தீவிர பயிற்சி அளித்தும் (லாப நோக்கமின்றி) 30 மாணவர்களில் 17 பேர் மட்டும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மற்றவர்கள் ஏன் தோல்வி அடைந்தனர்?
என் மாணவர்கள் செய்த தவறுகள் என்ன?
4 வருடங்கள் நான் பயிற்சி கொடுத்த சில பயிற்சி மையங்களில் கிடைத்த அனுபவம் போன்றவற்றை துணை கொண்டு நான் ஆராய்ச்சி செய்த பொழுது கிடைத்த முடிவுகளே என்னை இந்த கட்டுரையை எழுத துண்டியது.
#1  தன்னம்பிக்கை  இல்லாதது:
TNPSC போன்ற போட்டி தேர்வுகளில் பாஸாக வேண்டுமானால் ஒரு மாணவனுக்கு இருக்கு வேண்டிய முதல் தகுதி தன்னம்பிக்கை.
என்ன தான் திறமையுடையவர்களாக இருந்தாலும் தன்னம்பிக்கை இல்லாதவர் தோல்வியையே தழுவ வேண்டி இருக்கும்.
தன்னம்பிக்கை உள்ளவர் எவரும் எந்த ஒரு இடர்பாட்டையும் எளிதில் சமாளித்து தேர்வில் வெற்றி பெற்று விடுவார்.
#2.  பயிற்சி மையத்தை மட்டுமே முழுமையாக நம்புவது:
சரியான பயிற்சி மையம் மட்டும் அமைந்து விட்டால் எந்த ஒரு சராசரி மாணவனும் அதிகபட்சம் இரண்டு வருடங்களில் கட்டாயம் பாஸ் பண்ணிவிட முடியும் , அனால் தற்பொழுது பயிற்சி மையங்களை விட வியாபார மையங்களே அதிகம் உள்ளது, வணிக நோக்கில் தான் எல்லா பயிற்சி மையங்களும் செயல்பட்டாலும் சரியான வழிகாட்டும் பயிற்சி மையங்களை தேர்ந்தெடுத்து விட்டால் உங்களின் வேலை பாதியாக குறைந்துவிடும் .
பயிற்சி மையங்களை நம்பி மாணவர்கள் எவ்வாறு ஏமாறுகிறார்கள் என்பதற்கு சில உதாரணங்கள்
a.அளவுக்கு அதிகமான விளம்பரங்கள்
b.தேர்ச்சி பெற்றவர்களை விட அதிக மாணவர்களை பாஸானதாக காட்டுவது
c.விளம்பரத்தை பார்த்து ஏமாறுவது
d.சென்ற தேர்வில் எங்கள் மேட்டிரியகளில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது என விளம்பரபடுத்துவது
e.அதிகமாக நோட்ஸ் எழுத வைக்கும் பயிற்சி மையாங்கள்
f.தேர்ச்சி விகிதத்தை % பார்க்காமல் எண்ணிக்கையை பார்த்து சேர்வது
g. கும்பல் அதிக உள்ள பயிற்சி மையம் தரமமனது என நினைப்பது.
ஒரே வகுப்பில் 200 TO 400 பேருக்கு பாடம் நடத்துவது கட்டாயம் மாணவர்களுக்கு எந்த ஒரு பயனும் இருக்காது
மீன்டும் சொல்கிறேன் பயிற்சி மையம் 20-30% உதவிதான் செய்ய முடியும் , நீங்கள் தான் படிக்க வேண்டும் , பயிற்சி மையம் செல்லாமலும் பாஸானவர்கள் பலர் உண்டு .
ஆனால் அவர்களுக்கு வழி காட்டுதல் சரியாக இருந்து இருக்கும்.
#3.  நோட்சுகளை  மட்டும்  நம்புவது:
புத்தக சேகரிப்பில் இறங்கி விடுவது.
என்னால் "மெட்டிரியல் மெண்டல்கள்" என செல்லமாக நான் குறிப்பிடும் இவர்கள் முக்கிய வேலையே படிக்க பல பயிற்சி மையங்களின் notes சேகரிக்கிறேன் என்ற பெயரில் படிப்பை மறந்து book சேகரிப்பில் இறங்கி விடுவது தான்.
இவர்களின் பார்வையில் அதிக மெட்டிரியல் / புத்தகங்கள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என நம்புகிறவர்கள் but my view is More luggage less comport .
#4.  பயிற்சி  மையத்தில்  சென்று  விட்டாலே வேலை கிடைத்துவிடும்  என  நம்புவது.
பயிற்சி மையம் சென்று விட்டாலே வேலை கிடைத்து விடும் என நம்பும் மாணவர்கள் பலர் உள்ளனர்.
நான் ஒரு முறை பஸ்ஸில் செல்லும் பொழுது ஒரு மாணவரிடம் பேச்சு கொடுக்க நேர்ந்தது அப்பொழுது அவர் ஒரு பிரபல பயிற்சி மையத்தில் 4 வருடமாக படித்து வருவதாகவும் ஆனாலும் இன்னும் தேர்ச்சி பெற முடியவில்லை எனவும் அதனால் வேறு எந்த வேலைக்கு செல்லாமல் மீண்டும் மீண்டும் அதே பயிற்சி மையம் சென்று படித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் உண்மை என்ன வென்றால் இன்று உள்ள போட்டி நிலையில் குறைந்தது 9 மாதம் முதல் 1 வருடம் தீவிரமாக படித்தால் நிச்சயம் வேலைகிடைத்து விடும்.
தேர்வு அறிவிப்பு வந்தவுடன் பயிற்சி மையம் சென்றால் பெரும்பாலும் தோல்விதான் வரும் என்பதை உணர மாணவர்கள் மறுக்கிறார்கள்.
#5.  Over   confidence
140 எடுத்து விட்டோம் அடுத்த தேர்வில் வெற்றி உறுதி என நம்பி அடுத்த தேர்விலும் தோல்வி அடைவது சீனியர் மாணவர்கள் செய்யும் மிக பெரிய தவறு ஆகும்.
அதற்கு காரணம் over confidence ஆகும் . வேலைக்கு செல்லும் வரை ஒரு மாணவன் படித்து கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுது தான் cut off க்கு அருகில் வந்து தோல்வியை தழுவும் அவலம் நேராது.
ஒரு தோல்வி ஒரு வருடத்தை வீண் செய்து விடும்.

#6.  படித்து  கொண்டே   வேலைக்கு  செல்வது
ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் பயணக்க முயற்சி செய்வது உடனடி வெற்றிக்கு உதவாது.
சிலரது குடும்ப சூழ் நிலை வேலைக்கு சென்றே ஆக வேண்டும் ஆனால் நல்ல நிலையில் உள்ள பலரும் வேலைக்கு சென்று கொண்டே படிக்கிறார்கள்.
அதனால் அவர்களால் வெற்றி பெற முடிவதில்லை வருடம் 5000*12=60000 ஆசைப்பட்டு கொண்டு அரசு வேலையில் கிடைக்கும் 16000*12= 192000 இழந்து விடுகிறார்கள்.
வேலைக்கு சென்று கொண்டே படித்து வெற்றி பெற்ற கதைகள் பல உண்டு ஆனால் அதற்கு மிக பெரிய மன உறுதி வேண்டும். தியாகம் செய்யாமல் எதுவும் கிடைக்காது
#7.  புரிந்து  படிக்காதது 
மனப்பாடம் செய்ய முயல்வது
புரிந்து படித்து விட்டால் மனப்பாடத்திற்கு அவசியம் இல்லை மேலும் கேள்விகள் எந்த முறையில் வந்தாலும் விடை அளித்து விடலாம்.
இது தெரியாமல் சிலர் நாள் முழுவதும் படித்தால் தான் வெற்றி பெற முடியும் என நினைத்து கொண்டு புத்தகமே கதியாக கிடக்கின்றனர் அது தவறு.
ஒரு தேர்வில் வெற்றி பெற நிலையாக 7 மணி நேர படிப்பே போதுமானது .
#8.  தமிழுக்கு  கொடுக்கும்முக்கியத்துவத்தை  பொது  அறிவுக்கு    கொடுக்க  மறுப்பது.
தமிழுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை பொது அறிவுக்கு கொடுக்க மறுப்பது.
உங்களின் வெற்றியை/ வாங்கும் ரேங்கை குறைத்து விடும் , இதில் சென்னையை தவிர வெளி மாவட்டங்களில் உள்ள பயிற்சி மையங்களும் ஒரு காரணம் என கூறலாம்.
நடந்து முடிந்த குருப் 4 தேர்வே நல்ல உதாரணம் இதில் தமிழில் அனைவரும் 85-90 வரை எடுத்து உள்ளனர் அனால் பொது அறிவு பாடத்தில் பழைய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து உள்ளதை வைத்து அறிந்து கொள்ளலாம்.
தமிழை எவர் உதவி இன்றி குறிகிய காலத்தில் படித்து விடலாம் ஆனால் மற்றவை குறுகிய காலத்தில் படிக்க முடியாது.
#9.  தேடல்   இல்லாதது..
Knowledge is power தேடல் என்பது பலருடன் பேசி, web search தேர்வு பற்றி பல புதிய விபரங்களை அறிந்து கொள்வது தேடல் நிறைய தகவல்களை அளிக்கும்.
நேரத்தை மிச்சபடுத்தும் வெற்றியின் வேகத்தை அதிகரிக்கும்
#10.  தேர்வானவர்களின் தொடர்பில் இல்லாது இருப்பது:
Where we are where they are என தெரிந்து கொள்ள கட்டாயம் மற்ற பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் தேர்வான சீனியர் மாணவர்கள் தொடர்பில் இருப்பது அவசியம்.
அப்பொழுது தான் தம்முடைய தவறுகளும், திறமைகளும் தெரிய வரும்.
#11.  காதல்
சிலர் காதலித்து கொண்டு தங்கள் கடமையை மறப்பது.
இவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் திறமையான மாணவர்கள் அல்லது மாணவிகளின் படிப்பை பாழ் செய்து விடுகிறது.
காதலை உங்களை ஊக்குவிக்கும் சக்தியாக நினைப்பதும், மாறாக நினைவிழக்கச் செய்யும் போதையாக நினைப்பதும் உங்கள் கையில் தான் உள்ளது.
#12.  சொல்  பேச்சை   கேட்காதது:
நல்ல அறிவுரைகளை ஆசிரியர் கூறினாலும் கேட்க மறுப்பது நண்பர்கள் சொன்னாலும் கேட்க மறுப்பது மற்றொரு குறை ஆகும்
#13.  Face  Bookக்கே   கதியாக  கிடப்பது
முக நூல் நல்ல விஷயம் தான் ஆனால் face book கதியாக கிடப்பது உங்கள் வெற்றிக்கு எந்த வகையிலும் உதவாது.
வெற்றியை தாமதபடுத்தும் . ஒரு மாணவனுக்கு நான் அறிவுறை கூறிய பொழுது அவர் சார் நீங்களும் எப்பொழுது பார்த்தாலும் face book இருக்கிங்க என எதிர் கேள்வி கேட்டார்.
அதற்கு நான் நான் வேலைக்கு சென்று 11 வருடம் ஆகிவிட்டது எனக்கு இனி படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றேன்.
பின்னர் VAO முடிவு வந்தபின் சார் நிங்க சொன்னது சரிதான் என மன்னிப்பு கேட்டார்.
ஒரு மாணவன் அல்லது மாணவி, நாள் ஒன்றிற்கு 15 நிமிடத்திற்கு மேல் face book பார்க்க கூடாது.
முகநூல் சிந்திக்கும் திறனை குறைக்கிறது என்பது உண்மை.
#14.  பொழுதுபோக்குக்கு  முக்கியத்தும்  கொடுப்பது:
நன்றாக படிக்க பொழுதுபோக்கு தேவை.
ஆனால் பொழுதுபோக்கே வாழ்க்கை அல்ல ஒரு வேலைக்கு செல்லும் வரை பொழுது போக்கை குறைத்து கொள்ள வேண்டும்.
அல்லது படிப்பு சார்ந்த பொழுதுபோக்குகளைக் கண்டறியலாம்.
#15.  தேர்வு  வந்தவுடன்  மட்டும்  படிப்பது..
தேர்வு அறிவிப்புகள் தற்பொழுது 90 நாள் அவகாசம் கொடுப்பதால் தேர்வு அறிவிப்பு வந்தவுடம் படிக்க ஆரம்பிப்பது உங்களுக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாது.
வேலைக்கு செல்லும் வரை தொடர்ச்சியான தயாரிப்பில் இருக்க வேண்டும், இது மிகவும் முக்கியம்.
#16.  பேப்பர்   படிக்காதது.
பேப்பர் மட்டும் தினசரி படித்து விட்டால் current affairs தனியாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை
இந்த தவறுகளை மட்டும் சரி செய்துவிட்டால் வெற்றி நிச்சயம்.
(வரும் சனி, தனியார் ஸ்டடி மெட்டீரியல்கள் வெற்றியை தீர்மானிக்கின்றனவா? என்பது பற்றி பார்ப்போம்.)
நன்றி.
அன்புள்ள
அஜி
சென்னை.