HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

பள்ளிகளில் தூய்மை விழிப்பு உணர்வு பிரசாரம்!

நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் வரை தூய்மை விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
‘இந்தத் திட்டத்தில் மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியர்களும் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். தூய்மை குறித்த நிகழ்ச்சிகள், பேரணிகள் ஆகியவற்றை நடத்தி விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ‘மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்துக்குப் பள்ளிகளும், கல்வி நிறுவனங்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதுகுறித்து தங்கள் பள்ளிக்கு அருகாமையில் உள்ள மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு விழிப்பு உணர்வு ஏற்படுத்த பேரணி மற்றும் பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்தலாம். தங்கள் பள்ளிகளில் நிகழ்த்திய பிரசாரம் மற்றும் தூய்மை நடவடிக்கைகள் குறித்த புகைப்படங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில், பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் சுகாதாரம் குறித்த தரநிலைகள் மதிப்பிடப்படும். பள்ளிகளுக்கு தரவரிசையும் வழங்கப்படும்’ என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “மாநில அரசுகளின் கல்வி அமைச்சர்கள், கல்வித்துறை அதிகாரிகள் தூய்மை குறித்த விழிப்பு உணர்வை இரண்டு வாரங்களுக்குள் நடத்த வேண்டும். ஓர் உணர்வுடன் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்” எனத் தெரிவித்தார்.