HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

செவ்வாய், 18 ஜூலை, 2017

" ஏகலைவர்கள் இப்போதும் இருக்கின்றார்கள்... அரசுப் பள்ளிகளில்...."

Writing and  Reading  of phonetics of English alphabets by first standard student k.kaviya...in one month...
   " ஏகலைவர்கள் இப்போதும் இருக்கின்றார்கள்...
     எங்கள் அரசுப் பள்ளிகளில்...."
  
      அரசுப் பள்ளிகளுக்கும் , தனியார் பள்ளிகளுக்கும் அமைப்பு ரீதியாக இருக்கக் கூடிய வேறுபாடுகளில் ஒன்று...
      தனியார் பள்ளிகள் சமூகத்தில் ஒரு நிறுவனம்... அரசுப் பள்ளிகள் சமூகத்தின் ஒரு அங்கம்...எனவே இப்பதிவு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையேயான வேறுபாடுகளை அலசி ஆராயும் ஒன்றெனக் கருதலாகாது....
           அமைப்பு ரீதியாக இருக்கக் கூடிய இத்தகைய வேறுபாட்டின் விளைவாக...அரசுப் பள்ளிகள் சமூகத்தின் ஒரு அங்கமாக, உறவாக இருக்கக் கூடிய தன்மையினால்...மாணவர்களின் கல்வி நலன் மற்றும் திறன் சார்ந்து ஏற்படக்கூடிய ஆக்கப்பூர்வமான விளைவு சார்ந்த ஓர் நிகழ்வின் பதிவு இது....
              சமூகத்தின் ஓர் அங்கமாக இருத்தலால் ...சமூகத்தின்பால் அக்கறை கொண்டதாக, சமூகத்தோடு நலன் சார்ந்து இசைந்து போகிற தன்மை அரசுப் பள்ளிகளுக்கு உண்டு....இதன் நேரிடை விளைவாய்... பெயர் சேர்க்காத , ஐந்து வயது பூர்த்தியாகாத குழந்தை கூட நமது பள்ளிகளில்... தமது அக்கா அல்லது அண்னணோடு வகுப்பறைகளில் நம்மோடு பயணிப்பது என்பது அரசுப் பள்ளிகளில் மட்டுமே காணக்கூடிய ஒரு நிலையாகும்....
           அவ்வாறு ஐந்து வயதிற்கு முன்பே வகுப்பிற்கு வந்து....நம்மோடு கலந்து....பயணிக்கும் குழந்தை...நமக்கென்று சில ஆச்சரியங்களை... அதன் விளைவாக நமக்கென்று நல்ல அனுபவங்களை தருவதை ....பல ஆசிரியர்கள் தம் பணிக்காலத்தில் கடந்து வந்திருப்பர்....இதைப் படிக்கும் இந்த நேரத்தில் அத்தகைய மகிழ்ச்சியான நினைவுகளை ...நினைத்து பார்ப்பதென்பது தவிர்க்க இயலாத ஒன்று...
        என்னுடைய வகுப்பில் தற்போது  ஒன்றாம் வகுப்பு பயிலும் க.காவ்யா என்னும் குழந்தை ....மேற்கூறியது போலவே சென்ற ஆண்டு நான்கு வயதில் என் வகுப்பில் வரத்தொடங்கியது....மற்ற மாணவர்களோடு விருப்பத்தின் பேரில் படிப்பது....கீழ்மட்டக் கரும்பலகையில் கிறுக்குவது என்று சுதந்திரமாக இருந்தது....பிப்ரவரி மாத அளவில் இரண்டு குறிப்பேடுகளை தந்து எனக்கும் வீட்டுப்பாடம் எழுதிக் கொடுங்கள் என்று கேட்டு கொஞ்சம் அதிர்ச்சி தந்தது....
            அந்த அதிர்ச்சியின் தொடர்ச்சியாக .....சென்ற வருடத்தின் பார்த்தல் , கேட்டல் மற்றும் மூன்று மாத வீட்டுப்பாடத்தின் கிறுக்கல் அனுபவங்கள் .....இந்த கல்வியாண்டின் கடந்த ஒரு மாதத்தில் பட்டை தீட்டப்பட்டதன் விளைவு யாதென நான் மகிழ்ந்தவாறு ...நீங்களும் கண்டு மகிழ ...சிறு காணொளி ஒன்று உங்கள் பார்வைக்கு....
ஊ ஒ ந நி பள்ளி
கட்டளை
மரக்காணம் ஒன்றியம்
விழுப்புரம் மாவட்டம்...