HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

புதன், 26 ஜூலை, 2017

இணைய வழியில் , ஆண்ட்ராய்டு செயலி மூலம் அறிவியல் விழிப்புணர்வு திறனறிதல் தேர்வு...

வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் –
அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு
இணைய வழியில் , ஆண்ட்ராய்டு செயலி மூலம் அறிவியல் விழிப்புணர்வு திறனறிதல் தேர்வு

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி,இ,ஆர்,டி ( NCERT, GOVT.OF INDIA) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியலில் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு இந்தியா முழுவதும் ஒரே நாளில் இணையவழியில் இவ்வருடம் முதல் நடைபெற உள்ளது. ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி மூலம் தேர்வுகளை எழுதலாம்.
இத்தேர்வில் பங்கேற்க..
1)   6 முதல் 11 வகுப்பு  வரை உள்ள மாணாக்கர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம்.
2)   தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும்.
3)   தேர்வானது 6 முதல் 8 வரை ஒரு பிரிவாகவும், 9முதல் 11 வரை இரண்டாவது பிரிவாகவும் நடைபெறும்
விண்ணப்பிக்கும் முறை:
Ø  பள்ளி வழியாக  இணையதளம் மூலம்  மட்டுமே விண்ணப்பிக்க முடியும். www.vvm.org.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
Ø  தேர்வுக்கட்டணம் ரூ.100 
Ø  தமிழ் , ஆங்கிலம் என எந்த மொழியில் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.
Ø  பள்ளி வழியாக தேர்வு எழுத முடியாதவர்கள் தனித்தேர்வர்களாக எழுத விருப்பம் உள்ளவர்கள் 9942467764 என்ற வாட்சப் எண்ணிலும் மற்றும் vvmtamilnadu@gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

நடைபெறும் முறை:
Ø  தேர்வு இணையவழியில் நடைபெறும் ஸ்மார்ட் போன், டேப்லட், மடிக்கணினி ஆகியவற்றை பயன்படுத்தி தேர்வு எழுதலாம்.
Ø  மாணாக்கர்களிடம் அவர்களது பெற்றோர்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால் போதுமானது. VVM செயலி மூலம் தேர்வு எழுதலாம்.
Ø  மாணாக்கர்கள் அந்தந்த பள்ளியிலேயே தேர்வு எழுதலாம்.
Ø  தேர்வுக்கு முன்னர் 5 க்கும் மேற்பட்ட மாதிரித் தேர்வுகள் நடைபெறும். மாணாக்கர்கள் வார இறுதி நாட்களில் அவற்றை எழுதி பார்க்கலாம்.

பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்:
பள்ளி அளவில்:
பள்ளியில் ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 10 மாணாக்கர்கள் பங்கேற்றால் வகுப்பிற்கு 3 மாணாக்கர்களுக்கு பள்ளி அளவிலான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மாவட்ட அளவில்:
மாவட்ட அளவில் (6 முதல் 11 ம் வகுப்புவரை ) ஒவ்வொரு வகுப்பிற்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
Ø  அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
Ø  , மாவட்ட மண்டல அளவில் அருகில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு  அழைத்துச் செல்லப்படுவர்.
மாநில அளவில்:
மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவர். அத்தேர்வு செயல்முறை வடிவில் அமைந்து இருக்கும்.
Ø  இதில் தேர்வு செய்யப்படும் 120 மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும்.
Ø  120 மாணாக்கர்களில் வகுப்பிற்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு
ரொக்கப்பரிசாக முறையே ரூ.5000, ரூ.3000, ரூ,2000 வழங்கப்படும்.
.
Ø  தேசிய அளவிலான ஒரு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாநில அளவில் தேர்வு பெறும் மாணாக்கர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.
தேசிய அளவில்:
Ø  ஒவ்வொரு வகுப்பிலும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை) முதல் 2 இடங்களை பெறும் மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான முகாமிற்கு அழைக்கப்படுவார்கள்.
Ø  தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும்.
Ø  தேசிய அளவிலான முகாமில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் பங்கேற்பர். அதில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை ) 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் முதல் , இரண்டாம், மூன்றாம் இடம் பெறும் மாணாக்கர்களுக்கு முறையே ரூ.25000, ரூ.15000, ரூ.10000 ரொக்கப்பரிசு வழங்கபபடும்.
Ø  மண்டல அளவிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக செய்த மாணாக்கர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ,2000 என ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
Ø  இவர்கள் தேசிய அளவிலான ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர்.
Ø  அனைத்து மாணாக்கர்களும் ஒவ்வொரு விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைக்கப்பட்டு அவர்கள் படிக்க , கருத்துக்களை தெரிந்து கொள்ள வழிகாட்டப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
விண்ணப்பிக்க கடைசி தேதி:  20-09-2017.(செப்டம்பர் 20,2017)
தேர்வு நடைபெறும் நாள்   :   26-11-2017 ( நவம்பர் 26, 2017)
குறிப்புகள்:
மேலும் தகவல்களுக்கு  www.vvm.org.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
கு.கண்ணபிரான்
மாநில ஒருங்கிணைப்பாளர்
வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்
செல்: 8778201926,9942467764
Email : vvmtamilnadu@gmail.com