HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

சனி, 15 ஜூலை, 2017

ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு.


ஆசிரியர் தேர்வு வாரியம்

குறிப்பாணை எண். 306 /TET /2017 நாள் 11.07.2017


பொருள் : ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு.

 பார்வை: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2017 தாள்-II தேர்வு நாள் 30.04.2017

1.30.04.2017 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2017 ல் தேர்ச்சி பெற்ற கீழ்க்கண்ட தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுகின்றனர்.
குறிப்பாணை தேர்வரால் சான்றிதழ் சரிபார்த்தலின்போது கண்டிப்பாக சமர்ப்பித்தல் வேண்டும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுய விவரப் படிவம் மற்றும் ஆளறிச்சான்றிதழ் படிவம் ஆகியவைகளை பூர்த்தி செய்து புகைப்படம் ஒட்டி இரு நகல்களில் கொண்டுவரவேண்டும். ஆளறிச்சான்றிதழில் புகைப்படம் மற்றும் கையெழுத்து, அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரால் மேலொப்பம் (attested) செய்யப்பட்டிருக்கவேண்டும்.

2.கீழ்க்கண்ட அசல் சான்றிதழ் / ஆவணங்கள் மற்றும் சுய மேலொப்பம் (Self attested) செய்யப்பட்ட இரண்டு ஒளிநகல்கள் (Photocopy).

i.பள்ளி இறுதிச் சான்றிதழ் (SSLC Book / Mark Sheet).

ii.PUC / மேல்நிலைக்கல்வி (+2) மதிப்பெண் பட்டியல் / 3 ஆண்டு பட்டயப்படிப்பு (3 years Diploma Course).

iii.இளங்கலைப்பட்டம் (B.A., B.Sc.,/B.Lit.,).

iv.இளங்கலைப்பட்டம் மதிப்பெண் சான்றிதழ்கள் (UG Degree Mark Statement for all semesters) மற்றும் இளங்கலைப்பட்டம் தொகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (Consolidated Mark Statement).

v.இடைநிலை ஆசிரியர் பட்டயச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் (D.T.Ed.,/D.E.Ed.) (தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும்).

vi.கிரேடு / கிரேடு புள்ளிகள் உள்ள மதிப்பெண் சான்றிதழ்களுக்கு ஆதாரமாக பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கிரேடிற்கு இணையான மதிப்பெண் விவரப்பட்டியல்கள் இணைக்கப்படவேண்டும்.

vii.தொழிற்கல்விப் (கல்வியியல்) பட்டம் பி.எட்., / தமிழ்ப்புலவர் பயிற்சி (TPT) / சிறப்புக் கல்வியியல் பட்டம் (Special B.Ed.).

viii.கல்வியியல் பட்டம் / சிறப்புக் கல்வியியல் பட்டம் / தமிழ்ப்புலவர் தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ்கள்.

ix.தமிழ்வழியில் ஒதுக்கீடு கோருபவர் U.G.degree, B.Ed., / Spl B.Ed / D.T.Ed., படிப்பினை தமிழில் பயின்றதற்கான ஆதாரம், அதிகாரம் பெற்ற அலுவலரால் (பயின்ற கல்வி நிறுவன முதல்வரிடமிருந்து சான்று) பெறப்பட வேண்டும்.

x.இனச்சான்றிதழ் (Community Certificate) (1. நிரந்தர சான்றிதழாக இருத்தல் வேண்டும். 2. திருமணமான பெண்கள் அவர்களது தந்தையின் பெயரில் பெறப்பட்ட இனச்சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும்).

xi.நன்னடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate).

xii.மாற்றுத் திறனாளிகள் எனில் உரிய சான்றிதழ் (அரசு மருத்துவக்குழுவினரால் வழங்கப்பட்ட சான்றிதழ்).

3.அசல் சான்றிதழ்கள் ஒரு பகுதியாகவும், இரு ஒளிநகல்கள் படிவங்கள் ஒரு பகுதியாகவும் மேற்குறிப்பிட்ட வரிசையில் அடுக்கிக்கொண்டுவரவேண்டும்.

4.சான்றிதழ் சரிபார்த்தல் அன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அத்தேதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் எந்த ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

5.ஆசிரியர் தேர்வு வாரிய நடைமுறை விதிகளின்படி, இந்த சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுவதும், அதில் கலந்துகொள்வதும், வேலை வாய்ப்பிற்கு உத்தரவாதமாக அமையாது.

6.பணிநாடுநர் குறிப்பிட்ட நேரம் / தேதியில் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு வரவில்லையானால் அவருக்கு மீளவும்வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

7.பணிநாடுநரின் தகுதி (Eligibility) பற்றி, ஆசிரியர் தேர்வு வாரியம் எடுக்கும் முடிவே இறுதியான முடிவாகும்.

8.சான்றிதழ் சரிபார்த்தலுக்காக வருகைபுரியும் பணிநாடுநருக்கு இவ்வாரியத்தால் பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.