HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வியாழன், 22 ஜூன், 2017

கொண்டாட்டம்! சர்வதேச யோகா நாடு முழுவதும் கோலாகலம் கொட்டும் மழையில் ஆசனம்: மோடி அசத்தல்...

புதுடில்லி: மூன்றாவது சர்வதேச யோகா தினம், நாடு முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப் பட்டது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், கொட்டும் மழையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 51 ஆயிரம் பேர் பங்கேற்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாடு முழுவதும், பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில், மக்கள் உற்சாகமாக பங்கேற்று, யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.


மத்திய அரசின் முயற்சியை ஏற்று, 'ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும்' என, ஐ.நா., சபை அறிவித்தது. அதன்படி, 2015 முதல், சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மூன்றாவது சர்வதேச யோகா தினம், நேற்று நாடு முழுவதும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள உத்தர பிரதேசத்தின் லக்னோ வில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

மாநில கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உட்பட, 51 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


நாடுகள் இணைப்பு


யோகா தின நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பல்வேறு நாட்டு மக்களுக்கு, நம் மொழி, கலா சாரம், பாரம்பரியம் பற்றி தெரியாது. ஆனால், யோகா என்ற அற்புத கலையின் மூலம், தற் போது உலக நாடுகள், இந்தியாவுடன் இணைந்துள்ளன. யோகா பயிற்சிகள், நம் உடல், மனம், ஆன்மாவை இணைக்கிறது; 
தற்போது, உலக நாடுகளையும் இணைத்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார். டில்லி யிலும்,அதிகாலையில் மழைபெய்த போதும், கன்னாட் பிளேஸ்,இந்தியா கேட் உள்ளிட்ட இடங்களில் நடந்த யோகா நிகழ்ச்சிகளில், மக்கள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில்,50 ஆயிரம் பேர், கன்னாட் பிளேசில், 10 ஆயிரம் பேர் என, டில்லியில் நடந்த நிகழ்ச்சிகளில், 77 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, விஜய் கோயல், டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.,வின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் கன்னாட் பிளேசில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் லடாக்கில், உறைபனி யில், இந்திய ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி செய்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும், சர்வதேச யோகா தினத்தையொட்டி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


விழா துளிகள்


* லக்னோவில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிகழ்ச்சியின்போது, திடீரென மழை பெய்தது. ஆனாலும், அதை பொருட்படுத்தாது, பிரதமரும், மக்களும் யோகா பயிற்சியை தொடர்ந்தனர்
* ஆனால், திடீரென மழை வலுக்கத் துவங்கியதால், அதில் இருந்து தப்பிக்க, 'யோகா மேட்'டை தலைக்கு வைத்துக் கொண்டனர்
* 'யோகா வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மட்டும் நாம் உலகுக்கு உணர்த்தவில்லை. யோகா மேட், மழையில் இருந்து எப்படி நம்மை காக்கிறது என்பதையும் உணர்த்தியுள்ளோம்' என, பிரதமர் மோடி, நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்
* லக்னோவில் நிகழ்ச்சியை துவக்கி வைத்த பிரதமர் மோடி, மாணவ, மாணவியருடன் இணைந்து, 45 நிமிடங்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்
* நிகழ்ச்சிகள் முடிந்த பின், மாணவ, மாணவியர் உள்ளிட்டோருடன் கைகுலுக்கி வாழ்த்து கூறினார் மோடி.


3 லட்சம் பேருடன் உலக சாதனை


குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், யோகா குரு ராம்தேவ் தலைமையில் நிகழ்ச்சி களு க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பா.ஜ., தலைவர் அமித் ஷா, 

சர்வதேச,யோகா தினம், நாடு,முழுவதும்,கோலாகலம், கொண்டாட்டம்!

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல், முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல்உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

''இங்கு நடந்த நிகழ்ச்சியில், மூன்று லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், அதிகமானோர் யோகா செய்யும் புதிய கின்னஸ் சாதனையை நாம் புரிந்துள் ளோம். இது குறித்து, அதிகாரிகள் முறைப்படி அறிவிப்பர்.

முதல் சர்வதேச யோகா தினத்தை யொட்டி, 2015ல், டில்லி ராஜ்பாத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், 35 ஆயிரத்து, 985 பேர் பங்கேற்றதே இதுவரை சாதனையாக இருந்தது,'' என, யோகா குரு ராம்தேவ் கூறினார்.


ஐ.நா.,விலும் யோகா


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா., சபையின் தலைமையகத்தில், சர்வதேச யோகா தினத்தையொட்டி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

'யோகா நம்மை அமைதி படுத்துகிறது; இதன் மூலம் மற்றவர்களை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் மிகப் பெரும் சக்தியாக யோகா விளங்குகிறது. உலக அமைதிக்கும் வித்திடு கிறது' என, ஐ.நா., சபை பொதுச் செயலரின் செய்தி, நிகழ்ச்சியின்போது வாசிக்கப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஐ.நா., சபையில் சிறப்பு தபால் தலையும் வெளியிடப்பட்டது.ஐ.நா.,வுக்கான இந்திய துாதர், சையது அக்பருதீன், ஹிந்து மதத் தலைவர் சுவாமி சித்தானந்த் சரஸ்வதி, சாத்வி பகவதி சரஸ்வதி, சுவாமி சிவதாசனந்தா, பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


உலகெங்கும்


சர்வதேச யோகா தினம், உலகெங்கும் பரவலாக சிறப்பான முறையில் கொண்டாடப் பட்டது. அமெரிக்காவில், நியூயார்க் நகரில், இந்தியத் துாதரகம் சார்பில் மிக பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், இந்திய வம்சாவளியினர் தவிர, அமெரிக்கர்களும் பங்கேற்றனர்.
தென் ஆப்ரிக்காவின் செவோடோ பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், 1,200 பேர் பங்கேற்று, யோகா பயிற்சிகளை செய்தனர். சீனா, ரஷ்யா, பிரான்ஸ் என, உலகின் பல்வேறு நாடுகளிலும், சர்வதேச யோகா தினத்தை யொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.