HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

சனி, 10 ஜூன், 2017

கணினி ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..

தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு விபரங்கள் (Employment Registration)சரியாக உள்ளதா என அவ்வப்போது சரிபார்க்கவும்…
*For UG with Bed…  இளநிலை பட்டங்களை (BCA / B,Sc(CS) / B.Sc(IT)) தங்களுடைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக விபரங்களின்
அடிப்படையில் Seniority Date, Major & Subject, Medium போன்றவைகள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும்…
*NCO Code பற்றி எதுவும் குழப்பமடைய தேவையில்லை. ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு பாடத்திற்கும் (Degree) இது வேறுபடும்… NCO Code என்பது பதிவு (Register) செய்யும்போது தரவுதளம் கொடுக்கும் ஒரு Random Number – ஆகும். NCO Code பற்றிய மேலான விபரங்களுக்கு தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அனுகவும்…
*For PG with BEd & MEd… தென்மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் மதுரையிலும், வட மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னையிலும் தங்களுடைய முதுநிலை பட்டங்களை (MCA / M.Sc(CS) / M.Sc(IT)) பதிவு செய்யவும் (சில ஆசிரியர்கள் இந்த வழிமுறைகளில் தெளிவாக இருப்பதில்லை)
*UG + BEd., மற்றும் PG + BEd., + MEd., போன்ற கல்வித்தகுதிகள் சரியான பதிவுமூப்பு தேதியின்படி இருக்கிறதா என அவ்வப்போது சரிபார்க்கவும்…
*Both UG and PG…. கணினி அறிவியல் (CS) Computer Science எனவும், கணினி பயன்பாட்டியல் (BCA / MCA) Computer Applications எனவும், தகவல் தொழில்நுட்பவியல் (IT) Information Technology எனவும் இடம் பெற்றிருக்கும்…
 *இந்த விபரங்கள் பிழையாக (Mistake) இருக்கும் பட்சத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று திருத்தம் செய்து கொள்ளவும் (நீங்களாகவே இந்த பிழைகளை இணையத்தில் திருத்த முயற்சிக்க வேண்டாம்; அப்படி திருத்தும் பட்சத்தில் Seniority Date மாறும் அபாயம் உள்ளது என்பதை மறவாதீர்கள்)*
 *பெண் கணினி ஆசிரியைகள் திருமணத்திற்கு பின்னர் Address மற்றும் Initial-இவைகளை வேலைவாய்ப்பு அலுவலங்களில் திருத்தம் செய்ய வேண்டாம். ஏனெனில், பதிவுமூப்பு (Seniority) அடிப்படையில் பணி நியமனம் பெறும் பட்சத்தில் இந்த திருத்தங்கள் குழப்பமாகி வேலை கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்*
வெ.குமரேசன்
9626545446 
மாநிலப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் ® *பதிவு எண் : 655 / 2014.