HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

செவ்வாய், 13 ஜூன், 2017

நாய் கடித்துவிட்டால் கண்டிப்பாக இதனை நீங்கள் செய்யக்கூடாது! உடன் பகிருங்கள்


நாய் கடித்துவிட்டால் கண்டிப்பாக இதனை நீங்கள் செய்யக்கூடாது! உடன் பகிருங்கள்
உலகளவில் கணக்கிட்டு பார்த்தால் வெறிநாய்க்கடியால் இறப்பவர்களில் 80 வீதம் பேர் இந்தியர்கள் தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நாய் கடித்துவிட்டால் உடனடியாக செய்ய வேண்டிய சிகிச்சைகளை தவிர்த்து, பதற்றத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மாற்று சிகிச்சைகளை மேற்கொள்வதால் தான் விளைவுகள் அதிகரிக்கின்றன.

சரி இப்பொழுது நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்..

நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

முதலுதவி



முதலில் கடித்த இடத்தில் கிருமிகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக நாய் கடிபட்ட இடத்தை உடனே சோப்பு நீரால் பலமுறை நன்கு கழுவ வேண்டும்.

வேகமாக விழுகிற குழாய் நீரை திறந்துவிட்டு 5 நிமிடங்கள், நன்கு ரத்தம் வெளியேறும்வரை கழுவிவிட்டு அதன் மேல் டிஞ்சர் பென்சாயின் அல்லது டிஞ்சர் அயோடின் போன்ற மருந்தை தடவலாம்.

பின்பு, தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று, முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

கடித்தது வெறிநாயாக இருந்தாலும், சாதாரண நாயாக இருந்தாலும் முதலில் தடுப்பூசியை கண்டிப்பாக போட வேண்டும். ஏனெனில் நாம் வளர்க்கும் சாதாரண நாய், குட்டிநாய்க்கு வெறிநோய் (ரேபிஸ்) தாக்கம் இருப்பது நமக்கு தெரிய வாய்ப்பில்லை.



வெறிநாய்க் கடி தானா என்பதை எப்படி கண்டறிவது?



கடித்தது வெறிநாயாக இருந்தால் 10 நாட்களில் வெறி நோய்க்கான அறிகுறிகள் தென்படும். அனைத்து உயிரற்ற பொருட்களையும் கடித்தல், வழக்கத்துக்கு மாறாக குரல் எழுப்புதல், உணவு எடுத்துக் கொள்ளாமை, தண்ணீரைப் பார்த்தால் ஒவ்வாமை, அதிக உமிழ்நீர் சுரத்தல், தாடை தொங்கி விடுதல், தண்ணீரை விழுங்க முடியாமல் போவது, பின்கால்களில் தளர்ச்சி போன்ற அறிகுறிகள் அந்த நாய்க்கு, கடித்த 10 நாட்களில் ஏற்பட்டால் வெறிநோய் தாக்கப்பட்டு இருப்பது நிச்சயம்.



இதற்காக 10 நாட்களுக்கு காத்திராமல், கடித்த அன்றே தடுப்பூசி போட அரம்பித்துவிட வேண்டும். முதல் தடுப்பூசி மட்டும் போட்டுவிட்டு, நாம் தடுப்பூசி போட்டுவிட்டோம் என நிறுத்திவிடக் கூடாது. நாய் கடித்தவுடன் வெறிநோய் தடுப்பூசிபோடுவது மட்டுமே உயிரை காக்கும்.



சரி இப்பொழுது நாய் கடித்தால் என்ன செய்யக் கூடாது என்பதை பார்க்கலாம்..



நாய் கடித்த இடத்தில் கட்டுப் போடக்கூடாது. சூரிய ஒளியில் இந்த வைரஸ் கிருமிகள் இறந்துவிடும் என்பதால் காயத்தை மூடாமல் வைத்திருப்பது நல்லது

திறந்த காயமென்றாலும், ஆழமான காயமென்றாலும் கட்டு போட்டு மூடக்கூடாது

நாய் கடித்த இடத்தில் கிருமிகள் உடலை விட்டு வெளியேறுவது தடைபடும் வகையில், சுண்ணாம்பு, சந்தனம், சாம்பல், பச்சிலைச்சாறு போன்றவற்றைத் தடவக் கூடாது.

எந்த காயத்திற்கு எந்த ஊஸி போடுவது?



டிடி ஊசி - இது எந்த விலங்கு கடித்தாலும் போடவேண்டியது.



ரேபிஸ் ஊசி- அரசு மருத்துவமனையில் இது இலவசமாக் போடப்படும் (தனியாரில் ரூ 350-500 வரை ஆகும்).



இம்யுனொக்லொபின் -அதிகமான அளவில் உள்ள காயதிற்கு கட்டாயம் போட வேண்டும்.இதுவும் இலவசமாக கிடைக்கும்.



நாய்க்கடித்த சிறிது நேரத்திலேயே தடுப்பூசி போட்டுவிட வேண்டும். இதை "0' நாள் என்பர். பின் 3வது நாள், 7வது நாள், 14வது நாள், 28வது நாள் என, 5 தடவை தடுப்பூசி போட வேண்டும்.

தடுப்பூசி போடுவதற்கு முன்னும், பின்னும் கடிபட்ட இடத்தை ஆல்கஹால் அல்லது டிங்சர் வைத்து சுத்தம் செய்யக் கூடாது. ஏனெனில், அது, தடுப்பூசியில் உள்ள ரேபிஸ் எதிர்ப்பு கிருமிகளை அழித்துவிடும்.

தடுப்பூசி போடும் போது ஏதேனும் உணவில் கட்டுப்பாடு தேவையா?



தடுப்பூசி போடும் போது உணவில் கட்டுப்பாடு அவசியம் இல்லை. எவ்வகை உணவையும் உண்ணலாம். ஆனால் மது மட்டும் அருந்த கூடாது. மதுபானம் நம் உடலின் எதிர்ப்புத் திறனை மிகவும் குறைப்பதால் நுண்கிருமியினால் விளையும் சேதம் அதிகரிக்கும்.