HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வியாழன், 29 ஜூன், 2017

40 ஆயிரம் பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு கொடுக்குமா?

சென்னை : பி.எட் பட்டம் பெற்ற 40 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு அளித்து வாழ்வு கொடுக்குமா? எதிர்ப்பார்ப்புகளோடு கணினி ஆசிரியர்கள்.
தமிழக அரசு ஆதரித்தால்தான் தனியார் பள்ளிகளில் கூட பணிபுரியும் வாய்ப்பு கணினி ஆசிரியர்களுக்கு கிடைக்கும் இதற்கான புதிய வரைமுறையையும், அரசாணையையும் தமிழக அரசு விரைவில் உருவாக்கித் தர வேண்டும்.
தனியார் பள்ளிகளில் கூட கணினி ஆசிரியர்கள் உரிய கல்வித்தகுதிகள் பெற்றிருந்தும் புறக்கணிக்கப்படும் அவலம் நீடித்து வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) மூலம் இதுவரை 40 ஆயிரம் பேர் கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் எங்கும் பணிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
இதற்கு காரணம் தமிழக அரசு நடத்தும எந்த ஒரு தகுதி தேர்வாக இருந்தாலும் ஆசிரியர்கள் பணிநியமனமாக இருந்தாலும் கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் கூட பி.எட் படித்த ஆசிரியர்களுக்கு வாய்ப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசுதான். மற்ற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் போன்று கணினி ஆசிரியர்களுக்காக உரிய பணி வரைமுறையை தமிழக அரசு உருவாக்கித் தரவில்லை. அதனால் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் வேலைக்கு செல்ல முடியாத அவலநிலைதான் காணப்படுகிறது. கணினி கல்விக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு தொடர்ந்து மெத்தன போக்குடன் செயல்பட்டுவருகிறது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் போன்ற பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் என்றால் இளங்கலை பட்டத்துடன், பி.எட் பட்டம் கட்டாயம், முதுகலை ஆசிரியர்கள் என்றால் முதுகலை பட்டத்துடன் பி.எட் அல்லது எம்.எட் பட்டம் கட்டாயம். ஆனால் தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு என முறையான கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு கணினி அறிவியில் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று உரிய பணி வரைமுறைகளையும் அரசாணையையும் உருவாக்கி தந்தால்தான் 40 ஆயிரம் கணினி ஆசிரியர்களுக்கு வாழ்வு கிடைக்கம் என்பதில் ஐயமில்லை.
இந்தியாவில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் கணினி அறிவியல் பாடம் அரசு பள்ளியில் கட்டாயம். நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். தமிழகத்தில் 2011ம் அண்டு 6ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடப்புத்தகம் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கும் வழங்கப்படாத நிலையில் உள்ளது. தற்போது அந்தப் பாடப்புத்தகங்கள் குப்பைத் தொட்டியில் போடப்பட்டதாக RTI தகவல் தெரிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நியமனத்தில் குறைந்த கல்வித்தகுதி உடைய (DCA PGDCA other Major) ஆசிரியர்களைக் கொண்டு கணினி அறிவியல் பாடம் நடத்தப்படுகிறது. அரசு பள்ளியில் பணி புரியும் மற்ற பாட ஆசிரியர்களுக்கு அரசு பல ஆண்டு காலமாக பல கோடி ரூபாயை செலவு செய்து பயிற்சி கொடுத்தும் பலன் இல்லை. காலங்கள் மாறி வரும் போது அதற்கேற்ப பாடத்திட்டத்திலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பாடங்களுக்கு தகுந்த ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்.
அந்தந்த பாடங்களுக்குத் தனித்தனியாக பி.எட் பட்டம எதற்காக உருவாக்க வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 40 ஆயிரம் பிஎட் கணினி அறிவியல் ஆசிரியர்களை வேலையின்றி உருவாக்கியுள்ளது. எந்த ஒரு பணிக்கும் தாங்கள் கொடுக்கும் பி.எட் பட்டம் செல்லாக்காசாகத்தான் உள்ளது. தங்களுடைய பி.எட் பட்டத்தினால் தனியார் நிறுவனங்களில் கூட வேலைக்கு செல்ல முடியாத நிலை இன்றளவும் உள்ளது. இனியாவது தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் முறையான கல்வித் தகுதி பின்பற்ற பட வேண்டும். கணினி அறிவியல் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று பணி வரைமுறையை உருவாக்கி அதற்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும்.
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.