HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

சனி, 17 ஜூன், 2017

தனியார்பள்ளியின் மிடுக்கை மிஞ்சும் அரசுப்பள்ளி !!

சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த பள்ளியில் பணிபுவதா ?? என்று வந்தவேகத்தில் ஆசிரியர்கள் திரும்பியோடிய பள்ளி ,வலையர்சக்குடி  (மேலச்சக்குடி) மதுரை ஒன்றிய கிராமத்தில் ,பலரும் வந்த வேகத்தில் சென்றிட,பணிமாறுதலில் சென்றிட
                                                                                  பல ஆண்டுகள் பல்வேறு இன்னல்களை தாங்கி கொண்டு சாலை போக்குவரத்து வசதிகள் உட்பட எந்த அடிப்படை வசதிகள் இல்லாமல்  8 ஆண்டுகள் 10 ஆண்டுகள் என மூன்று ஆசிரியைகள் மட்டும் வைகை ஆற்றிற்குள் பெண் ஆசிரியர்களாக தனியே பயணித்து           விடா முயற்சியுடன், இந்த ஊரிலிருந்து
அருகில் பல பள்ளிகளுக்கு சென்ற மாணவர்களை சேர்த்ததின் பலனாக மூன்றாக இருந்த ஆசிரியர்கள் -2014 ல் நான்கானது, அதன் பின் வந்த ஆண் ஆசிரியர் துரித செயல்பாடுகளால், இன்னும் கூடுதல் பலத்துடன் கிராம மக்கள் அறியாமையை நீக்கி பள்ளிக்கென கூடுதல் இடம் பெறப்பட்டு ,SSA திட்டத்தின் கீழ் DEEO, AEEO,SUPERVISOR போன்ற  கல்வித்துறை அதிகாரிகள் உதவியுடன் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு ,பாதிஅளவு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு இன்று பல ஆயிரங்களை கொட்டி கொடுக்கும் தனியார்பள்ளிகள் மாணவர்களை மிஞ்சும் வகையில் மிடுக்கான நடை,உடை,பாடத்திட்டத்தை தாண்டிய ஆங்கில புலமை, பல்வேறு ஆங்கில பாடல்களை சைகைகளுடன் தொடர்ச்சியாக பாடுதல்,பல நூறு தமிழ்பாடல்கள், ஆங்கிலத்தில் இறைவணக்கம், சமஸ்கிருதத்தில் ஸ்லோகம்,முதல் வகுப்பு மாணவர்களே திருக்குறள்,ஆங்கில உரையாடல் மற்றும் நேர்த்தியான உடை ,ஷூ ,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்(RO WATER ) எனவும் ,சுத்தம் என்றால் எங்கே விற்கும் என்றிருந்த நிலைமாறி சுத்தமான, சுகாதாரமான காற்றோட்ட சூழ்நிலையில்,காலை மாலை என இரண்டு நேரமும் தன்னலம் பாராத துப்புரவு பணியாளர்களை கொண்டு  சுத்தம் செய்து கண்ணாடி போல் உள்ள ஆண்,பெண்  கழிப்பறை வசதிகளுடனும்,செயற்கை மருந்தில்லாமல் இயற்கை முறையில் விளைந்திட்ட காய்கறிகளைக்கொண்ட சத்தான உணவு என்றும், பள்ளி வேலை நேரம் முடிந்த பின் மாலை நேரங்களில் மாணவர்கள் பாடங்களை படிக்காமல் ,இருந்து வந்த  சூழலில், பட்டப்படிப்பு  படித்தவர்கள் யாருமே இல்லாத 1400 பேர் கொண்ட கிராமத்தில் தனியார் தன்னார்வ ( TIRIPURA FOUNDATION ) என்ற  தொண்டுநிறுவனத்தின் உதவியோடு கடந்தாண்டு -2016 ல்  இரண்டு மாலை நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு ஒழுக்கக்கல்வி ,நன்னெறிக்கல்வி ,யோகா போன்ற வாழ்வியல் பயிற்சிகளை மாலைநேர சிற்றுண்டி யுடன்  பெற்று வந்த மாணவர்களுக்கு , மேலும் கூடுதலாக (17.06.2017) அன்று இன்னும் இரண்டு ஆண் ஆசிரியர்கள் உதவியோடு மாலை நேர வகுப்புகள்.        (TWO TUTION CENTER) தொடங்கப்பட்டுள்ளன
,இந்தாண்டு SBI வங்கி ,மதுரை (சந்தைப்பேட்டை கிளை) அளித்த இரண்டு கணிணி, மற்றும் ஆசிரியரின் ஒரு மடிக்கணிணியுடன் இலவச கணிணிவழிக்கல்வி, கராத்தே,SPOKEN ENGLISH வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன...                  இதன் விளைவாக இந்தாண்டு தனியார்பள்ளியில் பயின்ற பல மாணவர்கள் இப்பள்ளிக்கு மாறியுள்ளனர்...                                 ஆசிரியர்கள் ஜனவரி மாதம் முதலே மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வை ஏற்படுத்தியதின் பலனாக 99 %                    5 வயது  மாணவர்கள் இப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்...இதனால் 4 ஆக இருந்த நிரந்தர ஆசிரியர் பணியிடம் -2017 ல் 5 ஆக உயர்ந்துள்ளது இது இன்னும் கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது...                                         ஏப்ரல் மாத இறுதியில் 48 கலைநிகழ்ச்சிகளுடன் அனைவரும்         ( தனியார் பள்ளிகள் )வியக்கும் வண்ணம் பள்ளியின் ஆண்டுவிழா வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது...                                                       அரசுப்பள்ளிகள் தேய்ந்து வருகிறது என்பதை மாற்றி வளர்ந்துவருகிறது.. என்பதை நிரூபிக்கும் விதமாக இப்பள்ளி செயல்பட்டு வருகிறது... மூன்றாண்டுகளுக்கு முன்னால் மூன்று ஆசிரியர்களாக இருந்த பள்ளி இன்று நிரந்தர ஆசிரியர்கள்-5                       மாலை நேர ஆசிரியர்கள்-4                      என தற்போது  9 பேர் பணியாற்றி வருகின்றனர்...                                           இந்த கிராமத்தில் இன்றளவும் சீரான மின்வசதியோ, தெருவிளக்க,சாக்கடை,சாலை  வசதிகளோ ஏதும் இல்லை....                       70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் முதல்தலைமுறை பட்டதாரிகள் தற்போது தான் உருவாகிவருகின்றனர்.இந்நாள் வரை ஒருவர்கூட அரசுப்பணிக்கு செல்லவில்லை,குழந்தை திருமணம்,பல்வேறு மூடநம்பிக்கைகளில் இருந்துவரும் இக்கிராம மக்களின் முன்னேற்றமே எங்களின் முன்னேற்றம் என்று கூறி இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர்."ஒன்றும் இல்லாததை உருவாக்குபவனே திறமையுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்"  என்பதை உலகிற்கு காட்டிவருகின்றனர் இப்பள்ளி ஆசிரியர்கள்.இவர்களின் கடும் முயற்சிக்கு பலனாக முதல் தலைமுறை பட்டதாரி  மாணவர்கள் உருவாகி வருகின்றனர் குழந்தைகள் இன்று நவநாகரீக உடை அணிந்து மிடுக்குடன் பள்ளிக்கு எதிர்கால தேசம் காப்போம் என்ற கொள்கையோடு வீருநடைபோடுகிறார்கள்....                நன்றி - ஏழைகளின் விடிவெள்ளி - அரசுப்பள்ளி ஆசிரியர்கள்...