HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

புதன், 3 மே, 2017

Whatsapp New Update -இனி மேனேஜர் அனுப்பும் வாட்ஸ்அப் மெசேஜ் மிஸ் ஆகாது..!

தனது பயனாளர்களின் வசதிக்காக எப்போதும் ஏதேனும் ஒரு அப்டேட் கொடுத்து, ஹிட் அடிப்பதில் வாட்ஸ்அப் கில்லி. வாட்ஸ்அப்பில் gif அனுப்பும் வசதி, புதிய ஸ்டேட்டஸ் மாற்றங்கள், எழுத்துருக்களை மாற்றும் வசதி என சமீப காலங்களில் நிறைய அப்டேட்ஸ் கொடுத்திருக்கிறது வாட்ஸ்அப்.
தற்போது தனது புதிய பீட்டா அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில் உங்களின் வாட்ஸ்அப் 'சாட்'களை எளிதாக 'Pin' செய்து வைத்துக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எப்படி கூகுளின் மின்னஞ்சல் சேவை என்பது அலுவலகத் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தப்படுகிறதோ, அதைப் போலவே வாட்ஸ்அப்பும் தற்போது அலுவலக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உரையாடல்கள், அலுவலக விஷயங்கள் எனப் பல முக்கியமான தகவல்கள் வாட்ஸ்அப் மூலமாகவே தற்போது பெருமளவில் நடக்கின்றன. இது எப்படி வாட்ஸ்அப்பிற்கு ப்ளஸ் ஆக இருக்கிறதோ, அதைப் போல இதுவே மைனஸ் ஆகவும் இருக்கிறது. அறிமுகம் இல்லாத, அவசியம் இல்லாத பல க்ரூப்களின் தகவல்கள், ஃபார்வர்டு மெசேஜ்கள் ஆகியவை வந்து முக்கியமான மெசேஜ்களைக் கூட கீழே தள்ளிவிடும்.
இதனால் நமக்குத் தேவையான தகவல்களைக் கூட நீண்ட தூரம் ஸ்க்ரோல் செய்தே படிக்கவோ, பார்க்கவோ முடியும்.
மேலும் இவற்றால் மிக முக்கியமான க்ரூப்களில் இருந்துவரும் மெசேஜ்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. அப்படி தவறவிடாமல் இருக்க உதவுவதுதான் இந்த 'Pin' ஆப்ஷன். இதன் மூலமாக தனி நபருடனான சாட் அல்லது க்ரூப் சாட் இரண்டையுமே 'Pin' செய்துவைத்துக்கொள்ள முடியும்.
எப்படி 'Pin' செய்வது?
இந்த வசதியைப் பெற முதலில் வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும். வாட்ஸ்அப் வெர்ஷன் 2.17.162 மற்றும் அதற்கு அடுத்த வெர்ஷன்களில் இந்த அப்டேட் கிடைக்கும். அப்டேட் செய்த பிறகு இந்தப் புதிய வசதியை நீங்கள் பயன்படுத்தலாம்.
நீங்கள் 'Pin' செய்து வைக்கவேண்டிய "Individual Chat' அல்லது 'Group chat' மீது சில நொடிகள் அழுத்திப் பிடித்தால், 'chats' பகுதிக்கு மேலே புதிதாக 'Pin' குறியீடு காட்டப்படும். இதன்மூலம் உங்களுடைய முக்கியமான க்ரூப் அல்லது நபருடைய 'Chat'-களை 'Pin' செய்து வைத்துக்கொள்ள முடியும். இதனால் எவ்வளவு மெசேஜ்கள் உங்களின் வாட்ஸ்அப்பில் குவிந்தாலும் நீங்கள் 'Pin' செய்த 'Chat'-கள் மேலேயே இருக்கும். எனவே நீங்கள் குறித்து வைத்தவற்றை நீண்ட தூரத்திற்கு ஸ்க்ரோல் செய்து தேட வேண்டாம். முக்கியமான க்ரூப்களின் தகவல்களைத் தவறவிடவும் மாட்டோம். இந்த வசதி வாட்ஸ்அப் web-லும் கிடைக்கிறது. இதன் மூலமாக நீங்கள் மொபைலில் 'Pin' செய்துவைக்கும் 'Chat'-களை, டெஸ்க்டாப்பிலும் 'Pin' செய்து வைக்கமுடியும்.
இந்த 'Pin' ஆப்ஷனுக்கு ஒரே ஒரு கண்டிஷன் வைத்திருக்கிறது வாட்ஸ்அப். அதாவது நீங்கள் ஏதேனும் மூன்று 'chat'-களை மட்டுமே 'pin' செய்து வைக்க முடியும். அதற்கு மேல் 'pin' செய்ய முடியாது. அதேபோல நீங்கள் 'pin' செய்தவற்றை பழையபடியே 'unpin' செய்யவும் முடியும். மொபைல் மற்றும் டெஸ்க்டாப் இரண்டிலும் இதனை நீங்கள் செய்யலாம். தற்போது பீட்டா வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும் இந்த வசதி விரைவில் அனைவருக்கும் கிடைக்கலாம்.