HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

புதன், 17 மே, 2017

இணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்: செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன??

சமீபத்தில் உலகம் முழுவதும் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை சர்வர்களை பதம்பார்த்துள்ள ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழி முறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை
(கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால், இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா என கிட்டத்தட்ட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘மால்வேர் டெக்’ என்னும் பாதுகாப்பு அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள், ஓரளவு இந்த வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதே நேரத்தில் இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று நடைபெறலாம் எனவும் அவர்கள் யூகித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதில்,
1. கணினியின் இயங்கு தளமான (ஆபரேடிங் சிஸ்டம்) விண்டோஸ் பழைய வெர்சனாக இருந்தால் அதை தற்போது உள்ள புதிய வெர்சனுக்கு (விண்டோஸ் 10) ஏற்றது போல அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
2. ஒருவேளை நீங்கள் பழைய ஆபரேடிங் சிஸ்டமை (விண்டோஸ் XP, 7, விஸ்டா) பயன்படுத்தி வந்தால், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் அதற்கான அவசர பாதுகாப்பு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
3. கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் உள்ளிட்ட முக்கிய சாப்ட்வேர்களை தற்போது வரை சரியான அப்டேட்களை செய்து கொள்ள வேண்டும்.
4. கணினியில் இணைய வசதிகளை கொண்டிருக்கும் பட்சத்தில் முக்கியமாக பயர்வால் (firewall) வசதியை கண்டிப்பாக ஆக்டிவ் செய்ய வேண்டும். ஆக்டிவாக இருந்தாலும் இணைய வழி ஊடுருவலை தடுக்கும் வகையில் பயர்வால் அமைப்புகளை (setting) மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
5. சர்வரில் இருந்து தகவல்களை அனுப்பும் அமைப்பை தற்காலிகமாக செயலிழக்க செய்யுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
6. கணினியில் உள்ள தேவையான தகவல்களை பேக்அப் (Backup) செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தகவல்கல் இழப்பை தடுக்கலாம்.
7. முன் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் இ-மெயில் தகவல்களை திறந்து வாசிக்க முயற்சிக்க வேண்டாம். விளம்பரம் உள்ளிட்ட தேவையற்ற இ-மெயில்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.
கணினியை ஆன் செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டியவை:
1. கணினியின் சர்வர் மற்றும் நெட்வொர்க் ஸ்விட்சுகளின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
2. வை-பை இணைப்பு, லேன் (LAN) இணைப்பு, ரூட்டர்கள் ஆகியவற்றை துண்டித்து ஆப் செய்து வைக்க வேண்டும்.
3. ஸ்மார்ட் டி.வி, டேப்லட், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஆப் செய்து வைக்க வேண்டும்.
4. கணினி, மொபைல் ஆகியவற்றில் ப்ளூ டூத், ஹாட்ஸ்பாட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம்.
5. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறிது நாட்களுக்கு இணைய இணைப்பை பயன்படுத்தாமல் இருக்கலாம்.
மேற்கண்ட அனைத்தையும் செய்யாமல் உங்களது மொபைல், கணினி, ஸ்மார்ட் டி.வி, டேப்லட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.