HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

புதன், 24 மே, 2017

தேர்வு முறையிலும் மாற்றம் தேவை


                பிளஸ் 1 பாடத்தையே நடத்தாமல் விட்டதால், அந்த வகுப்பிற்கும், தற்போது, கட்டாய தேர்வு வந்துள்ளது.
தற்போதைய சூழ்நிலை மற்றும் அவசியம் கருதி, பொது தேர்வை வரவேற்கலாம். ஆனால், மாணவர்களை மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மாற்றாத வகையில், பாடத்திட்டமும், பயிற்றுவிக்கும் முறையும் மாற வேண்டும். மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும், பெற்றோருக்கும் கவுன்சிலிங் தர வேண்டும். மாணவர்களின் கல்வித்தரம் உயர, இன்னும் பல மாற்றங்கள் தேவை.- வி.வசந்தி தேவி முன்னாள் துணைவேந்தர், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை

'தேர்வு முறையிலும் மாற்றம்'

பாடத்திட்ட மாற்றம் மற்றும் பிளஸ் 1 தேர்வு முறை வரவேற்கத்தக்கது. இந்த திட்டங்கள் வெற்றி பெற, தேர்வு முறையும், சி.பி.எஸ்.இ.,யை போல, மாற வேண்டும். சாய்ஸ் அடிப்படையில், வினாத்தாள் இருக்கக்கூடாது. திருத்த முறைகளில் தரம் உயர வேண்டும். 'ப்ளூ பிரின்ட்' அடிப்படையில், கேள்வி கேட்பதை மாற்ற வேண்டும். செய்முறை தேர்வில், தகுதியான மாணவர்களுக்கே மதிப்பெண் வழங்க வேண்டும். - ஜெயப்பிரகாஷ் காந்தி கல்வி ஆலோசகர்


'எதிர்பார்த்தது நடந்துள்ளது'

பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவித்ததை வரவேற்கிறோம். இந்த மாற்றங்களை தான், பள்ளிகளும், மாணவர்களும் எதிர்பார்த்திருந்தனர். இந்த அறிவிப்பின் மூலம், ஒரு சில பள்ளிகள் மட்டும், வெறும் மதிப்பெண்ணை குறியாக வைத்து, பாடம் கற்பிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வரும்.- ஆர்.நந்தகுமார் பொதுச்செயலர், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம்.

'பாடத்திட்டத்திலும் மாற்றம் வேண்டும்'

இன்ஜினியரிங் மற்றும் வேளாண் கல்வியை வழங்கும், தொழில்நுட்ப கல்வி பாடத்திட்டத்தை மாற்றுவது, வரவேற்புக்கு உரியது. அதிலும், தொழில்நுட்ப கல்வியை அங்கீகரிக்கும், அண்ணா மற்றும் வேளாண் பல்கலைகளுடன் இணைந்து, பாடத்திட்டத்தை மாற்றுவது, மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்க வழியை ஏற்படுத்தும்.
- எஸ்.என்.ஜனார்த்தனன் பொதுச்செயலர், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்.

'வருங்கால சந்ததி வளர்ச்சி பெறும்'

ஒரே தேசம், ஒரே பாடத்திட்டம் என்பதை, பல ஆண்டுகளாக நாங்கள் வலியுறுத்துகிறோம். அதை தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். தரமான கல்வியை கொண்டு வர, பாடத்திட்ட மாற்றம், பிளஸ் 1ல் பொதுத்தேர்வு அறிமுகம் போன்றவற்றுக்கு, அரசு முடிவு எடுத்திருப்பது, வருங்கால சந்ததியை வளர்ச்சிக்கு கொண்டு செல்லும்.
- எம்.ஜே.மார்டின் கென்னடி மாநில தலைவர், தமிழ்நாடு நர்சரி, மெட்ரிக், மேல்நிலை பள்ளி நிர்வாகிகள் சங்கம்.

தனியார் பள்ளி முதல்வர்கள் கருத்து

'போட்டி தேர்வுகளில் ஜொலிக்க முடியும்'கல்வித்துறை அறிவிப்பால், சமச்சீர் கல்வியில் இருந்த பல குறைகள் களையப்படும் என, நம்புகிறோம். பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உடைய, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 பாடம் நடத்தப்படுவதில்லை. இப்போது, பிளஸ் 1ல், பொதுத்தேர்வு என்பதால், மாணவர்கள் அந்த வகுப்பு பாடங்களுக்கும், முக்கியத்துவம் கொடுத்து படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாணவர்களால், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும் முடியும். 
- எஸ்.நமசிவாயம் முதல்வர், மகரிஷி வித்யாமந்திர் மேல் நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை.

புதிய பாடங்களை சொல்லி தரும் அளவில் வசதிகளை, அரசு பள்ளிகளிலும் ஏற்படுத்த வேண்டும். கற்பிக்கும் முறையை மாற்ற முயற்சிக்க வேண்டும். தமிழக மாணவர்களை, மருத்துவ நுழைவுக்கான, 'நீட்' தேர்வுக்கு தயார்படுத்தும் தற்கால, குறுகிய நோக்கமாக இருக்க கூடாது. சி.ஏ., மற்றும் இன்ஜினியரிங் படிப்புக்கான, நுழைவுத்தேர்வுகளை கையாளும் வகையில், வினாத்தாள் அமைக்கப்பட வேண்டும். மேல்நிலை தேர்வுகளில், மதிப்பெண்ணை குறைக்கலாமே தவிர, பாடத்தையோ, கேள்விகளையோ குறைக்க கூடாது. விளையாட்டு, பொது அறிவு, தற்கால நிகழ்வுகள், நீதி போதனை பாடங்களையும் சேர்க்க வேண்டும்.
- பி.புருஷோத்தமன்முதல்வர், எவர்வின் குழும பள்ளிகள்,கொளத்துார், சென்னை.