தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்
▼
TEACHERS
▼
IMPORTANT LINKS
▼
TV LIVE
▼
ON LINE RADIO GARDEN
▼
STUDENTS ZONE
▼
UNIVERSITIES LINKS
▼
ஞாயிறு, 9 ஏப்ரல், 2017
கணவர் இறந்த செய்தியை நேரலையில் படித்த செய்தி வாசிப்பாளர்
சத்தீஸ்கரில் ஐபிசி என்ற சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றும் சுப்ரித் கவுர் என்பவர் அவருடைய கணவர் இறந்த செய்தியை வாசித்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. சுப்ரித் கவுர் என்பவர் ஐபிசி சேனலில் 9 ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறார். அவருக்கும் ஹர்சாத் கவடே என்பவருக்கும் ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இன்று காலையில் சுப்ரித் கவுர் நேரலையில் செய்தி வாசிக்கும்போது, நிருபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக நேரலையில் இணைந்தார். அவர், 'மகாசமுந்த் மாவட்டத்தில் ரெனால்ட் டஸ்டர் வாகனம் விபத்துக்குள்ளானது. அந்த வாகனத்தில் பயணம் செய்த ஐந்து பேரில் 3 பேர் உயிரிழந்தனர்' என்று தகவலை தெரிவித்தார். இருப்பினும் இறந்தவர்கள் குறித்த தகவலை தெரிவிக்கவில்லை. ஆனாலும், நிருபர் தெரிவித்த தகவலைக் கொண்டு தனது கணவர் தான் இறந்தார் என்று கவுர் தெரிந்துகொண்டார். இருப்பினும் கவுர் அமைதியாக செய்தி முழுவதையும் வாசித்து முடித்தார். பிறகு வெளியே வந்துதான் அழுதிருக்கிறார். இதுகுறித்து தெரிவித்த சக ஊழியர்கள், 'அவர் மிகவும் தைரியமான பெண். கவுரின் கணவர் இறந்தது அவர் செய்தி வாசிக்கும்போதே எங்களுக்கு தெரியும். ஆனால், இதுகுறித்து அவரிடம் தெரிவிப்பதற்கு எங்களுக்கு தைரியம் இல்லை' என்றனர்.