தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்
▼
TEACHERS
▼
IMPORTANT LINKS
▼
TV LIVE
▼
ON LINE RADIO GARDEN
▼
STUDENTS ZONE
▼
UNIVERSITIES LINKS
▼
செவ்வாய், 14 பிப்ரவரி, 2017
சசிகலாவின் பேச்சுக்கு பதில் சொல்லி என் தரத்தை குறைத்து கொள்ள விரும்பவில்லை: ஸ்டாலின்
சென்னை: திமுக உயர்நிலை செயற்குழு கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்தொடருக்கு பின் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் அதிமுக எந்த நிலையிலும் திமுகவின் எதிரிக்கட்சிதான் என்று கூறினார். மேலும் பேசிய அவர் தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து வருகிறது. குடிநீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனால் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பதவிக்கு சண்டையிட்டு வருகிறார். தமிழக அரசு நிலையாக இல்லாததால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுப்ரமணியம் சுவாமி சசிகலா முதல்வராக வேண்டும் என தெவிவிக்கின்றாரே என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், சுப்ரமணியம் சுவாமி கூறுவதை அவர் கட்சியே ஏற்பதில்லை நாம் ஏன் பேசவேண்டும் என தெரிவித்தார். மேலும் சசிகலாவின் பேச்சுக்கு பதில் சொல்லி என் தரத்தை குறைத்து கொள்ள விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். ஆளுநர் அரசியல் சட்டப்படி நிலையான ஆட்சி அமைய நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இது தொடர்பாக ஆளுநரை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுவை திமுக கொடுத்துள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.