தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்
▼
TEACHERS
▼
IMPORTANT LINKS
▼
TV LIVE
▼
ON LINE RADIO GARDEN
▼
STUDENTS ZONE
▼
UNIVERSITIES LINKS
▼
திங்கள், 13 பிப்ரவரி, 2017
15 ஆண்டு காலமாக சசிகலாவிடம் சித்திரவதையை அனுபவித்தேன்.. ஓபிஎஸ் குமுறல்
சசிகலாவிடம் 15 வருடமாக நான் சித்திரவதையை அனுபவித்து வந்தேன் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு தனது இல்லத்தில் செய்தியாளர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்தனர் சசிகலா முதல்வராவதை எம்.எல்.ஏக்கள் விரும்பவில்லை 2 நாட்களாக ஏன் கூவத்தூர் சென்று வருகிறார் சசிகலா. ஏன்? கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்கள் என்னுடன் பேசிக் கொண்டுள்ளனர் ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் 4 பேரை காவலுக்கு நிறுத்தியுள்ளனர் அம்மா ஏற்படுத்திய ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய எண்ணம் மட்டுமே என்னிடம் உள்ளது. பொதுச் செயலாளராக மதுசூதனைத்தான் தேர்வு செய்வோம் என்று சொன்னார்கள். இப்போது செய்தியாளர்களைச் சந்திக்கும் சசிகலா, அம்மா மருத்துவமனையில் இருந்தபோது சந்திக்காதது ஏன் எங்கள் யாரையும் அம்மாவைப் பார்க்க அனுமதிக்கவில்லை சசிகலா ரத்த சொந்தமான தீபாவையும் அனுமதிக்கவில்லை ஜெயலலிதா இதுவரை என்னை கடுஞ்சொல் கொண்டு பேசியதில்லை ஜெயலலிதா என்னை கடுமையாக பேசாததே இவர்களுக்குக் கோபம் 15 வருடமாக சசிகலாவிடம் சித்திரவதையை அனுபவித்தேன் இப்போது நீலிக் கண்ணீர் வடித்து ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறார்.