HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

மே 1-ம் தேதி முதல் புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது கட்டாயம்: முதல்வர் தகவல்

புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் வரும் மே 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என முதல்வர்
வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் பொறுப்பேற்றது முதல் புதுவையில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, செயின்பறிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்முறை, போன்றவற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.
புதுவையில் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள 2 கொலை வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2014-ல் நெல்லித்தோப்பில் அடகுகடை வியாபாரி கொலை, 2015-ல் முத்தியால்பேட்டையில் கலைவாணி என்பவர் கொலை போன்றவற்றில் தொடர்புடைய கொலையாளிகளை கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுச்சேரியில் காவல்துறை நவீனமயம் செய்வதில் அரசு முனைப்பாக உள்ளது. இதற்கான நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் விடுவிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், சைபர் கிரைம் பிரிவை நவீனப்படுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காவல்துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு கட்டாயம் செய்து தரும் . அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார் நாாயணசாமி.
குறிப்பாக கள்ள லாட்டரி விற்பனையை முழுமையாக ஒழித்தோம். போதைப்பொருள் விற்பனையையும் தடுக்கப்பட்டது. வியாபாரிகளை மிரட்டி ரௌடி மாமூல் வசூலிப்பது, தொழிற்சாலைகளை மிரட்டி பணம் பறிப்பது, வணிகர்கள் குழந்தைகளை கடத்தி பணம் பறித்தல் போன்ற சம்பவங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் வணிகர்கள், புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு மொத்தம் பதிவான 4049 வழக்குகளில் 3215 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. இது மொத்தம் 79 சதவீதமாகும்.
சட்டப்பேரவை பொதுத் தேர்தல், நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் போன்றவை அமைதியாக நடைபெற காவல்துறை முனைப்புடன் செயல்பட்டது.
நீண்ட நாள் வழக்குகள்
ஏற்கெனவே நிலுவையில் இருந்த காவலர் அருணகிரித கொலை வழக்கு, செஞ்சியில் புதுவை பெண் கடத்தல் கொலை வழக்கு போன்றவற்றை காவல்துறையினர் திறமையாகக் கையாண்டு கண்டுபிடித்தனர்.
காரைக்காலில் முன்னாள் அமைச்சர் விஎம்சி சிவக்குமார் கொலை வழக்கில் 9 பேர் சரண் அடைந்துள்ளனர். தலைமறைவாக உள்ள 6 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸாரின் துப்பாக்கியையும் தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு மொத்தம் 710 சாலை விபத்துகள் நடைபெற்றன. இதில் 60 பேர் தலைக்காயம் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளனர். இதனால் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலையில் ஹெல்மெட் அணிவதை கட்டமாயாக்க போக்குவரத்து துறை, காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து வரும் மே 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதை காவல்துறை தீவிரமாக நடைமுறைப்படுத்தும்.
காவல்துறை நவீனமயம்
டிஜிபி சுனில்குமார் கௌதம், ஐஜி ஏகே.கவாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.