HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

மாநில அமைப்பின் அறிக்கை

             
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்  கூட்டணி   

  தொடக்கக்கல்வி இயக்குநரக முற்றுகைப்போராட்டம்

இயக்கத்தின் எழுச்சிப் பயணத்தில் மற்றுமொரு  மைல்கல்

மாநில அமைப்பின் அறிக்கை

தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்கங்களில் வலிமை வாய்ந்த   இயக்கமாக, ஆசிரியர் நலன் ,மாணவர் நலன்,கல்விநலன் காத்திட சமரசமற்ற களப்போராளியாக விளங்கிக் கொண்டிருக்கும் பேரியக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒன்றுதான் என்பதை நிரூபிக்கும் வகையில் 03.02.2017 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்ற தொடக்கக்கல்வி இயக்குநரக முற்றுகைப் போராட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.  காவல்துறையின் கடும் அச்சுறுத்தல்களையும்,நெருக்கடிகளையும் மீறி 12000க்கும்   மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்ட இப்போராட்டம்; தமிழகத்தின் ஆசிரியர் இயக்க வரலாற்றில் தனிச்சங்க நடவடிக்கையாக ஒரு சாதனைச் சரித்திரத்தைப் படைத்துள்ளது.

1988ல் அரசு ஊழியர் - ஆசிரியர் இயக்கங்களால் நடத்தப்பட்ட கோட்டை முற்றுகைப் போராட்டத்தை இன்றளவும் வரலாற்று நிகழ்வாகப் பேசும் நமக்கு ஆசிரியர் இயக்கப் போராட்ட வரலாற்றில் தன்னிச்சையாகவோ,கூட்டாகவோ காவல்துறையின் அனுமதியில்லாத நிலையிலும் இயக்குனர் அலுவலகத்தை காவல்துறையின்  நுண்ணறிவுப்பிரிவின் புலனாய்வையும் தாண்டி முற்றுகை நடத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது லட்சியப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது.

15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாம் கட்டப் போராட்டமாக 03.02.2017 அன்று தொடக்கக்கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட நாம் எடுத்த முடிவு, ஆசிரியர் இயக்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.  இப்போராட்ட அறிவிப்பையும,; நமது கோரிக்கைகளையும் 09.01.2017 அன்று தமிழக அரசுக்கும் தொடக்கக்கல்வி இயக்குநருக்கும் அளித்தபோது அதைக் கண்டு கொள்ளாத தமிழக அரசும் கல்வித்துறையும் 02.02.2017 அன்று தமிழகத்தின் அனைத்தும் பகுதிகளிலிருந்தும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆவேசத்தின் வார்ப்படங்களாக சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிற செய்தியை உளவுப்பிரிவு மூலம் அறிந்து பரபரப்பாகியது. சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் திரு.சங்கர்,ஐபிஎஸ்  அவர்களும்,காவல்துறை இணை ஆணையர் திரு.மனோகரன், ஐபிஎஸ் அவர்களும் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நம்முடைய மாநில மைய நிர்வாகிகளோடு இரவு 7 மணி முதல் 10  மணி வரை  பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதே நேரத்தில் நமது தொடக்கக்கல்வி இயக்குநர் திரு.இளங்கோவன் அவர்களும் காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.



இறுதியாக டி.பி.ஐ வளாகத்தில் முற்றுகை நடத்த அனுமதியில்லை என்று காவல்துறையால் நமக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.  மீறினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. அச்சத்தை துச்சமாக மதிக்கும் நம் பேரியக்கம் மிரட்டல்களைத் தூக்கியெறிந்தது.  விளைவு 02.02.2017 இரவே நம் மாநில அலுவலகம் காவல்துறையால் சூழப்பட்டது. இரவு முழுவதும் காவல்துறை நம் அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலும் மாநில அலுவலகத்தில் இரவு 12 மணிவரை நடைபெற்ற  மாநில மைய நிர்வாகிகள் கூட்டம் எக்காரணம் கொண்டும் ஏற்கனவே மாநிலச்செயற்குழுவில் எடுத்தமுடிவின் படி  முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்றுதிட்டவட்டமாக முடிவெடுத்தது .03.02.2017 அதிகாலை3மணிக்கே மேல்மருவத்தூர்,செங்கல்பட்டு,கூடுவாஞ்சேரி,பெருங்களத்தூர்,இ.சி.ஆர்சாலை,சோழிங்கநல்லூர்,பூவிருந்தவல்லி,ஆவடி,  திருவள்;ர்,தாம்பரம், செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் நமது இயக்கத்தோழர்கள் வந்த  வாகனங்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு ஆங்காங்கே மண்டபங்களில் சிறைப்படுத்தப்பட்ட செய்திகள் கைபேசி மூலம் நம் இயக்கப் பொறுப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டது.  எனவே,வருகை தருகின்ற ஆசிரியர்கள் தாங்கள் வருகை தந்த வாகனத்தை விட்டுவிட்டு மாநகரப் பேருந்துகள் மற்றும் ரயில் மூலம் வருகைதர அறிவுறுத்தப்பட்டது.

காலை 7 மணிக்கு  மாநிலப் பொறுப்பாளர்கள் நம் மாநில அலுவலகத்திலிருந்து காவல்துறை கண்காணிப்பையும் மீறி வெளியேறி டி.பி.ஐ வளாகம் சென்றடைந்தனர்.  நம் மாநிலத் தலைவர் ச.மோசஸ் காவல்துறையால் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். டி.பி.ஐ வளாகத்திற்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் மூடப்பட்டன.  ஆயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். மேலும்,டி.பி.ஐ வளாகத்திலிருந்து 3.கி.மீ தூரம் வரை எல்லாப் பக்கங்களும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

                     இத்தனை கெடுபபிடிகளையும் மீறி காவல்துறை சற்றும் எதிர்பார்க்காத வகையில் டி.பி.ஐ வளாகத்தைச் சுற்றிலும் பல்வேறு இடங்களில் வேங்கைகளைப்போல்பதுங்கியிருந்த நம் இயக்கச்செயல்வீரர்களும்,வீராங்கனைகளும் சிறுத்தையின் சீற்றத்தோடு   காலை 10.30 மணிக்கு விண்ணதிர,மண்ணதிர முழக்கமிட்டு ஆயிரக்கணக்கான காவலர்களையும் மீறி டி.பி.ஐ பிரதான வளாக வாயிலை முற்றுகையிட்டனர். அந்த முற்றுகையில் மட்டும் 2000க்கும் மேற்பட்டோர் ஆக்ரோஷமாகப் பங்கேற்றனர்.  ஒரு மணிநேர முற்றுகைக்குப் பின்;; காவல்துறை போராட்ட வீரர்களைக் கைதுசெய்து எழும்பூர்  ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு கொண்டு சென்றது. அதே நேரத்தில் மாநகருக்குள் வந்த நம் போராட்டவீரர்கள் காவல்துறையால் சிறைபிடிக்கப்பட்டு ராஜரத்தினம்ஸ்டேடியம் ,ஆயிரம்விளக்கு ,புதுப்பேட்டை ,சிந்தாதிரிப்பேட்டை,மடிப்பாக்கம்,திருவல்லிக்கேணி,சோப்பாக்கம் ஆகிய இடங்களில் திருமண மண்டபங்களில் சிறை வைக்கப்பட்டனர். இவ்வாறு சென்னை மாநகரில் மட்டும் 5000க்கும் மேற்பட்டோர் சிறைவைக்கப்பட்டனர். சென்னைக்கு வெளியே 5000க்கும் மேற்பட்டோர் சிறை வைக்கப்பட்டனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் திருமதி.சபீதா,ஐ.ஏ.எஸ் அவர்களிடமிருந்து பேச்சுவார்த்தைக்கு காவல்துறை மூலம நமக்கு  அழைப்பு வந்தது.

                      காவல்துறைவாகனத்தில்நமதுமாநிலத்தலைவர்திருச.மோசஸ்,பொதுச்செயலாளர்திரு.செ.பாலசந்தர் ,

மாநிலப்பொருளாளர் திரு.ச.ஜீவானந்தம்,துணைப்பொதுச்செயலாளர் திரு. ச.மயில் ஆகியோர் தலைமைச்செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் திருமதி.சபிதா ஐ.ஏ.எஸ் அவர்களது அறையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளருடன் பள்ளிக்கல்வித்துறை துணைச்செயலாளர் திரு.ராகுல்நாத் ஐ.ஏ.எஸ்,  தொடக்கக்கல்வி இயக்குநர் திரு.இளங்கோவன் தொடக்கக்கல்வி இணை இயக்குநர் திருமதி.சசிகலா,மாநகர காவல்துறை இணை ஆணையர் திரு. மனோகரன் ஐபிஎஸ் மற்றும் நிதித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.




1 மணி  35 நிமிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நமது 15 அம்சக் கோரிக்கைகள் குறித்து விரிவாக                     விவாதிக்கப்பட்டது.  பேச்சுவார்த்தையின் முடிவில் கீழ்க்;கண்டவாறு முடிவுகள் எட்டப்பட்டன.

1. தன் பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள வல்லுநர்குழு அறிக்கையை விரைவாகப் பெற்று பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த துறை ரீதியாக பரிந்துரை செய்யப்படும்.

2. இடைநிலைஆசிரியர்களுக்கு கடந்த  ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பைச் சரிசெய்து எட்டாவது ஊதியக்குழுவில் மத்திய அரசுக்கிணையான ஊதியம் கிடைத்திட துறைரீதியாக பரிந்துரை செய்யப்படும்.

3. எட்டாம்வகுப்பு வரை அமலில் உள்ள கட்டாயத் தேர்ச்சி தொடரும்.

4. பி.லிட் கல்வித்தகுதி கொண்ட நடுநிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்களுக்கு  பி.எட் கல்வித்தகுதிக்கு, முன்புபோல் ஊக்க ஊதிய உயர்வு பெற ஆவண செய்யப்படும்.

5. ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளிகளில் பிஎட் கற்பித்தல் பயிற்சி மேற்கொண்டால்  விடுப்பு எடுக்கத் தேவையில்லை என்பதற்கு ஆணை வெளியிடப்படும்;.இயக்குனரின் செயல் முறை ஆணை ரத்து செய்யப்படும்.

6. மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடு தொடர்பாக அரசு ஆணைக்குட்பட்டு ஆணை வெளியிடப்படும்.

7. தேனி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் தொடர்பான புகார்கள் மீது தொடக்கக்கல்வித்துறை இணை இயக்குநர் திருமதி.சசிகலா அவர்கள் விசாரணை நடத்தி அறிக்கை தந்திடவும் அதன் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆணையிடப்படும்.

8. வேலூர் மாவட்டத்தில் தவறு புரிந்துள்ள உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள்  மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

9. தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணிநிரவல் தொடர்பாக விதிகளுக்குட்பட்டு அரசுப்பள்ளிகளில் காலிப்பணியிடங்களில் ஈர்த்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

10. (அ) பொதுமாறுதல் கலந்தாய்வுக்குப்பின் ஏற்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு இரண்டாம் கட்ட பதவி உயர்வு கலந்தாய்வு இன்னும் ஒரு வாரத்தில் நடத்தப்படும்.

(ஆ )1997 ஆம் ஆண்டு பின்னடைவு காலிப்பணியிடங்களில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்ட ஆதிதிராவிட பட்டதாரி ஆசிரியர்களுக்கு  ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட நிதித்துறைக்கு பரிந்துரை செய்யப்டும். அதன் மீது தனி கவனம் செலுத்தி ஆணைகள் வெளியிடப்படும்.

11. ஆசிரியர்கள் உயர்கல்வி பயின்றதற்கான பின்னேற்பு ஆணைகள் விரைவில் வழங்கப்படும்.

12. பி.காம்,பி.ஏ(பொருளாதாரம்) ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்று பி.எட் கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு அரசு ஆணைகளுக்கு உட்பட்டு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்படும்.

13. உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் ஒரிரு நாட்களில் நிரப்பப்படும்.

14. அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கும் கணினி வழங்கிட படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

15. தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் கிராமப்புறப் பள்ளிகளைப் போல் பேரூராட்சி, நகராட்சிகளில் அமைந்துள்ள பள்ளிகளுக்கும் துப்புரவுப் பணியாளர் நியமனம் தொடர்பாக ஒரிரு நாட்களில் ஆணை வெளியிடப்படும்.

மேற்கண்டவாறு நமது கோரிக்கைகள் தொடர்பாக உறுதி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் நமது முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இச்செய்தி தலைமைச் செயலகத்திலேயே செய்தியாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு தெரிவிக்கப்பட்டது.




அதன்பிறகு காவல்துறை வாகனம் மூலம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு நமது மாநிலப்பொறுப்பாளர்கள் அழைத்துவரப்பட்டனர். அங்கு நமது மாநிலத்தலைவர் திரு. ச.மோசஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறைவைக்கப்பட்ட நமது இயக்க செம்மல்களுக்கு பேச்சுவார்த்தை விவரங்கள் பொதுச்செயலாளர் திரு.செ.பாலசந்தர் அவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், பேச்சுவார்த்தையின்படி ஆணைகள் வெளியிடப்படவில்லையென்றால் மீண்டும் போராட்டக்களம் காணவேண்டிய அவசியம் ஏற்படும் என்றும்  பொதுச்செயலாளர் தனது உரையில்குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில்தோழமைச்சங்கத்தலைவர்கள்திரு.அ.மாயவன்,திரு.பூபாலன்,திரு.தாஸ்,திரு.தியாகராஜன்,திரு.சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.எஸ்.டி.எப்.ஐ அகில இந்தியப் பொருளாளர் திரு.தி.கண்ணன் அவர்கள் போராட்டத்தை முடித்து வைத்தார்.மாநிலப் பொருளாளர் திரு.ச.ஜீவானந்தம் நன்றி கூறினார்.  சிறை வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணதிர முழக்கமிட்டு உணர்வுப்பூர்வமாக உற்சாகப் பெருக்குடன் போராட்டக் களத்திலிருந்து விடைபெற்றனர்.




தமிழகத்தின் ஆசிரியர் இயக்க வரலாற்றில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலிமைமிக்க மாபெரும் சக்தி என்பதை இப்போராட்டம் அழுத்தந்திருத்தமாக ஆணித்தரமாக நிரூபித்தது.  02.02.2017 பிற்பகல் முதல் 03.02.2017 மாலை வரை நமது பேரியக்கத்தின்; போராட்டம் தமிழக அரசுக்கும்,கல்வித்துறைக்கும்,காவல்துறைக்கும் மிகப்பெரிய சாவாலாக அமைந்திருந்தது.  தமிழக காவல்துறைக் கணக்கீட்டின்படி இப்போராட்;டத்தில் 12,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டது தமிழக அரசுக்கும்,கல்வித்துறைக்கும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.  இயக்கம் இட்ட கட்டளையை ஏற்று                    “தற்செயல் விடுப்பு எடுத்தாலே பணிப்பதிவேட்டில் பதிவு செய்து ஊதியப் பிடித்தம் செய்வோம்” என்ற கல்வித்துறையின் மிரட்டல்,காவல்துறையின் மிகக்கடுமையான அச்சுறுத்தல் என்று அனைத்துத் தடைகளையும் தூள் தூளாக்கி முற்றுகைப் போரில் முன்னணிப் படையாகக் களமிறங்கிய அத்தனை இயக்கப்போராளிகளுக்கும் மாநில மையம் வீரஞ்செறிந்த வணக்கங்களையும்,                                                                                                               வாழ்த்துகளையும்உரித்தாக்குகிறது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி “பேருக்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ள இயக்கமல்ல்                                                                                                      போருக்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ள இயக்கம”; என்பது மீண்டும்                                                                                          ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

                                                                            தோழமையுடன்

                                                               
    செ.பாலசந்தர்

பொதுச்செயலாளர்

                                                  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி