HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

சனி, 14 ஜனவரி, 2017

சுற்றுலாத் தலங்கள் குறித்த: புதிய செயலி அறிமுகம்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய செயலியை சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைத்தார்.
 தமிழ்நாடு சுற்றுலாத் துறை தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை அவர் அறிமுகம் செய்தார்.
புதிய செயலி: "பினாகின்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை ஆன்ட்ராய்ட் செல்லிடப்பேசியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலியில் தமிழ்நாட்டின் புராதன சுற்றுலாத் தலங்களான தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், மாமல்லபுரம் ஆகிய இடங்கள் தொடர்பான தகவல்களை தமிழ், ஆங்கிலத்தில் ஒலி வசதியோடு தெரிந்து கொள்ளலாம்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது:
தமிழகத்துக்கு பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த செயலி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாச் சந்தை வரும் மே 20 -ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்திலுள்ள அனைத்து சுற்றுலா தொடர்பான பிரமுகர்களும், கலை, பண்பாடு, கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்டவை சார்ந்த அரசு நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன என்றார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஹர் சஹாய் மீனா, பொது மேலாளர் கவிதா ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.