HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

செவ்வாய், 10 ஜனவரி, 2017

இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ்வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம்!

இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ்வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம்!



`உழைத்தால் உயரலாம்!’ உண்மையா? நூற்றுக்கு நூறு உண்மை... ஒரு காலத்தில்! இன்றைக்கு..? `ஹார்டு வொர்க் பண்றதைவிட, ஸ்மார்ட்டா வொர்க் பண்ணுங்க ப்ரோ... டாப்ல போயிடலாம்’ என இளைய தலைமுறையே இறங்கி வந்து அடித்துச் சொல்கிற காலம் இது. ஆக, எதையும் புத்திசாலித்தனமாகச் செய்யவேண்டியது அவசியமாக இருக்கிறது. அதற்கு முதல் தேவை, உடல் ஆரோக்கியம். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, வாழ்வியல்முறைகளில் ஒழுங்கு, சமச்சீர் உணவு... என ஆரோக்கியம் காக்க நீளமான பட்டியலே உண்டு. மருந்துகள் உட்கொள்வதும் அவற்றில் ஒன்று. உடல் ஆரோக்கியம் பராமரிப்பதற்காக சில இயற்கை மருந்துகளை இரவில் எடுத்துக்கொள்வார்கள். அவற்றில் `திரிபலா பொடி’ இரவில் எடுத்துக்கொள்ளவேண்டிய மருந்து. சரி, திரிபலா பொடியை ஏன், எதற்கு, எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.




திரிபலா பொடி

திரிபலா ஒரு பாரம்பர்ய மருந்து. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

திரிபலா தரும் நன்மைகள்...

திரிபலா பொடியை இரவில் சாப்பிட்டால், நன்மைகள் ஏராளமாகக் கிடைக்கும். அதை மனதில்கொள்ளவும்.

* முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.

* இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதயநோய்கள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.

* உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

* வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப்புழுக்களையும் (Ring worms) வெளியேற்ற உதவுகிறது. மேலும், வயிற்றில் பூச்சி வளர்தல் மற்றும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துகிறது.

* வயிற்றுப்புண்ணை ஆற்றும். அல்சரை கட்டுப்படுத்தும்.

* ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்கிறது. ரத்தசோகையை சரிசெய்கிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

* கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் குளூகோஸின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. திரிபலாவில் உள்ள கசப்புச் சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

* உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.

* ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை சுத்திகரிக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் சருமத்தைக் காக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும்.

* மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை ஏற்படுத்தும். சைனஸ் நோயைத் தீர்க்கும். சுவாசப் பாதையில் உள்ள சளியைப் போக்க உதவும்.

* உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலியைக் குணப்படுத்தும். கண்பார்வைக் கோளாறைச் சரிசெய்யும்.

எப்போது, எப்படிச் சாப்பிட வேண்டும்?

* கடுக்காய் ஒரு பங்கு, நெல்லிக்காய் நான்கு பங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு எடுத்துக்கொள்ளவும். அவற்றை நிழலில் நன்றாக உலர்த்தவும். பின்னர், அரைத்துப் பொடியாக்கவும். இதை வீட்டில் தயாரிக்க முடியாதவர், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய திரிபலா பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.

* மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

* குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். வாய்ப்புண் மற்றும் வெடிப்பை சரி செய்யும்.

* பனிக்காலங்களில் தேன் மற்றும் திரிபலாப் பொடியை சேர்த்து சாப்பிட வேண்டும்.

* கோடை காலத்தில் திரிபலாப் பொடியை நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.