HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

திங்கள், 12 டிசம்பர், 2016

RTI பதில் - CPS ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர் குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதி.

THANKS :MR.JAYAPRAKASH
CPS எனப்படும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர் குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதியை பற்றியும், எத்தனை பக்க அறிக்கை தயார் செய்துள்ளது, சங்கங்களிடமிருந்துபெறப்பட்ட கருத்துக்களை
பற்றிய தகவல்கள் (நிதித் துறையின்) இப்பிரிவில் இல்லையென பதில் வழங்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த திரு.ஜெயப்பிரகாஷ் என்பவர் தமிழக அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள CPS எனப்படும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர் குழுவின்செயல்பாடுகளின் விவரம் பற்றி தமிழக அரசின்  நிதித் துறைக்கு 12.09.2016 நாளிட்ட மனுவில் வரிசை எண் 1 முதல் 9 வரையான தகவல்களை கோரி   RTI 2005இன்  கீழ் கடிதம் அனுப்பினார். நிதித் துறையின் கடித எண்.50725/       நிதி (PGC-1)/2016 நாள்:30.09.2016. என்ற கடிததத்தில் RTI 2005இன் 2f விதியை காரணம் காட்டியும் நடைமுறையிலுள்ள கோப்புகளை பற்றி தகவல் வழங்க இயலாது என பதில் வழங்கி உள்ளது. (இத்த‌கவல் ஏற்கனவே நமது இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.)
இக்குழு    பணிகளை     பதிவு       செய்யும்          போது Including records, Documents, Memos, Opinions, Advices, Circulars, Orders, Reports, Papers, Samples,என்ற பெயர்களின் எதேனும் ஒரு வகையில் தான், அக்குழு பதிவு செய்வது மற்றும் தயார் செய்யும் கருத்துகள் ஆவணங்களாகஅடங்கும் என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். மேலே கூறியுள்ள பெயருடைய ஆவணங்கள் அனைத்தும் & அவற்றோடு தொடர்புடைய தகவல்களையும் RTI 2f விதியின் கீழ் வழங்கலாம் என இந்திய அரசின் சட்டத் துறையால், மத்திய அரசின் கெஜட்டில் 21.06.2005 அன்று வெளியிட்ட, 23 பக்கங்களை கொண்ட RTI 2005இன் விதிமுறைகள் அடங்கிய தொகுப்பின் 2வது பக்கத்தில் கூறியுள்ளது.அந்த பக்கத்தின் நகலை தங்களுக்கு (நிதித் துறை) இணைத்துள்ளேன்.
மேலும் இத்தொகுப்பில் நடைமுறையிலுள்ள கோப்புகளை பற்றிய தகவலை வழங்க கூடாதுஎன எந்த ஒரு பக்கத்திலும் இல்லை.  அக்குழு இன்று வரை தயார் செய்துள்ள அறிக்கையின் பக்கங்களின் எண்ணிக்கையை தான் கேட்டுள்ளேன்.நான் கேட்டுள்ள தகவல்கள் அனைத்தும் RTI 2005 2f இன்படி வழங்க கூடியதாகவே உள்ளது என்பதை தெரிவிக்கிறேன்.என்று நிதித் துறைக்கு 25.10.2016 நாளிட்ட  மனுவில்மேல்முறையீடு செய்துள்ளார்.
அம்மேல்முறையீட்டு கடிதத்திற்கு நிதித் துறையின் கடித எண்.59145/நிதி (PGC-1)/2016 நாள்:30.11.2016. என்ற கடிதத்தில் இவ்வல்லுநர் குழு இன்று வரை தங்களுக்குள்ளாகவே தலைவர், உறுப்பினர்களுடன் 3 ஆலோசனை கூட்டமும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்திடம் 3 கருத்து கேட்பு கூட்டமும், அதில் 33 அரசு ஊழியர்கள் சங்கங்களும், 23ஆசிரியர்கள் சங்கங்களும் கலந்து கொண்டது என்றும், CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி3097 மனுக்கள் வந்துள்ளது. என்று பதில் வழங்கப்பட்டுள்ளது.