HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வியாழன், 15 டிசம்பர், 2016

 TNPSC: மாதிரி வினா-விடை, 

 1 தமிழ்நாட்டின் தலைநகரம் எது? சென்னை
2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு? 130058 சதுரகிலோமீட்டர்
3 தமிழ்நாட்டின் மக்கள் தொகை (2011கணக்கெடுப்பின் படி) எவ்வளவு? 72147030 பேர்
4 தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் (2011 கணக்கெடுப்பின் படி) ஆண்கள் எத்தனை பேர்? 36137975 பேர்

5 தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் (2011 கணக்கெடுப்பின்படி) பெண்கள் எத்தனை பேர்? 36009055 பேர்
6 தமிழ்நாட்டில் மக்கள் நெருக்கம் எவ்வளவு? ஒரு சதுரகிலோ மீட்டருக்கு 555பேர்
7 தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் (2011) எத்தனை சதவீதம்? 80.1 சதவீதம்
8 தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் (2011) ஆண்கள் எத்தனை சதவீதம்? 86.8 சதவீதம்
9 தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்களில் (2011) பெண்கள் எத்தனை சதவீதம் பேர்? 73.4 சதவீதம்
10 தமிழ்நாட்டில் ஆண்-பெண் பாலின விகிதம் எவ்வளவு? 1000 ஆண்களுக்கு 996 பெண்கள்
11 தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் எந்த மாநிலம் உள்ளது? ஆந்திரமாநிலம்
12 தமிழ்நாட்டின் வடமேற்கு எல்லையில் எந்த மாநிலம் உள்ளது? கர்நாடக மாநிலம்
13 தமிழ்நாட்டின் தெற்கு எல்லையில் எந்த கடல் உள்ளது? இந்து மகா சமுத்திரம்
14 தமிழ்நாட்டின் கிழக்கு எல்லையில் எந்த கடல் உள்ளது? வங்காள விரிகுடா
15 தமிழ்நாட்டின் மேற்கு எல்லையில் எந்த மாநிலம் உள்ளது? கேரள மாநிலம்
16 தமிழகத்தின் வடக்கு எல்லை எது? பழவேற்காடு ஏரி
17 தமிழகத்தின் தெற்கு எல்லை எது? கன்னியாக்குமரி
18 தமிழகத்தின் கிழக்கு எல்லை எது? கோடியக்கரை
19 தமிழகத்தின் மேற்கு எல்லை எது? ஆனைமலைக்குன்றுகள்
20 தமிழ்நாட்டின் புவியியலமைவு என்ன? 8°5'-13°35' வட அட்ச ரேகை;    76°15'-80°20' கிழக்கு தீர்க்க ரேகை
21 தமிழ்நாட்டின் மக்கள் தொகை 2001ல் எவ்வளவு? 62405679  (ஆண்கள் 31400909; பெண்கள் 31004770
22 தமிழகத்தின் மக்கள் தொகை அடர்த்தி 2001ல் என்ன? ஒரு சதுரகிலோ மீட்டருக்கு 480 பேர்
23 தமிழ்நாட்டில் 2001ல் கல்வியறிவு எத்தனை சதவீதம்? 73.47 % (ஆண்கள் 86.81 % பெண்கள் 64.55 %
24 தமிழ்நாட்டில் 2001ல் ஆண்பெண் பாலின விகிதம் என்ன? 1000 ஆண்களுக்கு 987 பெண்கள்
25 தமிழ்நாட்டில் 2011ல் ஆண் பெண் குழந்தைகள் பாலின விகிதம் என்ன? 1000 ஆண்குழந்தைகள் 946 பெண் குழந்தைகள்
26 தமிழக மக்கள் தொகை இந்திய அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 7வது இடத்தில்
27 தமிழக மக்கள் தொகை வளர்ச்சி இந்திய அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 23வது இடத்தில்
28 தமிழக பாலினவிகிதம் இந்திய அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 11வது இடத்தில்
29 தமிழக பாலின விகிதத்தில் 1 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வகிதத்தில் இந்திய அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 14வது இடம்
30 தமிழகம் கல்வியறிவில் இந்திய அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 14வது இடம்
31 தமிழக ஆண்கள் கல்வியறிவில் இந்திய அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 16வது இடம்
32 தமிழக பெண்கள் கல்வியறிவில் இந்திய அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளனர்? 15வது இடம்
33 தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை? 32 மாவட்டங்கள்
34 தமிழகத்தின் 32வது மாவட்டம் எது? திருப்பூர் (14.01.2009)
35 தமிழகத்தின் 31வது மாவட்டம் எது? அரியலூர் (01.01.2008)
36 தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களை குறிப்பிடுக
37 தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாநகராட்சிகள் எத்தனை? 12
38 தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாநகராட்சிகளை எழுதுக?
39 தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகராட்சிகள் எத்தனை? 123 (2015 வரை)
40 தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துகள் எத்தனை? 529
41 தமிழ்நாட்டில் உள்ள மொத்த கன்டோன்மெண்டஸ் எத்தனை? 2
42 தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள் எத்தனை? 12524
43 தமிழ்நாட்டில் எத்தனை சட்டசபை அவை உள்ளது? ஓரவை
44 தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு? 234 +1 ஆங்கிலோ-இந்தியன்)
45 தமிழக சட்டசபையில் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 1 (ஆங்கிலோ-இந்தியன்)
46 தமிழகத்தில் உள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 39
47 தமிழகத்தில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 18
48 தமிழகத்தில் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) உள்ளனர்? 39 + 18=57 பேர்.
49 தமிழகத்தின் உயர்நீதி மன்றம் எங்குள்ளது? சென்னை
50 தமிழக உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது? மதுரை.
MR College  Ariyalur dt