HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

திங்கள், 7 நவம்பர், 2016

Monday, November 7, 2016
07.11.1888: இந்தியாவின் புகழ்பெற்ற  விஞ்ஞானிகளுள் ஒருவரான சி.வி. ராமனின் பிறந்த தினம் இன்று!


சி.வி. ராமனின் முழுப் பெயர் சந்திரசேகர வேங்கட ராமன். இவர் தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் 07.11.1888 அன்று சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா தம்பதியரின் இரண்டாவது குழந்தையாக பிறந்தார். பள்ளிப்படிப்பை திருச்சியில் முடித்த அவர் 1902 ஆம் ஆண்டு, சென்னையிலுள்ள பிரெசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். 1904ஆம் ஆண்டு, பி. பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்று முதல் மாணவனாக திகழ்ந்த இவர், இயற்பியலுக்கான தங்கப்பதக்கதையும் பெற்றார்


நிறைய மதிப்பெண்கள் வித்தியாசத்தில் 1907 ஆம் ஆண்டு எம். பட்டம் பெற்றார். பின்னர் 1907 ஆம் ஆண்டு இந்திய நிதித் துறை பணியில் சேர்ந்தார். அவரது அலுவலக நேரம் முடிந்த பிறகு, அவர் கல்கத்தாவில் அறிவியல் அபிவிருத்திக்கான இந்திய சங்கத்தின் ஆய்வகத்தில் அவரது பரிசோதனை ஆய்வை மேற்கொண்டார். அதே ஆய்வகத்தில் அவர் ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். 1917 தொடங்கி அடுத்த பதினைந்து ஆண்டுகளாக அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தார். அங்கு அவர் இருந்த காலத்தில், அவரது ஒளியியல் மற்றும் ஒளி சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான அங்கீகாரத்தை பெற்றது

லண்டன் ராயல் சொசைட்டியால் அவர் 1924ல் அவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1929 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால் இவருக்குநைட் ஹீட்என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியாரால்சர்பட்டமும் அளிக்கப் பட்டது. 1930 ஆம் ஆண்டு ஒளி சிதறல் பற்றிய ஆராய்ச்சிக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு இயற்பியலுக்கானநோபல் பரிசுவழங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலேயே படித்து நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய அறிஞர் என்ற பெருமைப் பெற்ற சர். சி. வி. ராமன். பின்னர் இந்த கண்டுபிடிப்புக்குராமன் விளைவுஎன்று பெயரிடப்பட்டது

1930ல் பெங்களூரில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகத்தில், சி.வி. ராமன் அவர்கள் இயக்குனராக சேர்ந்தார். பின்னர், இயற்பியல் பேராசிரியராக அங்கு இரண்டு வருடங்கள் பணியில் தொடர்ந்தார். 1947 ஆம் ஆண்டில், அவர் சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தில் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், ஒரு வருடம் கழித்து, பெங்களூரில்ராமன் ஆராய்ச்சி நிலையம்நிறுவி, அங்கு அவர் நவம்பர் 21, 1970 அன்று தனது மரணம் வரை பணிபுரிந்தார்.அறிஞர்சர்.சி.வி.இராமண்