HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

TNPSC:குரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'

முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு, 3 மணி நேரத்திற்குள் எழுதி முடிப்பது சற்று கடினமாக உள்ளது. இதற்கு தினமும் ஒரு 'மாதிரி தேர்வு' எழுதிப் பழகினால் நேர மேலாண்மையில் வெற்றி பெறலாம். தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த பாடங்களை நினைவுபடுத்தி திரும்ப படித்தாலே போதுமானது. கீழ்க்கண்ட பாடங்களில் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை:
பொது அறிவு பகுதி
புதிய தேர்வு முறையில் 25 வினாக்கள் ஆப்டிடியூட் பகுதியில் கேட்கப்படுகிறது. இதில் எண்களின் வகைகள் தொடர்புடைய வினாக்கள், அடிப்படை கணித முறை, கையாளும் முறை, பின்னங்கள், தனிவட்டி, கூட்டுவட்டி பரப்பளவு மற்றும் கனஅளவு பகுதிகளில் உள்ள சூத்திரங்களை நினைவுப்படுத்தவும்.
nவிபரங்களை கையாளும் முறையில் பட்டை விளக்கப்படம், வட்ட விளக்கப்படம், கோட்டு விளக்கப்படம், அட்டவணைகள் தொடர்பான வினாக்கள்.
nபகடை, புதிர், வினாக்கள், எண் தொடர் வரிசை, விடுபட்ட எண், விடுபட்ட படம், படத்தொடரில் அடுத்து இடம் பெறும் படம்.
நடப்பு நிகழ்வுகள் பகுதியிலிருந்து 10 முதல் 15 வினாக்கள் கேட்கப்படலாம். விண்வெளி நிகழ்வுகள், தேசிய சின்னங்களின் முக்கியத்துவங்கள், சமீபத்திய விருதுகள், உலகின் முக்கிய அமைப்புகளின் சமீபத்திய மாநாடுகள், நடைபெற்ற இடங்கள் (குறிப்பாக ஐ.நா., செய்திகள்) விளையாட்டுச் செய்திகள், புதிய கண்டுபிடிப்புகள், நியமனங்கள், பாதுகாப்பு சிறப்பம்சங்கள்.
nவரலாறு பாடத்தில் கால வரிசை, முக்கிய ஆண்டுகள், சங்க காலம் முதல் சுதந்திரம் பெற்றது வரையிலான காலங்களில் நடந்த போர்களின் ஆண்டுகள், இடம், போரிட்ட நபர்கள், போர் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள்.
nஉலகை வலம் வந்த பயணிகள், அவர்கள் இந்திய வருகையின் போது இருந்த மன்னர்கள்.
nவரலாற்று புத்தகங்கள், அதன் ஆசிரியர்கள், பத்திரிகைகள், சமய சீர்திருத்த இயக்கங்கள், இந்திய தேசிய காங்.,தோற்றம், மாநாடுகள், நடந்த இடம், தலைமை வகித்தவர், முக்கிய தீர்மானங்கள்.
இயற்பியலில் அலகுகள், விதிகள், அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், அளவிடும் கருவிகள், அதன் பயன்கள் மற்றும் அறிவியல் மதிப்புகள்.
nவேதியியலில் வேதிப்பெயர்கள், சமன்பாடுகள், முக்கிய அமிலங்கள், தனிம வரிசை அட்டவணையின் சிறப்பு, அன்றாட வாழ்வில் பயன்படும் வேதிச் சேர்மங்கள்.
nதாவரவியலில் செல் அமைப்பு, தாவர, விலங்கு செல்களில் உள்ள நுண்ணுருப்பிகளின் பணிகள், தாவர பாகங்கள், வளர்ச்சி காரணிகள், வைரஸ், பாக்டீரியாவால் ஏற்படும் தாவர நோய்களை பட்டியலிடல்.
nமனித உடலியியலில் ரத்த வகைகள், ரத்த செல்களின் சிறப்பம்சம், இதய அமைப்பு, செயல்படும் விதம், நாளமிள்ளா சுரப்பிகளின் சிறப்புகள், வைட்டமின், எலும்புகளின் எண்ணிக்கை மற்றும் முக்கிய எலும்புகளின் பெயர்கள், நரம்பு மண்டலத்தில் மூளையின் அமைப்பு, அதன் பணிகள், பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள், அதை ஏற்படுத்தும் கிருமிகள்.
nபுவியியலில் மாநில தலைநகரங்கள், முக்கிய மலைகளின் அமைவிடம், காடுகளின் சிறப்பு, விலங்கு சரணாலயங்கள், அமைந்துள்ள மாவட்டம், மாநிலங்கள், அங்கு புகழ்பெற்ற விலங்குகள், முக்கிய ஆறுகளின் பிறப்பிடம், சேருமிடம், துணையாறுகள், பயனடையும் மாநிலங்கள், அணைகளை வரிசைப்படுத்தி படிக்கவும். போக்குவரத்து அமைப்பை, உணவு பயிர்களில் முதன்மை வகிக்கும் மாநிலங்கள், தாதுக்கள் காணப்படும் இடங்கள்.
nசூரியன் மற்றும் சூரியக் குடும்ப 8 கோள்களின் தனிச்சிறப்புகள், வானிலை, பருவகால காற்றுகள்.
nஇயற்கை பேரிடர்களான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, பனிப்பாறை வீழ்ச்சி, பாதிப்புகள்.
nஇந்திய அரசியல் அறிவியலில் அரசியலமைப்பு சட்டத்தின் வளர்ச்சி, அட்டவணைகள், முக்கிய ஷரத்துகள், சமீபத்திய சட்டத் திருத்தங்கள், ஜனாதிபதி, பிரதமர், முக்கிய பதவிகளை பற்றிய சிறப்பம்சங்கள், சமீபத்திய அரசியல் மாற்றம், தேர்தல் கமிஷன்.
nபொருளாதார கோட்பாடுகளை கூறியவர்கள், பொருளாதார வார்த்தைகளின் அர்த்தம், ஐந்து ஆண்டு திட்டங்களின் சிறப்பம்சம், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், கமிட்டிகள்.
பொதுத்தமிழ்
இதுவரை குரூப் - 4 தேர்வில் உள்ள கேள்விகளைப் பார்த்து, அதில் உள்ளவற்றிக்கு விடையளிக்க முயற்சிக்க வேண்டும். இதனால், எவ்வாறு கேள்விகள் கேட்கப்படும் என்ற தெளிவு கிடைக்கும்.
பகுதி (அ) இலக்கணம் : இலக்கணத்தில் முக்கியமானது தொடரும் தொடர்பும், அறிதல், பிழை திருத்தம், பெயர்ச்சொல்லின் வகையறிதல், இலக்கணக் குறிப்பறிதல், எவ்வகை
வாக்கியம் எனக் கண்டெழுதுதல், எதுகை, மோனை, இயைபு பகுதியில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு முயற்சியுடன் விடையளிக்க வேண்டும். இதற்கு பயிற்சி மிக முக்கியம். இதனால் அதிக மதிப்பெண் பெற முடியும்.
nபொதுத்தமிழ் பாடப்பகுதிக்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை படிப்பது நல்லது. தமிழ் இலக்கண எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி பகுதிகளில் தற்போது யாப்பு, அணி பகுதிகளில் இருந்து அதிகம் வினாக்கள் கேட்கப்படுகிறது.
nதுணைப்பாடத்தில் முக்கிய கூற்றுகளை கவனிக்கவும், புணர்ச்சி விதி, சந்திப்பிழைகளை நன்கு படிக்கவும்.
nநுாலின் வேறு பெயர்கள், நுாலாசிரியர் பெயர், அவரின் சிறப்பு பெயர், அறிஞர்களின் கூற்றுகள், புகழ் பெற்ற தொடர்களை கூறியவர்கள் மற்றும் இடம்பெற்ற நுால்கள்,
இலக்கண குறிப்பு.
பகுதி (ஆ) இலக்கியம் : இதிலிருந்து 30 வினாக்களுக்கு மேல் கேட்கப்படும். இதை எளிமை என அலட்சியம் கூடாது. சமயம், பண்பாடு, காலாசாரம், நாகரிகம் இப்பகுதியில் அடங்கியுள்ளது. முக்கியமானது பதிணென் மேற்கணக்கு, பதிணென் கீழ்கணக்கு, பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம். புரிந்து தெளிவாக விடையளிக்க வேண்டும்.
சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம், புதுக்கவிதை வரை உள்ள நுால்,- நுாலாசிரியர்கள், குறிப்புகள், அவர்களின் பிற இலக்கியப் படைப்புகள்.
பகுதி(இ) தமிழ் அறிஞர்கள், தமிழ் தொண்டு மறுமலர்ச்சிக் காலம் என்பது தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டாற்றியவர்களும் ஆவர். இவர்கள் உலக நாடுகளுக்கு தமிழ் சென்றடைய முக்கியமானவர்கள். இதில் மிக முக்கியமானது பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், மருதகாசி, புதுக்கவிதை கவிஞர்கள், கலைகள், சிற்பம், உரைநடை, உ.வே.சாமிநாத அய்யர், தேவ நேயப்பாவாணர், ஜி.யு. போப் வீரமாமுனிவர், தமிழ் பெண்கள், தமிழர் வணிகம், உணவே மருந்து, திரு.வி.க.,வை மனப்பாடம் செய்யாமல், அவர்களின் வாழ்க்கை சிறப்புகளை வியந்து பார்த்து படித்தால் தெளிவு கிடைக்கும்.
- பெ.வெங்கடாசலம், நிர்வாக இயக்குனர்,
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங்,
மதுரை. 90470 34271.
டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ள 5451 குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்ப நவ.,6 ல் தேர்வு நடக்கிறது. இதில் 12 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்விற்காக ஆவலுடன் உள்ளனர். இத்தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் 75 வினாக்கள், அறிவுக்கூர்மை தொடர்பாக 25 வினாக்கள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்கள். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு மதிப்பெண் பிடித்தம் இல்லை. ஆதலால் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.
தேர்விற்கு செல்லும் முன்...
*ஹால் டிக்கெட், நீலம் அல்லது கருமை நிற மை கொண்ட “பால் பாயின்ட் பேனா” மூன்று அல்லது நான்கு கொண்டு செல்க.
*தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சென்றால் பதற்றத்தை தவிர்க்கலாம்.
*கைக்கடிகாரம் அணிந்து அடிக்கடி நேரத்தை சரிபார்க்கவும்.
*தேர்வுக்கு முதல் நாள் இரவு, நன்கு துாங்கவும். துாக்கமின்றி சென்றால், யோசிக்கும் திறன் குறையும்.
*கவனச் சிதைவு இன்றி முழு கவனத்துடன் கேள்விகளை படித்து பார்க்கவும்.
*தன்னம்பிக்கையுடன் கூடிய பயிற்சி, முயற்சியே போட்டித் தேர்வுகளில் வெற்றியை தேடித்தரும். இதை மனதில் வைத்து படித்து நீங்களும் அரசு ஊழியராக வாழ்த்துகள்!