HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வெள்ளி, 7 அக்டோபர், 2016

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. மவுரியப் பேரரசின் முக்கிய வரி - நிலவரி
2. மவுரியர் கால கல் தூண் - சாரநாத் கல்தூண்
3. மவுரியர் கலை வளர்ச்சியினால் எழுந்த ஸ்தூபி - சாஞ்சி ஸ்தூபி
4. மவுரியர் கலையை வெளிப்படுத்தும் குகைக்கோவில் - பராபர் குகைக் கோவில்
5. குஷானர்கள் இந்தியாவைக் கைப்பற்றிய காலம் - கி.மு.200 முதல் கி.மு.100
6. குஷானர்களின் இனம் - யூச்சி
7. குஷானர்களின் தலைநகரம் - புருஷபுரம்
8. குஷானர்களின் வீழ்ச்சிக்குப் பின் வந்த பேரரசு - குப்தப் பேரரசு
9. கனிஷ்கர் சார்ந்திருந்த சமயம் - புத்தம்
10. கனிஷ்கர் அரியணை ஏறிய ஆண்டு - கி.பி. 78
11. கனிஷ்கர் சார்ந்திருந்த சமயம் - மகாயான புத்த சமயம்
12. கனிஷ்கர் அவையிலிருந்த புத்த சமய அறிஞர் - அசுவ கோசர்
13. புத்த மதத்தில் மகாயானம் -ஹீனயானம் என இரு பிரிவுகள் தோன்றியது - கனிஷ்கர் காலத்தில்
14. கனிஷ்கர் கட்டிய புத்த சமய மாநாடு - நான்காம் புத்த மாநாடு
15. கனிஷ்கர் காலத்தில் தோன்றிய சிற்பக்கலை - காந்தார சிற்பக்கலை
16. புத்தரைக் கடவுளாக வழிபட்ட சமயம் - மகாயானம்
17. காந்தார சிற்பக்கலை என்பது - இந்திய-கிரேக்க கலை இணைந்தது.
18. முதலாம் சந்திரகுப்தரைத் திருமணம் செய்து கொண்ட இளவரசி - லிச்சாவி நாட்டு இளவரசி
19. சமுத்திர குப்தர் யாருடைய புதல்வர் - முதலாம் சந்திர குப்தர்
20. சமுத்திர குப்தரின் வெற்றியைத் குறிப்பிடும் கல்வெட்டு - அலகாபாத் கல்வெட்டு
21. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர் - சமுத்திர குப்தர்
22. விக்கிரமாதித்தர் என அழைக்கப்பட்டவர் - இரண்டாம் சந்திரகுப்தர்
23. இரண்டாண் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியா வந்த சீனப் பயணி - பாஹியான்
24. இந்தியாவில் பாஹியான் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார் - 9 ஆண்டுகள்
25. இரண்டாம் சந்திரகுப்தர் அவையை அலங்கரித்த அறிஞர்கள் - நவரத்தினங்கள்
26. நவரத்தினங்களில் முதன்மையானவர் - காளிதாசர்
27. குப்தர்கள் காலத்தில் அமைந்த குகைகோவில் எங்குள்ளது - உதயகிரி
28. குப்தர்கள் கால கட்டிடக்கலைக்கு நல்லசான்று - தியோகரின் தசாவராக் கோவில்
29. குப்தர்கள் கால ஒவியக் கலைக்குச் சான்று - அஜந்தா குகை ஒவியம்
30. குப்தர் காலத்தில் இருந்த வானியல், கணிதம், ஜோதிடம் ஆகியவற்றின் அறிஞர் - தன்வந்திரி
31. குப்தர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட புகழ்பெற்ற பல்கலைக்கழகம் - நாளந்தா பல்கலைக்கழகம்
32. குப்தர்கள் காலத்தில் இருந்த சிறந்த வானியல் அறிஞர் - ஆரியப்பட்டா
33. ரகுவம்சம் என்னும் காவியத்தைப் படைத்தவர் - காளிதாசன்
34. குப்தர்கள் காலம் இயற்றிய வரலாற்றில் - பொற்காலம்
35. வர்த்தமானங்களில் தலை சிறந்தவர் - ஹர்ஷவர்த்தனர்
36. ஹர்ஷவர்த்தனரின் ஆட்சிக்காலம் - கி.பி. 606 முதல் 647 வரை
37. ஹர்ஷவர்த்தினரின் தந்தை - பிரபாகர வர்த்தனர்
38. ஹர்ஷவர்த்தினரின் தமையன் - ராஜ்யவர்த்தனர்
39. ஹர்ஷவர்த்தனரின் சகோதரி - ராஜ்ஸ்ரீ
40. ஹர்ஷவர்த்தனரின் தமையன் ராஜ்யவர்த்தனைத் தந்திரமாகக் கொன்றவன் - தேவகுப்தன்
41. ஹர்ஷவர்த்தனர் அரியணை ஏறும் பொழுது அவருக்க வயது - 16
42. ஹர்ஷர் தம் தலைநகரை எங்கிருந்து எங்கு மாற்றினார் - தானேஸ்வரம் - கன்னோசி
43. ஹர்ஷரின் தக்காணப்படையெடுப்பில் அவருடன் போரிட்ட மன்னர் - இரண்டாம் புலிகேசி
44. ராஜ்ஸ்ரீயை மண முடித்தவர் - மவுகாரி மன்னர் கிரகவர்மன்
45. கிரகவர்மனைக் கொன்று ராஜ்ஸ்ரீயைச் சிறைப்பிடித்தவர் - தேவகுப்தன் - சகாங்கன்
46. யுவான்சுவாங்கின்ன பயணக்குறிப்புகளின் பெயர் - சியூக்கி
47. இந்திய அரசின் சின்னமான நான்முகச் சிங்கம் எதில் அமைந்துள்ளது - சாரநாத் கல்தூண்
48. தேசியக் கொடியில் அமைந்துள்ள சக்கரம் - அசோகர் தர்மச்சக்கரம்
49. நான்காவது பவுத்த மாநாட்டை கட்டியவர் - கனிஷ்கர்
50. ஹர்ஷரைபர் பற்றி அறிய உதவும் நூல் - ஹர்ச சரிதம்