HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

செவ்வாய், 25 அக்டோபர், 2016

ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய 10 டிப்ஸ்

உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள்.

ஒன்றன்பின் ஒன்றாக தொற்றத் தொடங்கும்

உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு டயட் என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ஏராளம். 

நடைபயணம், ஓட்டம், நீச்சல், விளையாட்டுகள் என்று வேறு சில முயற்சிகளில் இறங்கி எடையைக் குறைக்க ஆசைப்படுபவர்களும் உண்டு. மருந்து மாத்திரைகள், சத்துமாவுகள், பழங்களை சாப்பிட்டு சிலர் பயன் தேடுகிறார்கள். 

எத்தனையோ வழியில், எவ்வளவோ பேர் எடையைக் குறைக்க ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உடல் எடைப் பிரச்சினை உலகம் முழுவதும் இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள். 

7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது. 

அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும். 

1. ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும். 

2. இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது. 

3. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும். 

4. நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
ஐந்தாம் நாள் சிறிதளவு(ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர்(மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது. 

5. ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம். 

6. ஏழாவது நாள் ஒரு கப் சாதம் - காய்கறிகளுடன், பழ ஜுஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜுஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது. 

7. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு. 

இந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான். 

எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம். முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும். 

3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும். நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது. 

5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம். 

அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது. 

அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது ஜெனரல் மோட்டார்ஸ் டயட் என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.