HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

புதன், 30 நவம்பர், 2022

கரும்பு சாகுபடி இயந்திரம்: வாடகை மையம் நிறுவ ரூ.60 லட்சம் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?

 

கரும்பு சாகுபடி இயந்திரம்வாடகை மையம் நிறுவ ரூ.60 லட்சம் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?





சாகுபடிக்கு போதிய வேலையாட்கள் கிடைக்காத நிலையில்விவசாயிகள் உரிய காலத்தில் சாகுபடிப் பணிகளை மேற்கொள்வதற்காகவேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தினை தமிழக விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நடப்பு 2022-2023ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள்

தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம்இளைஞர்களை விவசாய தொழிலில் ஈர்த்திடவிவசாயிகள்தொழில் முனைவோர்கள்பதிவு செய்த விவசாய சங்கங்கள்உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் கிராமவட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் நிறுவமானியம் போன்ற வகைகளில் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்தினை தமிழகத்தில், 2022-2023ம் ஆண்டில் செயல்படுத்துவதற்காகரூ.150 கோடி ஒன்றியமாநில அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதுஅதன்படிமுதற்கட்டமாக ரூ.41.67 கோடி நிதியில் இத்திட்டத்தினை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதிக வேலையாட்கள் தேவைப்படும் கரும்பு சாகுபடியில் இயந்திரமயமாக்குதலை ஊக்குவிப்பதற்காகரூ.150 இலட்சம் மதிப்பீட்டில் கரும்பு சாகுபடிக்கான இயந்திர வாடகை மையம் அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு 40% மானியம் அதிகபட்சமாக ரூ.60 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

பங்களிப்புத் தொகைக்கு 3 சதவிகித வட்டி மானியத்துடன் கடன் வசதி,வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க முன்வரும் விவசாயக் குழுக்களுக்குமானியம் போக மீதமுள்ள பங்களிப்புத் தொகையை செலுத்துவதற்குவங்கியின் மூலம் கடன் பெற்றுத்தரவும் அரசு நடவடிக்கை எடுக்கும்இவ்வாறு பெறும் கடனுக்குவேளாண் உட்கட்டமைப்பு நிதியின் (Agriculture Infrastructure Fund) கீழ் மூன்று சதவிகித வட்டி மானியம் கிடைக்கும்.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ அல்லது http://aed.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்கூடுதல் தகவலுக்கு அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்:

ஆதார் அட்டையின் நகல்

புகைப்படம் (Passport Size Photo)

சொந்த நிலத்திற்கான சிட்டா மற்றும் அடங்கல்

ஆதி திராவிடபழங்குடியின விவசாயிகளாக இருந்தால்சாதிச் சான்றிதழ் மற்றும் சிறுகுறு விவசாயிக்கான சான்றிதழ் நகல்

கிராமங்களில் சாகுபடிப் பணிகளுக்கு போதிய வேலையாட்கள் கிடைக்காமல் அவதியுறும் வேளாண் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டுஅரசு மேற்கொண்டு வரும் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.




**********************************