HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

திங்கள், 5 ஏப்ரல், 2021

ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 05, 06.04.2021 தேதிகளில் என்னென்ன செய்ய வேண்டும்? - தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 05, 06.04.2021 தேதிகளில் என்னென்ன செய்ய வேண்டும்? - தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்....

 







வரும், 6ம் தேதி காலை, 5:30 மணிக்கு நடக்கும் ஓட்டுப்பதிவில், குறைந்தபட்சம், 50 ஓட்டுப்பதிவு செய்ய வேண்டுமென, ஓட்டுச்சாவடி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு தொகுதியும், ஓட்டுப்பதிவுக்கு தயாராகி வருகின்றன. வரும் 6ம் தேதி காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.



ஓட்டுச்சாவடி அலுவலர்கள், நாளை (5ம் தேதி) மதியம், 12:00 மணிக்குள் ஓட்டுச்சாவடிக்கு சென்றுவிட வேண்டும். மாவட்ட அளவில், 16 ஆயிரத்து, 045 பேர், ஓட்டுச்சாவடி தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.


ஓட்டுப்பதிவு நாளில், காலை, 5:00 மணிக்கே, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். காலை, 5:30 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும். குறைந்தபட்சம், இரண்டு வேட்பாளர் ஏஜன்ட் இருந்தாலே, மாதிரி ஓட்டுப்பதிவை துவக்கலாம்.



அதன் பின்னரும், வராதபட்சத்தில், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் தலைமையில், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தலாம். ஒவ்வொரு சாவடியிலும், குறைந்தபட்சம், 50 ஓட்டுப் பதிவு செய்ய வேண்டும்.கட்டாயம், 'நோட்டா'வுக்கும் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும். மாதிரி ஓட்டுப்பதிவை முடித்து, 'க்ளோஸ்' பட்டனை அழுத்த வேண்டும். 



அதன்பின், 'கன்ட்ரோல் யூனிட்'டில் உள்ள, 'பேலட்' என்ற பட்டனை அழுத்தி, அதற்குபிறகு ஓட்டளிக்க முடியாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.'ரிசல்ட்' பார்க்கணும்!இறுதியாக, 'ரிசல்ட்' பட்டனை அழுத்தி, மாதிரி ஓட்டுக்களாக பதிவான ஓட்டுக்களை சரிபார்க்க வேண்டும். பிறகு, 'கிளியர்' பட்டனை அழுத்தி, இயந்திரத்தை சரிசெய்துகொள்ளலாம். இறுதியாக, 'டோட்டல்' என்ற பட்டனை அழுத்தி, 'ஜீரோ' என்று இருப்பதை முகவர்களிடம் காட்ட வேண்டும்.



'விவி பேட்'டில் உள்ள ரசீதுகளை எடுத்து, மாதிரி ஓட்டுப்பதிவுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். ரசீதுகளின் பின், மாதிரி ஓட்டுப்பதிவு என எழுதி, கருப்புநிற உறையில் போட்டு, 'சீல்' வைத்து பத்திரமாக வைக்க வேண்டும்.



அதை, பிரத்யேக பெட்டியில் வைத்து, 'சீல்' வைத்து ஏஜன்டுகள் கையெழுத்து பெற்று பத்திரமாக வைக்க வேண்டும்.மாதிரி ஓட்டுப்பதிவு தொடர்பான இரண்டு அறிக்கை தயாரித்து, மண்டல தேர்தல் அலுவலர் வரும்போது, ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், 'கன்ட்ரோல் யூனிட்'டில் 'கிரீன்' பேப்பர் சீல்' மற்றும் 'ஸ்ட்ரிப் சீல்' வைத்து, ஓட்டுப்பதிவுக்கு தயார்படுத்த வேண்டுமென, பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.



........................................................................

சனி, 3 ஏப்ரல், 2021

தேர்தலுக்காக. இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் பட்டியல்.. முழு விவரம்

 தேர்தலுக்காக. இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் பட்டியல்.. முழு விவரம்

......


 
 0

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், 1 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

அந்த சிறப்பு பேருந்துகள் விவரம்


மாதாவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்

ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

 

கேகே நகர் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்

 

ஈ.சி.ஆர் வழியாக புதுச்சேரி கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

 

தாம்பரம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்

 

கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக விக்கிரவாண்டி, பண்ருட்டி செல்லும் பேருந்துகள்

 

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் 

சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் 

திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பர,ம் காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

 

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் 

திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்.

 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள். 

 

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள்.

 




........................................................



வீட்டில் வற்றாத செல்வ வளத்தை பெற, புதன்கிழமை அன்று குடும்பத்தலைவி என்ன செய்ய வேண்டும் ...

 வீட்டில் வற்றாத செல்வ வளத்தை பெற, புதன்கிழமை அன்று குடும்பத்தலைவி என்ன செய்ய வேண்டும் ?





பொதுவாகவே ஒரு குடும்பத்தை, நல்ல முறையில் வழிநடத்திச் செல்ல வேண்டிய கடமை குடும்பத் தலைவிக்கு உள்ளது. அதாவது ஒரு வீட்டின் தலைமைப் பொறுப்பை எடுத்து நடத்தக்கூடிய அந்த பெண்ணாக பட்டவள், கட்டாயமாக புத்திக்கூர்மையோடும், தெளிவோடும் இருக்க வேண்டியது மிக மிக அவசியம். 




ஏனென்றால் அறிவாற்றலும், திறமையும் நிறைந்த ஒரு பெண்ணால் மட்டுமே குடும்பத்தை பக்குவமாக முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இப்படி இருக்க, இத்தனை பொறுப்புகளை உடைய ஒரு பெண்ணின் புத்தி கூர்மையாக இருக்க வேண்டும் என்றாலும், அவள் வழிநடத்திச் செல்லும் குடும்பமானது எப்போதுமே தன தானியம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றாலும், புதன்கிழமை அன்று குடும்பத்தலைவி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இந்த பரிகாரத்தை செய்யாத பெண்மணிகள் எல்லாம் புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் என்று சொல்ல வரவில்லை. புதன்கிழமை அன்று இந்த ஒரு விஷயத்தை செய்தால், அந்தப் பெண்ணின் புத்திக்கூர்மை மேலும் அதிகரிக்கும். அவருடைய அறிவாற்றல் மேலும் அதிகரிக்கும் என்பதை குறிப்பிடுவதற்காக இந்த பதிவு. நம்பிக்கையுள்ளவர்கள் இதை தொடர்ந்து 11 வாரங்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு நல்ல பலன் அளித்தால் வாழ்நாள் முழுவதும் இந்த ஒரு விஷயத்தை கடைப்பிடிப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. நம்முடைய குடும்ப நன்மைக்குத் தானே!


புதன்கிழமை அன்று, பெண்கள் வெந்தய குளியலை எடுத்துக்கொள்வது, மிகவும் நல்லது என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது செவ்வாய்க் கிழமை இரவே, சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு புதன்கிழமை, அந்த வெந்தயத்தை நன்றாக அரைத்து, காலை 6.00 மணியிலிருந்து 6.30 மணிக்குல், தலையில் தேய்த்து, தலைக்கு குளித்து விட வேண்டும். வெகுநேரம் தலையில் வெந்தயத்தை ஊற வைத்துவிட வேண்டாம். குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்களுக்கு காய்ச்சல் வரும் என்பது குறிப்பிடத்தக்கது

இப்படி வாரந்தோறும் புதன்கிழமை அன்று வெந்தய குளியலை குளித்து வர, அந்தப் பெண்ணின் புத்தி கூர்மையையும் அதிகரிக்கும், அந்தப் பெண்மணி வசிக்கும் வீட்டின் தன தானிய திருக்கும் எந்த ஒரு குறைபாடும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு சேர்த்து புதன்கிழமை அன்று உங்கள் வீட்டின் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வந்தால், மேலும் அதிக பலனை அடையலாம்.



அதாவது, வீட்டில் எதிர்பாராமல் ஏதாவது ஒரு பிரச்சனை என்று வந்தால், அதற்கான நல்ல முடிவினை எடுக்க வேண்டிய கடமை அந்த வீட்டின் குடும்பத் தலைவியான பெண்ணுக்குத்தான் உள்ளது. இப்படிப்பட்ட இந்தப் பெண், “எந்த நேரத்தில் எந்த முடிவை எடுக்க வேண்டும். எந்த நேரத்தில் எந்த முடிவை எடுக்கக் கூடாது”. என்பதையும் தெளிவாக தீர்மானிக்க வேண்டும். தன் கணவர் தன் கையில் கொடுக்கும் வருமானத்தை வைத்து, சிக்கனம் பிடித்து, தன்னுடைய குடும்பத்தை எப்படி மேலோங்க செய்ய வேண்டும்?


இப்படி பல வகையான புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதற்கும் இந்த வெந்தய குளியல் மிகவும் உதவியாக இருக்கும். வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை நினைத்து, நெல்லிக்காயை தலைக்கு தேய்த்து குளித்தால் எவ்வளவு நல்லதோ, அதே போல் புதன்கிழமை வெந்தயக் குளியலிடேவது என்பது, ஒரு பெண்ணுக்கு மிக மிக நல்ல பலனைக் கொடுக்கும். திருமணம் ஆன பெண்கள் தான் வெந்தய குளியலிட வேண்டுமா? என்ற சந்தேகம் வேண்டாம். திருமணமாகாத பெண்களும் வெந்தய விழுதை தலையில் தேய்த்துக் குளிப்பதில் தவறில்லை.


..................................................................

தலைமை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மாதிரி நிரப்பப்பட்ட PRESIDING OFFICER’S DIARYஎளிமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே பக்கத்தில் சேமித்து

 தலைமை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மாதிரி நிரப்பப்பட்ட PRESIDING OFFICER’S DIARYஎளிமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே பக்கத்தில் சேமித்து  வைத்துக்கொள்ளுங்கள் தேர்தல் பணியை எளிமையாக்கும்:

 

தலைமை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மாதிரி நிரப்பப்பட்ட PRESIDING OFFICER’S DIARYஎளிமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே பக்கத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் தேர்தல் பணியை  எளிமையாக்கும்.

வியாழன், 1 ஏப்ரல், 2021

SBI ல் ஈஸியான லோன் இதுதான் ... RS 20 இலட்சம் வரை கடன் ஒரு SMS போதும்..!!!!

 SBI bank Tamil News: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி, அதன் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐயின் எக்ஸ்பிரஸ் கிரெடிட் தனிநபர் கடன் எனும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையில், எஸ்பிஐயின் வாடிக்கையாளர், ஒரு மிஸ்ட் கால் அல்லது எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும், இந்த சேவையின் மொத்த விபரங்களும் கிடைத்து விடும்.

எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கின் பதிவில், 'கடன் குறைந்தபட்ச ஆவணங்களுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும், மிஸ்ட் கால் அல்லது எஸ்எம்எஸ் சேவை மூலம் கடன் பெற விரும்புவர்களுக்கு வட்டி விகிதம் 9.60 சதவீதமாகும்' என்று தெரிவித்துள்ளது. இது அனைத்து இந்திய வங்கிகளையும் விட மிகக் குறைவான ஒன்றாகும்.


இந்த சேவையில் எஸ்பிஐ சம்பள கணக்கு வைத்திருப்பவர் ரூ .25,000 முதல் ரூ .20 லட்சம் வரை கடன் தொகை பெறலாம். கடன் பெரும் வாடிக்கையாளர், அவரது முதல் கடனில் ஈ.எம்.ஐ.களை சரியான நேரத்தில் செலுத்தியிருந்தால், இந்த சேவை ரூ .5 லட்சம் முதல் ரூ .20 லட்சம் வரை ஓவர் டிராஃப்ட் கடன் தொகையை வழங்குகிறது. ஒட்டுமொத்த கடன் ஈ.எம்.ஐ / என்.எம்.ஐ விகிதத்திற்கு 50 சதவீதத்திற்கு உட்பட்டு முதல் கடன் வழங்கப்பட்ட பின்னர், எந்த நேரத்திலும் இரண்டாவது கடன் தகுதி பெறுகிறது. சுவாரஸ்யமாக, இந்த எஸ்பிஐ தனிநபர் கடன் எந்த உத்தரவாதமும் அல்லது பாதுகாப்பும் இல்லாமல் வழங்கப்படும்.

எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சேவையைப் பற்றி ஒரு இணைப்பை வழங்கியுள்ளது. 'இது உங்கள் திருமணம் அல்லது விடுமுறை, திட்டமிடப்படாத அவசரநிலை அல்லது திட்டமிட்ட கொள்முதல், உங்கள் அனைத்து தேவைகளுக்கும் எஸ்பிஐயின் எக்ஸ்பிரஸ் கிரெடிட் தனிநபர் கடன் மூலம் குறைந்தபட்ச ஆவணங்களுடன் விரைவான ஒப்புதல் மற்றும் உடனடி விநியோகத்தைப் பெறுங்கள், 'சேர்ப்பது,' எங்கள் தொடர்பு மையத்திலிருந்து திரும்ப அழைப்பைப் பெற 7208933142 என்ற எண்ணில் அல்லது 7208933145 இல் 'தனிப்பட்ட' என்று எஸ்எம்எஸ் அனுப்புங்கள்.' என்று தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ தனிநபர் கடனுக்கான தகுதிகள்

1] எஸ்பிஐ உடன் சம்பள கணக்கு கொண்ட நபராக இருக்க வேண்டும்.

2] குறைந்தபட்ச மாத வருமானம் மாதத்திற்கு ரூ .15000 மேல் இருக்க வேண்டும்.

3] EMI / NMI விகிதம் 50 சதவீதத்திற்கும் குறைவாக; மற்றும்

4] எஸ்பிஐ சம்பள கணக்கு வைத்திருப்பவர் மத்திய / மாநில, மத்திய பொதுத்துறை நிறுவனம் மற்றும் லாபம் ஈட்டும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தேசிய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் வங்கியுடன் அல்லது இல்லாமல் தொடர்பில் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.


..........................................................