HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

சனி, 31 மார்ச், 2018

🕉 ஒம் நம சிவாய 🕉 அருணாசலேஸ்வரரை நினைத்தாலே முக்தி நிச்சயம்

சிவபெருமான் அருள்பாலிக்கும் எத்தனையோ தலங்களுக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். அந்த தலங்களுக்கு எல்லாம் இல்லாத ஒரு மிக முக்கியமான சிறப்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தலத்துக்கு மட்டுமே உண்டு.

அதாவது அருணாசலேஸ்வரரை நீங்கள் திருவண்ணாமலைக்கு வந்துதான் வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனம் கசிந்து, ஆத்மார்த்தமாக இருந்த இடத்தில் இருந்தே அருணாசலேஸ்வரரை நினைத்தாலே போதும், நிச்சயம் முக்தி கிடைக்கும்.

அதனால்தான் அருணாசலேஸ்வரருக்கு நிகர் அருணாசலேஸ்வரர்தான் என்று அனைத்துத் தரப்பினரும் சொல்கிறார்கள். இந்த சிறப்பை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டுமானால், முதலில் அருணாசலேஸ்வரரின் மகிமையை புரிந்து கொள்ள வேண்டும்.

அயோத்தி, மதுரை, மாயாபுரி, காசி, காஞ்சீபுரம், அவநிதி, துவாரகை ஆகிய 7 தலங்களும் முக்தி தரும் தலங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. இந்த 7 தலங்களை ஒரு தட்டிலும், திருவண்ணாமலையை மற்றொரு தட்டிலும் வைத்தால், திருவண்ணாமலை தலமே உயர்ந்த சிறப்புடையது என்பது தெரிய வரும் என்று அருணாசலபுரத்தில் சைவ எல்லப்ப நாவலர் குறிப்பிட்டுள்ளார்.

சிலருக்கு அருணாசலேஸ்வரரை விட உயர்ந்த தலம் ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகம் ஏற்படுவதுண்டு. அத்தகைய எண்ணம் வரவே கூடாதாம். அப்படி எண்ணம் வந்தால் இதுவரை அவர் செய்த தான, தர்ம புண்ணியம் அனைத்தும் கைவிட்டுப் போய் விடும் என்று அருணாசலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடி, முடி காண முடியாதபடி அக்னிப் பிழம்பாகக் காட்சியளித்த சிவபெருமான், தன்னை குறுக்கிக் கொண்டு மலையாகவும், சுயம்பு லிங்கமாகவும் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இதனால் திருவண்ணாமலை சென்று வழிபட்டால் ஈசனை நேரில் பார்த்து வழிபட்டதற்கான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

திருவண்ணமலை தலத்தில் உள்ள லிங்கம் சுயம்பு லிங்கமாகும். ராஜகோபுரம் தாண்டி ஒவ்வொரு பிரகாரமாக சென்ற பிறகு கருவறையில் உள்ள மூலவர் திருச்சுற்று வரும். இந்த பிரகாரம் மற்ற பிரகாரங்களை விட சற்று உயரமாக கட்டப்பட்டுள்ளது.

கொடிக்கம்பம் பகுதியில் இருந்து கருவறை பகுதியைப் பார்த் தால் இது உங்களுக்குத் தெரிய வரும். அங்கு முதல் பிரகாரத் துக்குள் நுழையும் வாசலை வேணு உடையான் கதவு என்றும், கர்ப்பக் கிரகத்துக்குள் நுழையும் வாசலை உத்தமச் சோழன் வாசல் என்றும் சொல்கிறார்கள்.

கருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் நின்று அருணாசலேஸ்வரரை பார்த்ததுமே, நமது மனம் நம்மிடம் இருக்காது. அண்ணாமலையாரிடம் ஓடிப் போய் ஒட்டிக் கொள்ளும்.

மற்ற ஆலயங்களில் நாம் பார்க்கும் லிங்க மேனிக்கும், இத்தல லிங்க மேனிக்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் உள்ளது. மற்ற தலங்களில் ஆவுடையாரின் மத்தியில் லிங்கத்தை நிலை நிறுத்தி இருப்பார்கள். ஆனால் திருவண்ணாமலையில் அப்படி அல்ல.

அருணாசலேஸ்வர் அடிமுடி காண முடியாதபடி அற்புதம் செய்தவர் என்பதால் சுயம்பு லிங்கத்தை சுற்றி ஆவுடையாரை அமைத்துள்ளனர். அதாவது ஆவுடையாரின் ஒரு பகுதி பிரம்ம பீட மாகவும், மற்றொரு பகுதி விஷ்ணு பீடமாகவும் உருவாக்கப் பட்டுள்ளது.

அந்த இரு பகுதியையும் ஒன்றாக சேர்த்து ஆவுடையார் அமைத்துள்ளனர். பெரும்பாலும் லிங்க ஆவுடையார் சதுர வடிவில் இருக்கும். ஆனால் திருவண்ணாமலையில் ஆவுடையார் வட்ட வடிவில் இருக்கிறது.

ஆகம விதிப்படி அண்ணாமலையார் லிங்கத்தின் ஒரு பகுதி பிரம்ம பீடமாகவும், மற்றொரு பகுதி விஷ்ணு பீடமாகவும், இன்னொரு பகுதி சக்தி பீடமாகவும் கருதப்படுகிறது. எனவே கருவறை அண்ணாமலையானை வழிபட்டாலே பிரம்மா, விஷ்ணு, சக்தி ஆகியோரையும் சேர்த்து வழிபட்ட பலன்கள் கிடைக்கும். இந்த அரிய தத்துவத்தை நினைவில் வைத்துக் கொண்டு அண்ணாமலையாரை வழிபட்டால், நிச்சயம் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

மற்ற தலங்களில் லிங்கத்தையும் ஆவுடையாரையும் அஷ்ட பந்தனத்தில் நிலைநிறுத்தி இருப்பார்கள். ஆனால் இங்கு ருத்ரபாகம் சொர்ணபந்தனத்துடன் காணப்படுகிறது.

கருவறைக்குள் சென்று பூஜை செய்யும் எல்லா சிவாச்சார் யார்களும் இந்த சுயம்பு லிங்கத்தைத் தொட்டு விட முடியாது. தீட்சைப் பெற்று பட்டம் மற்றும் இளவரசு பட்டம் எனும் அந்தஸ்து பெற்றவர்கள் மடடுமே இந்த லிங்கத்தை தொட்டு அபிஷேகம் செய்ய முடியும்.

இநத லிங்கமேனி உச்சிப் பகுதியில் சிறு வெட்டுக் காயம் போன்று வடு உள்ளது. அதற்கான காரணம் தெரியவில்லை. உளியால் செதுக்கப்படாத லிங்கம் என்பதால் அது சொர, சொரப்பாக காணப்படுகிறது. எதிர்த் திசையில் தடவினால் கையை கிழித்து விடும் என்று தொட்டு அபிஷேகம் செய்யும் சிவாச்சார்யார் ஒருவர் தெரிவித்தார்.

சிவாச்சார்யார்களில் “ஸ்தானீகம்” என்று ஒரு பிரிவினர் உள்ளனர். இவர்களது பணியே அண்ணாமலையாரை அலங்காரம் செய்வதுதான். இவர்கள் பூஜை எதுவும் செய்ய மாட்டார்கள்.

அண்ணாமலையாருக்கு தினமும் 6 தடவை அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்வார்கள். காலையில் திருமஞ்சனநீர் எடுத்து வந்து கொடி மரம் முன்புள்ள படியை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வார்கள். பிறகு பள்ளியறை எழுச்சி நடைபெறும்.

ஹோமம் முடிந்து சூரிய, சந்திர, நந்தி துவார பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு காலை 5.30 மணிக்கு முதல் அபிஷேகம் நடைபெறும். திருவண்ணாமலை ஆலயத்துக்குள் 12 கிணறுகள் உள்ளன. அதில் மூலவருக்குரிய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார்கள்.

மாவுப்பொடி, மஞ்சள், அபிஷேகப் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு நறுமணப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். சுமார் 1 மணி நேரம் இந்த அபிஷேகம் நடைபெறும்.

பிறகு லிங்கத்துக்கு தங்க கவசம், வெள்ளிக் கவசம் சாத்தி அலங்காரம் செய்வார்கள். ஒருவித சாமந்தி தவிர மற்ற அனைத்து வாசனைப் பூக்களையும் கொண்டு ஈசனை அலங்கரிப் பார்கள்.

இதையடுத்து ஆராதனை நடைபெறும். ரத ஆரத்தி, திரிநேத்திர தீபம், பஞ்ச தட்டு தீபம், பூர்ணகும்பம், கண்ணாடி, குடை, விசிறி, சாமரம் என்று அண்ணா மலையாருக்கு 16 வகை தீபம் மற்றும் பூஜைகள் நடத்துவார்கள்.

ஆனால் அண்ணா மலையாருக்கு படைக்கப்படும் நைவேத்தியம் மட்டும் நேரத்துக்கு நேரம் மாறுபடும். காலை-வெண் பொங்கல், காலசந்தி பூஜை- புளி சாதம், சர்க்கரைப் பொங்கல், உச்சிக்காலம்- வடை பாயாசத்துடன் குழி தாம்பளத்தில் அன்னம். சாயரட்சை-புளி சாதம், வடை, சுண்டல், இரண்டாம் சாமம்-புளி சாதம், அர்த்தஜாமம்- மிளகு சீரக சாதம், (செரிமானத்துக்காக மிளகு சேர்க்கிறார்கள்), பள்ளியறை-பால், அடை, அப்பம்.

அணணாமலையாருக்கு நைவேத்தியம் படைக்கப்படுவதை பக்தர்கள் யாரும் பார்க்கக் கூடாது என்பது ஐதீகமாகும். அதுபோல மூலவரை படம் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1965-ம் ஆண்டு புகைப்பட கலைஞர் ஒருவர் தடையை மீறி மூலவரைப் படம் பிடித்தார். மறுநாள் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

ஆனால் ரமணர் ஆசிரமத்தில் அண்ணாமலையார் கருவறை படம் ஒன்று உள்ளது. அந்த படம் எப்போது, யாரால் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

அண்ணாமலையார் முன்பு ஆணவம், அகந்தையுடன் தலைக்கனத்துடன் நடந்து கொண்டால் அவ்வளவுதான், அண்ணாமலையார் தமது திருவிளையாடலைக் காட்டி விடுவார். ஆணவத்தோடு நடந்து கொள்பவர்கள் அட்ரஸ் இல்லாமல் போய் விடுவார்கள்.

நிறைய பேருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்கள், இத்தலத்துக்குள் வந்து முடிசூடி கொண்டாலும், அண்ணாமலையார் சன்னதியில் பதவி ஏற்பு விழாவை நடத்துவதில்லை. விநாயகர் சன்னதி முன்பு நின்றுதான் முடி சூட்டிக் கொள்வார்கள்.

அவ்வளவு ஏன்... அண்ணாமலையார் சன்னதியில் அமர்ந்து திருமணம் கூட செய்து கொள்ள மாட்டார்கள். இன்றும் இது நடைமுறையில் உள்ளது.

திருமணம் உள்ளிட்ட எல்லா கோரிக்கைகளும் உண்ணாமுலை அம்மன் சன்னதியில்தான் நடைபெறும். அந்த காலத்தில் அண்ணாமலையார் முன்பு நின்று பஞ்சாங்கம் படிப்பதை வழக்கத் தில் வைத்திருந்தனர். அதுபோல ஒவ்வொரு சுவாமிக்கும் பூஜை நடக்கும்போது அதிர்வேட்டு போடுவார்கள். இத்தகைய பழக்கம் எல்லாம் இப்போது கடைபிடிக்கப்படவில்லை.

ஆனால் சில பழக்கங்கள் உறுதியாக கடை பிடிக்கப்படுகின்றன. அதில் ஒன்று பள்ளியறைக்கு அம்மன் செல்வது. மற்ற சிவ தலங்களில் அம்மனைத் தேடிதான் ஈசன் செல்வார். ஆனால் இங்கு ஈசனைத் தேடி உண்ணாமுலை அம்மன், “வைபோக நாயகி” என்ற பெயரில் செல்கிறாள்.

சுவாமி திருமேனி ரூபமாக பள்ளியறைக்கு செல்ல மாட்டார். மகாமேரு சக்கர வடிவத்தில்தான் செல்வார். காலையில் அந்த மகாமேடு பள்ளியறையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கருவறை வெளிமேடையில் வைக்கப்படும்.

மற்ற தலங்களில் ஈசனுக்கு வலது பக்கத்தில் அம்பாள் வீற்றிருப்பாள். ஆனால் திருவண்ணாமலையில் மட்டும் இடது புறத்தில் அம்பாள் உள்ளார். தவம் இருந்து ஈசனின் உடலில் இடது பாகத்தை சரி பாதியாக பெற்றதால் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் அண்ணாமலையாருக்கு இடது பக்கத்தில் உள்ளது.  நண்பரின் பதிவு. சிவஅன்பர்களே நாம் செய்யும் செயலில் சிவம் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள். வாழ்க மெய்அன்பர்கள் வளர்க அண்ணாமலையார் புகழ். அன்பே சிவம். சிவாயநம அருணாச்சலம்

 நமசிவாய வாழ்க

செவ்வாய், 27 மார்ச், 2018

12th - Chemistry Public Exam 2018 - Answer Key

தமிழ்நாடு இடைநிலைக்கல்வி ஆசிரிய இயக்கங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு தீர்மானங்கள்!!!


அறிவியல் ஆசிரியர்களுக்கான புதிய இலவச ஆன்ட்ராய்டு செயலி - ICT4SCIENCE


அறிவியல் ஆசிரியர்கள் கணினி மற்றும் SMART PHONE போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப்  பயன்படுத்தி அறிவியலை மாணவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க தேவையான இலவச மென்பொருட்கள்,  ANDROID செயலிகள் மற்றும் இணைய வளங்களைத் தொகுத்து"ICT4SCIENCE" என்னும் ஒரு எளிய  ANDROID செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

"ICT4SCIENCE" என்னும் இந்த  ANDROIDசெயலி அனைத்து நிலைகளிலும்(ஆரம்பப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை) பணி புரியும் அறிவியல் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு அறிவியலை  மிக எளிதாக கற்பிக்க உதவும் ஒரு வழிகாட்டியாகும்.

அனைத்து அறிவியல் ஆசிரியர்களும் "ICT4SCIENCE" என்னும் இந்த  FREE ANDROID செயலியை தரவிறக்கம் செய்து, பயன்படுத்தி பயனடையவும்.


LINK:

https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_vallaba1979.ICT4SCIENCE

ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை

 தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி முதல் நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் இலவச பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 8 ஆயிரம் மாணவர்கள், நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடி பயிற்சியும், மீதமுள்ள 6 ஆயிரம் மாணவர்களுக்கு மின்னணு முறையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

நேரடி பயிற்சி பெறும் 2 ஆயிரம் மாணவர்கள், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 முகாம்களில் 25 நாட்கள் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

பள்ளி மாணவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள பூச்சி அருங்காட்சியங்கள் உதவும் - முதல்வர்


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூச்சி அருங்காட்சியகம் மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன்படும் வகையில் இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் பூச்சி அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திங்கள்கிழமை (இன்று) திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் உரையாற்றிய அவர்,

இந்த அருங்காட்சியகத்தை விடியோ கான்பிரன்ஸிங் முறையில் திறந்து வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் நேரில் வந்து பார்த்து திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இங்கு வந்து பார்த்ததால் தான் இதன் சிறப்பம்சங்களை நேரடியாக தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்தியாவில் சுமார் 75 ஆயிரம் பூச்சிகள் இருப்பதாக இந்த அருங்காட்சியகத்திற்கு வந்ததால் தெரிந்து கொள்ள முடிகிறது.

நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் எது என்பது குறித்து அறிந்து கொள்ள முடிந்தது.

உலக அளவில் பூச்சிகள் குறித்து இது போன்ற அருங்காட்சியகங்கள் 20 இடங்களில் மட்டும் இருக்கிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் அருங்காட்சியகம் தத்ரூபமாக அமைந்துள்ளது.

பூச்சிகளால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் குறித்து தெரிந்து கொள்ளவும், அவற்றினால் வரும் பாதிப்புகள் குறித்தும், அதற்கு எந்த மருந்துகள் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள இந்த அருங்காட்சிகம் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் வேளாண்மை மாணவர்களும், பள்ளி மாணவர்களும் தன் அறிவை வளர்த்துக்கொள்ள இந்த அருங்காட்சியம் உதவும் வகையில் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரே நேரத்தில் 4 பிரிவு ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் டிபிஐ வளாகத்தில் பரபரப்பு

 ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரே நேரத்தில் 4 பிரிவு ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால்  டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் நேற்று காலை 10 மணி முதல் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள்,  பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் என 4 பிரிவினராக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அவர்கள்  ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு தனித்தனிக் குழுக்களாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு  குவிக்கப்பட்டனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வை 2013ம் ஆண்டு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு கூட்டமைப்பாக கோஷம் போட்டபடி வந்தனர். அவர்கள் ஆசிரியர் தேர்வு  வாரிய தலைவரை சந்திக்க காத்திருந்தனர். அது குறித்து அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 93 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். 5 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்னும் பணி நியமனம்  இல்லை.

பள்ளிக் கல்வி அமைச்சர் விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்று ஜனவரி மாதம் தெரிவித்தார். தொடக்க கல்வித்துறை, பள்ளிக்  கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் போது எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இல்லை என்றால், சட்டப் பேரவையை  முற்றுகையிடுவோம் என்றார்.

அடுத்ததாக 2017ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் சார்பில் நடத்த முற்றுகை போராட்டத்தில்  சென்னையை சேர்ந்த வெங்கட் கூறியதாவது:

கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி–்த் தேர்வில் தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் எழுதினர். அதில் 34 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பணி  ஆணை கிடைக்கும் என்று காத்திருக்கிறோம்.ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதிச் சான்று வழங்க வேண்டும். தாள் ஒன்றுக்கு சான்று சரிபார்ப்பு நடத்த வேண்டும் என்று  கேட்டு பள்ளிக் கல்வி இயக்குநரை சந்திக்க வந்தோம். அவரை சந்தித்த பிறகு ஒரு மாதம் காத்திருக்க சொன்னார் என்றார்.

சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதியவர்கள் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறியதாவது: பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர்களுக்கான 1325 இடங்களை  நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி போட்டித் தேர்வு  நடந்தது. அதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினோம்.

தேர்வு முடிந்து 6 மாதம் கடந்த நிலையில் இன்னும் தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை.  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய உதவி பேராசிரியர் போட்டித் தேர்வில் குளறுபடிகள் நடந்ததால், சிறப்பு ஆசிரியர் தேர்வில் இடம் பெற்ற ஓஎம்ஆர்  தாளை மீண்டும் திருத்த முடிவு செய்துள்ளோம். விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஆர்பி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால்  முடிவுகள் வெளிவரும் காத்திருப்போம் என்று செல்வம் தெரிவித்தார்.

முதுநிலை ஆசிரியர்கள் போட்டித் தேர்வு எழுதி பணி நியமனத்துக்காக காத்திருப்ேபார் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 3300 நிரப்ப போட்டித் தேர்வு நடந்தது. அதில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து 2300 பேருக்கு பணி  நியமனம் வழங்கப்பட்டுவிட்டது.

மீதம் உள்ளவர்களுக்கு சான்று சரிபார்–்ப்பு முடிந்துள்ள நிலையில் பணி நியமன ஆணை இன்னும் வழங்கவில்லை.  ஆதிதிராவிடர் நலத்துறையில் 220 பணியிடங்கள் உள்ள நிலையில் அந்த இடங்களில் எங்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள  வந்தோம். விரைவில் முடிவு தெரிவிப்பதாக டிஆர்பி அதிகாரிகள் ெ தரிவித்துள்ளனர். அதனால் முதுநிலை பட்டதாரி ஆசிரியரகள் கலைந்து  சென்றனர்.

போலீசாரை வெளியே நிற்க வைத்த அதிகாரிகள்

மேற்கண்ட நான்கு பிரிவினரும் டிஆர்பி அலுவலகம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டு இருந்ததால் நுங்கம்பாக்கம் போலீசார் அங்கு வந்தனர்.  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி உரிய அதிகாரிகளிடம் பேச ஏற்பாடு செய்தனர். ஆனால் டிஆர்பியின் தலைவர் நந்தகுமாரிடம் பேச வேண்டும்  என்று போராட்டக் காரர்கள் கேட்டுக் கொண்டனர்.இது குறித்து டிஆர்பி தலைவருக்கு தகவல் தெரிவிக்க சென்ற போலீஸ் அதிகாரிகளை உள்ளே விடாமல் ெவளியில் காக்க வைத்தனர் டிஆர்பி  அதிகாரிகள்.

மேலும், டிஆர்பி  தலைவர் நந்தகுமார் முக்கியமான மீட்டிங்கில் இ ருப்பதால் அதிகாரி ஒருவர் பேச்சு வார்த்தை நடத்துவார் என்று  போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி டிஆர்பி உறுப்பினர் செயலாளர் உமாவை பேச அழைத்தனர். ஆனால் அவர் வழக்கம் போல மனுக்களை  வாங்கிக் கொண்டு பதில் கூறி அனுப்பி விட்டார். இது வழக்கமாக நடப்பதுதான். இவ்வளவு களேபரத்துக்கும் இடையிலும் தலைவர் நந்தகுமார் அவர்  அறையில் இருந்து வெளியில் வரவே இல்லை. அதனால் பட்டதாரிகள் அதிருப்தி அடைந்தனர்.

ஒவ்வொரு மாணவருக்கும் வகுப்பு வாரியாக அரசு செலவிடும் தொகை எவ்வளவு? - அரசு GAZETTE வெளியீடு

1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு

1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பல புதிய நவீனங்கள் அடங்கிய புதிய பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக அவற்ைற அச்சிடும்  பணிகள் முடிய உள்ளன. மே இறுதி வாரத்தில் பள்ளிகளுக்கு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றிஅமைக்கப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய  பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார்.

பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு 100 தலைப்புகளில் 1.70 கோடி பாடநூல் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகம் தொடங்கியுள்ளது. பிராந்திய  மொழிகளிலும் பாடப்புத்தகம் அச்சிடப்படுகிறது.

இந்த புதிய புத்தம் வழவழப்பான அட்டை, திடமான தாளில் பல நிறங்களில் படங்கள் என்று மாணவர்களை கவரும் வகையில் புத்தகம்  தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் பருவத்துக்கான புத்தகத்தை பொறுத்தவரையில் பாடப்புத்தகங்கள் எண்ணிக்கையில் 1 முதல் 3 வரை இருக்கும்.   பாடப்புத்தகங்களின் உள்ளே இடம் பெறும் பாடங்களுக்கு ஏற்ற பல நிறங்களில் படங்கள் அச்சிடப்படுகிறது. அதற்கு அருகில் ‘கியூ ஆர்’ எனப்படும்  ‘கியூக் ரெஸ்பான்ஸ் கோட்’  அச்சிடப்படுகிறது.

அந்த படங்கள் குறித்து கூடுதல் தகவல் வேண்டும் மாணவர்கள் அந்த கியூஆர் குறியீட்டை ஸ்கேன்  செய்து செல்போனில் பார்த்தால் அந்த படங்கள் குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

மேலும், முப்பரிமாணத்தில்(3டி) அந்த படத்தையும் பார்க்க முடியும். அதுமட்டும் இல்லாமல் சில இடங்களில் இணைய தளங்களின் லிங்க்-கும்  குறிப்பிடப்படும். அதைக் கொண்டு மாணவர்கள் அந்த இணைய தளத்துக்கு சென்று கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.


மேலும், 9, 10,  பிளஸ் 1 வகுப்பு பாடப்புத்தகங்களில், ஆங்காங்கே, மேற்படிப்பு குறித்த தகவல்களும் அச்சிட்டு வழங்கப்பட உள்ளன. இந்த பாடப்புத்தகங்கள் அச்சிடும்  பணி மே மாதம் இரண்டாவது வாரத்தில்  முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பணி முடிந்ததும் மே இறுதி வாரத்தில் அனைத்து  பள்ளிகளுக்கும் சென்று சேரும்.


வழக்கம் போல பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கப்படும். மற்ற வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள்  சுமார் 4.50 கோடி அச்சிடும் பணியும் நடக்கிறது.

ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் நேரில் ஆஜராக வேண்டும்: கருவூல கணக்கு துறை செயலாளர் உத்தரவு

தமிழக அரசு சார்பில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள்ஓய்வூதியம்  வழங்கும் அலுவலகத்தில் ஆஜராகி பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசின் கருவூல கணக்கு துறை முதன்மை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:



மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள்  ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி நேர்காணலை பதிவு செய்யவும், நேரில் வர இயலாதவர்கள்  வாழ்வுச்சான்று பெற்று கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை நேர்காணலுக்கு கருவூலம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் ஆஜராகி பதிவு  செய்ய கருவூலத்தின் வேலை நாட்களில் நேரில் வர வேண்டும்.

ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்மந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ-சேவை மையங்கள்  வழியாக நேர்காணலை இணையதளத்தில் (www.jeevanpramaan.gov.in) ஆதார் அட்டை வாயிலாக பதிவு செய்து அதன்மூலம் நேர்காணல்  செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண்  சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள், மேற்படி ஆவணங்களின் நகல்களுடன் தங்களின் ஓய்வூதிய கொடுவை எண்ணை குறிப்பிட்டு கருவூலத்தில்  சமர்ப்பிக்கலாம்.
ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம் கொண்டு வரவேண்டும்.நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் ஓய்வூதியப் புத்தகம், இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை மற்றும்  நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண் (www.tn.gov.in/karuvoolam/) சமர்ப்பிக்கவில்லை எனில் அதன் நகல்களுடன்  வாழ்வு சான்றை உரிய படிவத்தில் ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும்.

குடும்ப ஓய்வூதியர்கள் (நேரில் வருபவர்கள், நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்) மறுமணம் புரியவில்லை என்பதற்கான உறுதிமொழியை சமர்ப்பிக்க  வேண்டும். தற்போதைய இருப்பிட முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் விவரம் அளிக்க வேண்டும். இதுவரை ஓய்வூதியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பம் அளிக்காதவர்கள் கருவூலத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து  வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சனி, 24 மார்ச், 2018

ஒரு ஆப்ஸ், 100 சேவைகள் - கேரள அரசின் ‘எம்கேரளா’ திட்டம் தொடக்கம்: ஆயிரம் இடங்களில் இலவச வைஃபை


                

























இணையம் பயன்படுத்துவது மனிதர்களின் உரிமை என்று நாட்டிலேயே முதல்முறையாக அறிவித்த கேரள மாநிலம், அங்கிருக்கும் மக்களுக்காக ஒரே ஆப்ஸ் மூலம் 100 சேவைகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது.

‘எம்கேரளா’ எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆப்ஸ் மூலம் அரசின் 20 துறைகளில் இருந்து மக்கள் தங்களுக்கு தேவையான 100 சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். விரைவில் 80 துறைகளில் இருந்து ஆயிரம் சேவைகளாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

இந்த எம்கேரளா ஆப்ஸை கேரள மாநில தகவல் தொழில்நுட்ப இயக்கத்தினர் உருவாக்கியுள்ளனர். கொச்சியில் கடந்த 2 நாட்கள் நடந்த டிஜிட்டல் மாநாட்டில் இந்த செயலியை முதல்வர் பினராயி விஜயன் அறிமுகம் செய்தார்.

இந்த செயலி குறித்து மாநில மின்னணு நிர்வாக இயக்க குழுவின் முரளீதரன் மானிங்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

‘‘எம்கேரளா ஆப்ஸ் மூலம் முதல்கட்டமாக 20 அரசு துறைகளில் இருந்து 100விதமான சேவைகளை மக்கள் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் 80 துறைகளில் இருந்து ஆயிரம் சேவைகளை மக்கள் பெறும் வகையில் சேர்க்கப்படும்.

இதேபோன்ற சேவைகள் ஏற்கனவே கேரள அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தாலும், மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் மொபைல்போன் மூலம் கிடைக்க வேண்டும் என எண்ணினோம்.

இதன் மூலம் மக்களுக்கு அரசின் சேவைகளைப் பெற எந்தவழி வசதியாக இருக்கிறதோ அதை தேர்வு செய்து பெறலாம். அரசின் சேவைகளைப் பெற மக்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு சேவையைப் பெற ஒவ்வொரு அலுவலகமாகவும் செல்லத் தேவையில்லை. அனைத்தையும் ஒரே மொபைல் ஆப்ஸிஸ் கொண்டு வந்திருக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் முதல்கட்டமாக மாநிலத்தில் ஆயிரம் இடங்களில் மக்களுக்கு இலவசமாக வைபை இணைய வசதி கிடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவமனைகள், பேருந்துநிலையங்கள், பூங்காக்கள், நூலகங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டமுக்கிய பகுதிகளில் இலவச வைஃபை வசதி செய்யப்பட உள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வைஃபை கிடைக்கும் வசதி 5 ஆயிரம் இடங்களாக அதிகரிக்கப்படும்’’

இவ்வாறு முரளீதரன் தெரிவித்தார்.

Free Guide For NEET and JEE




Click Here and Download

வெள்ளி, 23 மார்ச், 2018

ஜெனிவாவில் நடைபெற இருக்கும் கல்வி மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களைச் சந்திக்கும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன்


நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சுட்டிருந்த நேரம். வீட்டிலிருந்து பள்ளிக்குப் போகும்போதும், பள்ளிக்குப் பக்கத்திலும் சின்னச் சின்ன பசங்க கடைகளில் வேலை செய்யறதைப் பார்ப்பேன். சிலர் ரோட்டோரமா நின்னு கையேந்தி காசு வாங்கிட்டிருப்பாங்க.


படிக்கவேண்டிய வயசுல இவங்க வாழ்க்கை எதனால் இப்படி இருக்குனு தோணும். என் வீட்டுக்கே சில பசங்க வருவாங்க. அப்பாவும் அம்மாவும் அவங்களுக்கு ஏதாவது பொருளாக வாங்கிக்கொடுப்பாங்க. 'கொடுக்கும் இடத்தில் நாம் இருக்கும்போது, தேவைப்படுகிறவர்களுக்கு உதவணும். அந்த உதவி, சரியான முறையில் போய்ச்சேரணும்'னு சொல்வாங்க.


அந்த வார்த்தைகள்தான் 'படிக்கமுடியாத ஏழை மாணவர்களுக்கு ஏதாவது செய்யணும்' என்கிற எண்ணத்தை எனக்குள் உருவாக்குச்சு” - ஃபசூல் ரகுமானிடமிருந்து நிதானமான குரலில் தெளிவான வார்த்தைகள் வெளிப்படுகிறது.


காஞ்சிபுரத்தில் உள்ள செவன்த் டே அட்வென்டிஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன், ஃபசூல் ரகுமான். இரண்டு வருடங்களுக்கு முன்பு, பிரதமருக்குக் கடிதத்தின் மூலம் அனுப்பிய ஒரு திட்டம், இன்று நாடு முழுவதும் சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 'அசிஸ்டென்ட் ஸ்கூல் பீப்பிள் லீடர் ஆஃப் இந்தியா'வாக தேர்வாகி இருக்கும் ஃபசூல், பத்மஸ்ரீ வழங்கும் சேவா விருதுக்கும் தேர்வாகி இருக்கிறார்.


“ஒன்பதாம் வகுப்பு முடிக்கப்போகும் சமயத்தில்தான் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். 'டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இலவச சேமிப்புத் திட்டம்' என்ற பெயரில் இந்தியாவில் உள்ள தனியார் பள்ளிகள் உட்பட அரசுப் பள்ளிகள் அனைத்திலும் படிக்கும் மாணவர்களிடம், மாதம் ஒரு ரூபாய் வசூலிக்க வேண்டும்.


அதன்மூலம் ஒரு வருடத்துக்கு 798 கோடி ரூபாய் கிடைக்கும். அந்தத் தொகையை ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் கல்விக்குப் பயன்படுத்தலாம்' என்று குறிப்பிட்டிருந்தேன். கடிதம் அனுப்பின சில நாள்களிலேயே, கடிதம் கிடைக்கப்பெற்றது எனப் பதில் வந்துச்சு.


அதற்குள் என் ஐடியாவை கேள்விப்பட்டு, புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி கூப்பிட்டுப் பாராட்டினார். முதல்வர் நாராயணசாமியும் நேரில் வாழ்த்து தெரிவித்தார். அந்தப் பாராட்டுகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்துச்சு. அப்போதுதான் பிரதமர் அலுவலகத்திலிருந்து மறுபடியும் ஒரு கடிதம் வந்துச்சு. 'மாண்புமிகு பிரதமர் அவர்கள் உங்களோடு பேச விரும்புகிறார். நேரில் வரவும்' என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாங்க. போன வருஷம் அக்டோபர் 26-ம் தேதி, காலையில் 16 நிமிடங்கள் பிரதமரைச் சந்தித்துப் பேசினேன்.


அவரைச் சந்திக்கிறதுக்கு முன்னாடி நடந்த அத்தனை செக்யூரிட்டி சிஸ்டத்தையும் பார்த்ததுக்கே உடம்பு நடுங்கிப்போச்சு. ஆனால், பிரதமர் என்னைச் சந்தித்தபோது, ஒரு நண்பர்போல இயல்பாகப் பேசினார். 'உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் குடியரசுத் தலைவரையும் சந்திக்கலாமே'னு ஆங்கிலத்தில் சொன்னார். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.




ஜனவரி 15-ம் தேதி, குடியரசுத் தலைவரை சந்திக்க அப்பாயின்மென்ட் கிடைச்சது. அன்றைக்கு இஸ்ரேல் பிரதமரும் அங்கே வந்திருந்தார். அவரையும் பார்த்துப் பேசினேன். என்னுடைய இந்தத் திட்டத்தை சட்டமாகவே செயல்படுத்தலாம் என குடியரசுத் தலைவர் சொன்னார். நான் நினைச்சுகூட பார்க்கலை.


ஜனவரி 16-ம் தேதி சென்னைக்கு வந்துட்டேன். 19-ம் தேதியே, இந்தத் திட்டத்தை லோக் சபாவில் சட்டமாக செயல்படுத்துவதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்துட்டாங்க” - பெருமிதப் புன்னகையோடு பேசும் ஃபசூல் முகத்தில், ஆயிரம் சூரியனின் ஒளி.


'' அப்துல் கலாம் அவர்கள் தன்னுடைய இறுதி நிகழ்ச்சியில் பேசும்போது, 'எனக்கு ஏழைக் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்பதே ஆசை. பள்ளிக்குச் செல்லமுடியாமல் வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு உதவுவதற்கு நீங்கள் முன்வர வேண்டும். உங்களில் யாரேனும் அதை நிறைவேற்ற முடியுமா" என்றார்.


அதுதான் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்று இந்தியா முழுவதும் அவருடைய ஆசை நிறைவேறியிருக்கு. வரும் மே முதல் வாரம், சவுதி அரேபியாவுக்குப் போறேன். அங்க 13 லட்சம் மாணவர்களை அசம்பிள் பண்றாங்க. அவங்க முன்னாடி பேசப் போறேன். சவுதி மன்னரையும் சந்திக்கிறேன். மே 26-ம் தேதி, ஜெனிவாவில் நடைபெற இருக்கும் கல்வி மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்துகொள்கிறேன். அன்றே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கியிருக்காங்க'' என்கிற ஃபசூல் குரலில் இரட்டை உற்சாகம்

தமிழாசிரியர்களுக்கான புதிய இலவச ஆன்ட்ராய்டு செயலி - ICT4TAMIL.

தமிழ் ஆசிரியர்கள் கணினி மற்றும் SMART PHONE போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப்  பயன்படுத்தி தமிழை மாணவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க தேவையான இலவச மென்பொருட்கள்,  ANDROID செயலிகள் மற்றும் இணைய வளங்களைத் தொகுத்து"ICT4TAMIL"  என்னும் ஒரு எளிய  ANDROID செயலி உருவாக்கப்பட்டுள்ளது.


"ICT4TAMIL" என்னும் இந்த  ANDROIDசெயலி அனைத்து நிலைகளிலும்(ஆரம்பப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை) பணி புரியும் தமிழ் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு தமிழை  மிக எளிதாக கற்பிக்க உதவும் ஒரு வழிகாட்டியாகும்.

அனைத்து தமிழ் ஆசிரியர்களும் "ICT4TAMIL" என்னும் இந்த  FREE ANDROID செயலியை தரவிறக்கம் செய்து, பயன்படுத்தி பயனடையவும்.


LINK:

https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_vallaba1979.ICT4TAMIL

தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தான் பணிபுரியும் பள்ளியில் உள்ளூர் விடுமுறை விடப்படும் நாளன்று பணியிடைப் பயிற்சியில் பங்கேற்க நேரிடின், அன்னார் அப்பயிற்சி பெற்ற நாளை ஈடு செய் விடுப்பாக துய்க்க முடியுமா? RTI மூலம் பெறப்பட்ட தகவல்!!!

மண்ணுலகையும் விண்ணுலகையும் வென்றவர்..



                                  

ஆய்வகங்கள், பல்கலைக்கழக வளாகங்கள் ஆகியவற்றைக் கடந்து எளிய மக்களின் வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்திய இயற்பியல் விஞ்ஞானிகள் என்று மூவரை மட்டுமே சொல்ல முடியும். நியூட்டன், ஐன்ஸ்டைன், ஸ்டீவன் ஹாக்கிங் என்ற அந்த மூன்று பெயர்கள் எல்லாருடைய ஞாபகத்துக்கும் வந்துவிடும்.

பிரபஞ்சத்தைச் சுற்றிய மனம்


நியூட்டனின் இயக்க விதிகள், குறிப்பாக மூன்றாம் விதி லட்சக்கணக்கானவர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. ஐன்ஸ்டைனோ இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபத்தோராம் நூற்றாண்டிலும் ஒரு விஞ்ஞானி எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக மாறினார்.

ஸ்டீவன் ஹாக்கிங்கின் புகழ்பெற்ற ‘தி பிரீஃப் ஹிஸ்டரி ஆப் டைம்’ புத்தகத்தால் மட்டுமல்ல; வாழ்க்கை, தான் ஆற்றிய பணிகளால் கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களைத் தொட்ட நபர் ஹாக்கிங். இயற்பியலின் பல்வேறு பிரிவுகளில் நியூட்டனைப் போலவோ ஐன்ஸ்டைனைப் போலவோ விரிந்த புலத்தில் பங்களித்தவர் அல்ல அவர். பிரபஞ்சவியலில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஹாக்கிங், தனது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகப் பட்டப் படிப்பு காலத்திலிருந்து அதிலேயே முதன்மையான பங்களிப்புகளைச் செய்தார். பிரபஞ்சவியல் தொடர்பான ஆய்வு, பங்களிப்புகள் ஆகியவற்றைத் தாண்டி, ஸ்டீவன் ஹாக்கிங்கின் வாழ்க்கையே உலக மக்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது.

செயலிழந்தது உடல் மட்டுமே

1963-ல் 21 வயதில், ஷூ நாடாவை முடிச்சுப் போடுவதில் சிரமத்தை உணர்ந்தார் ஸ்டீவன் ஹாக்கிங். ‘ஆமியோடிராஃபிக் லேட்டரல் ஸ்கிலரோசிஸ்’ என்ற மோட்டார் நியூரான் நோய் அவருக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. மூளை, தண்டுவடத்திலிருந்து கொடுக்கப்படும் தகவல்களுக்கேற்பத் தசைகள் செயல்படாமல் போகும் நிலை அது.

இந்த நோய் குணப்படுத்தப்பட முடியாதது என்றும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே அவர் உயிருடன் இருக்க முடியும் என்றும் மருத்துவர்கள் நாள் குறித்தார்கள். அவர் மன அழுத்தத்துக்கு உள்ளானார். அத்துடன் பிரபல பிரபஞ்சவியலாளரான பிரெட் ஹாய்லியுடன் பணியாற்றுவதற்கு அவர் விரும்பியிருந்த வாய்ப்பும் தவறிப் போனது. பின்னர் அவர் மணந்துகொண்ட ஜேன் வைல்டுடனான காதலே அவரை மீட்டது. மருத்துவர்கள் கணித்த மரணத்தை அவர் தனது விஞ்ஞான வேலைத்திட்டம், அது சார்ந்த தளராத ஊக்கம் ஆகியவை வழியாகவே படிப்படியாக வென்றார். அவருக்கு வந்த நோயின் தன்மையும் மெதுவாகவே செயலிழக்கும் தன்மை கொண்டதாக இருந்ததையும் அவர் சாதகமாக்கிக்கொண்டார்.

தனது உடல் நலக்குறைவுகளுக்கும் நலிவுகளுக்கும் இடையிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பிரிவில் பேராசிரியர் டென்னிஸ் சியாமாவின் மேற்பார்வையில் முனைவர் பட்டத்தை மேற்கொண்டார். தனது ஆய்வுத்தாளிலேயே லட்சிய மனிதராக நினைத்த பிரெட் ஹாய்லின் கருதுகோள்களுடன் முரண்பட்டார்.

விரியும் அண்டம், நொறுங்கும் கருந்துளை

விரிந்துகொண்டே இருக்கும் பேரண்டத்தில் பொருளின் அடர்த்தி மாறாமல் இருக்கும் என்ற ‘ஸ்டடி ஸ்டேட்’ கோட்பாட்டை முன்னிறுத்தியவர்களில் ஒருவர் பிரெட் ஹாய்ல். அதுதான் அப்போது எல்லாரும் ஏற்றுக்கொண்ட கருதுகோளாகவும் இருந்தது. பேரண்டத்துக்குத் தொடக்கமும் கிடையாது என்று ஹாய்ல் கருதினார். அண்டங்கள் (கேலக்ஸிகள்) ஒன்றுக்கொன்று விலகி நகர்ந்தாலும் உருவாக்கப்படும் பொருளின் அடர்த்தி மாறாதது என்று அவர் கூறினார். இந்தக் கோட்பாடு, அடிப்படையில் பெருவெடிப்புக் கோட்பாட்டுக்கு (பிக் பேங்க் தியரி) எதிரானது.


விஞ்ஞானியும் சக நூலாசிரியருமான ரோஜர் பென்ரோஸின் தாக்கம் பெற்றவராக ஆரம்ப காலத்தில் ஸ்டீவன் ஹாக்கிங் இருந்தார். சூரியனைவிடப் பலமடங்கு நிறையுள்ள விண்மீன், ஒருகட்டத்தில் நொறுங்கி குறுகிக்கொண்டே போய் அளவில் சிறியதாகவும் நிறையில் அளப்பரியதாகவும் மாறும். அதுதான் கருந்துளை.

கருந்துளையின் மையம் காலமும் இடமும் அர்த்தமிழந்து போகும் ஒருமை நிலை எனப்படுகிறது. இந்த ஒருமை நிலைக் கோட்பாடு (சிங்குலாரிட்டி) சார்ந்த கணிதவியலாளர் அவர். ஹாக்கிங்கின் முனைவர் பட்ட வழிகாட்டி சியாமாவின் தாக்கத்தால் பென்ரோஸும் நட்சத்திரங்கள், கருந்துளைகள் தொடர்பான ஆய்வில் ஈர்க்கப்பட்டார்.

ஒரு நட்சத்திரம் ஒரு புள்ளிக்கு மேல் தன் ஈர்ப்பு விசையின் காரணமாக நொறுங்கினால், அந்த வினையை நிறுத்த முடியாது என்று பென்ரோஸ் கூறினார். பொதுச் சார்பியல் கோட்பாட்டின்படி, இந்த வினையின் முடிவில் அளவிட முடியாத அடர்த்தியோ ஒருமையோ அடையப்படும்.

ஹாக்கிங் இந்த முடிவால் உற்சாகமடைந்து அதை முழு அண்டவெளிக்கும் பொருத்திப் பார்த்தார். பொதுச் சார்பியல் கோட்பாடு சரியாக இருக்குமானால், அண்டத்தின் வளர்ச்சியைப் பின்னோக்கிப் பார்க்கும்போது ஒரு தருணத்தில் ஒருமை நிலை இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

பெரு வெடிப்பு பிரபஞ்சவியலில் அவர் அளித்த இப்பங்களிப்புக்கே அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. இயற்பியலாளராக அவர் அளித்த முதல் பங்களிப்பு இதுவென்றாலும், மிகப் பெரியது. அதுவே அவரை சர்வதேச அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானியாக ஆக்கியது. விரிந்துகொண்டே இருக்கும் அண்டம், தனது ஈர்ப்பிலேயே நிறுத்தவே இயலாமல் நொறுங்கும் கருந்துளை என இயற்பியலாளர்களாலும் கற்பனை செய்யவே முடியாத இரண்டு அதீத நிகழ்வுகளை அவர் விளக்கி நிரூபித்தார்.

புரியும் மொழிநடையில் அண்ட அறிவியல்

வெப்ப இயக்கவியல் விதிகளைப் போலவே தென்படும் கருந்துளை இயக்கவியல் விதிகளை அவர் உருவாக்கினார். இந்த அடிப்படையில் அவர் செய்த கணிப்பொன்றால் ஒரு முரண்பாட்டையும் சந்தித்தார். கருந்துளைகளிலிருந்து கதிர்வீச்சு வெளிப்படும் என்பதுதான் அது. ஒளி உட்பட எதுவும் தப்பிக்க முடியாது என்று முன்னர் கருதப்பட்டது. இந்நிலையில் குவாண்டம் கோட்பாட்டை இணைத்து இந்த முரண்பாட்டை அவரே தீர்த்தார். ‘ஹாக்கிங் கதிரியக்கம்’ என்று அந்த கண்டுபிடிப்பு அழைக்கப்படுகிறது

இயற்பியல் விஞ்ஞானியான அவர் எழுதிய, ‘எ ப்ரீஃப் ஆப் டைம்’ நூல், துறை சார்ந்த தொழில்நுட்ப மொழியில் அமைந்ததல்ல. அண்டவெளியின் அமைப்பு, வளர்ச்சி, ஆகியவற்றை முடிந்த அளவு சாதாரண வாசகர்களும் புரிந்துகொள்ளும் சுவாரசியமான மொழியில் எழுதப்பட்டது. பிரபஞ்சங்களின் ரகசியங்களை ஆராய்ந்தது மட்டுமல்ல, மனித நம்பிக்கை, முயற்சியால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த சாதனை வாழ்க்கை அவருடையது. ஒருவரின் கனவுகளை நனவாக்குவதற்கு ஊனம் ஒரு தடையே அல்ல என்பதை ஒவ்வொரு கணமும் சக்கர நாற்காலியில் இருந்துகொண்டு இயங்க முடியாமல், பேச இயலாமல் இருந்த நிலையிலும் சாதித்தவர் அவர். வாழ்தலுக்கான விருப்புறுதியின் அடையாளம் ஸ்டீவன் ஹாக்கிங்.

தலை உயர்த்தி நட்சத்திரங்களைப் பாருங்கள், தலை குனியாதீர்கள். ஒருபோதும் உழைப்பைக் கைவிடாதீர்கள். உழைப்புதான் வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் அவசியத்தையும் தருவது; அதுவன்றி வாழ்க்கை வெற்றிடமாக இருக்கும். நேசத்தைக் கண்டறியும் அளவுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், ஒன்றேயொன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்; அது அரிதானது; ஒரு போதும் தூக்கி எறிய வேண்டாம்.

- ஸ்டீவன் ஹாக்கிங் தன் குழந்தைகளுக்குச் சொல்லும் மூன்று அறிவுரைகள்

வியாழன், 22 மார்ச், 2018

தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவிப்பு


டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த குடியரசு தின விழாவையொட்டி விருதுக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று டெல்லியில் ஜனாதிபதி மாளிகை ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி வருகிறார். இந்த விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
1. இளையராஜா
2. விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன்
3. நானம்மாள்
4. ராஜகோபால் வாசுதேவன்
5. ராமச்சந்திரன் நாகசாமி
6. ரோமுலஸ் விடாகர்
இளையராஜாவுக்கு பத்மபூஷண் விருதும், மதுரையை சேர்ந்த ராஜகோபால் வாசுதேவனுக்கும், நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கும், கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் நானம்மாளுக்கும், சென்னை பாம்பு பண்ணையை நிறுவிய ரோமுலஸ் விடாகருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகளும் தொல்லியல் ஆய்வாளர் ராமசந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டன.

SCERT - 5 DAYS ICT TRAINING TO TEACHERS (02.04.2018 TO 06.04.2018) DIRECTOR PROCEEDING ..

தொழில் நுட்பத்தில் கலக்கும் அரசுப்பள்ளி கணித ஆசிரியர்

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணந்த 5 துணை நிறுவனங்களில் காசோலைகள் மார்ச் 31க்குப் செல்லாது..

மார்ச் 31 தேதிக்குப் பின் காசோலைகள் செல்லாது : பாரத ஸ்டேட் வங்கி அதிரடி எச்சரிக்கை

புதிய காசோலைகளைப் பெற வங்கிக் கிளையை நேரிலோ, ஏடிஎம்
இயந்திரம் மூலமோ, இணையம் மூலம் onlineSBI.com என்ற முகவரியில் தொடர் கொண்டோ பெற்றுக் கொள்ளலாம்.
ஆர்.சந்திரன்

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணந்த 5 துணை நிறுவனங்களில் காசோலைகளை மார்ச் 31க்குப் பின் பயன்படுத்த வேண்டாம் என வங்கி உத்தரவிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்த அதன் 5 துணை நிறுவனங்கள் மற்றும் பாரத மகிளா வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பழைய வங்கியில் அவர்கள் பெற்றிருந்த காசோலையை பயன்படுத்த வரும் மார்ச் 31ம் தேதிதான் கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த காசோலைகள் செல்லத்தக்கவை அல்ல என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கித்துறையில் சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப, சிறு வங்கிகளை இணைத்து பெரிய வங்கிகளை உருவாக்க நினைத்து காரியத்தில் இறங்கியுள்ள மத்திய அரசு, ஸ்டேட் பேங்க் ஆப் பிக்கானூர் & ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் போன்ற அதன் துணை நிறுவனங்களாக இயங்கி வந்த தனி வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதேபோல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் பெண்களுக்கென தனியாகத் தொடங்கப்பட்ட பாரத மகிளா வங்கியையும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைத்துவிட்டனர்.

எனினும் அந்த 6 வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் முன்னர் பெற்ற காசோலை போன்றவற்றை பயன்படுத்த சிறிது காலத்தக்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு செப்டம்பர் 2017 வரை என கால வரம்பு அறிவிக்கப்பட்டது. அது பின்னர் டிசம்பர் 31ம் தேதி என தளர்த்தப்பட்டது. எனினும் பல வாடிக்கையாளர்கள் முழுமையாக மாறாமல் தொடர்ந்தது தெரிய வந்தது. அதனால், தற்போது பாரத ஸ்டேட் வங்கி இறுதி எச்சரிக்கையாக, புதிய நிதியாண்டில் இருந்து புதிய காசோலைகளை மட்டும்தான் பயன்படுத்தலாம். பழைய காசோலைகளை மார்ச் 31ம் தேதிக்கு முன்பு காசாக்கும் விதமாக பயன்படுத்தி விடும்படி கேட்டக கொண்டுள்ளது. எந்த காரணத்திற்காகவும் பழைய காசோலைகளை புதிய ஆண்டில் பயன்படுத்த இயலாது என தெரிவித்துள்ளது.

மேலும், புதிய காசோலைகளைப் பெற வங்கிக் கிளையை நேரிலோ, ஏடிஎம் இயந்திரம் மூலமோ, இணையம் மூலம் onlineSBI.com என்ற முகவரியில் தொடர் கொண்டோ பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதேபோல, முந்தைய வங்கி பெயரில் ஆன்லைன் பேங்கிங் வசதி பெற்றிருநதால், அதே பெயரில் இ மெயில் முகவரியில், மொபைல் எண்ணில் தொடர்ந்து சேவை பெறலாம் எனவும், நெட் பேங்கிங் எனப்படும் இணையதள வசதிக்கு மட்டும் onlinesbi.com என்ற முகவரியில் அணுகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல, வங்கிக் கிளைகளின் IFSC எண்களை மாற்றியுள்ளதாகவும் சுமார் 1300 கிளைகளுக்கு இந்த மாற்றம் நடந்துள்ளதாகவும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

Phoetic English- Unit 7 I Can


என்னால் முடியும்...
--------------------------------
முகநூலிலும்,வாட்ஸ் அப்பிலும் முகம் காட்டாத எத்தனையோ ஆசிரியப் பெருமக்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளுக்காய் சப்தமில்லாமல் கல்வியையும், பாசத்தையும் சரிவிகிதமாய் ஊட்டியபடி உயிர்த்துடிப்புடன் தன் பணியைச் செவ்வனே செய்து வருகின்றனர். ஆனால் இவர்களது பணியோ ,கடமையோ ஒரு கைதட்டல் கூட இல்லாத அங்கீகாரத்தோடு ஓய்வு பெற்று விடுவது தான் காலத்தின் கொடுமை. கல்வித் துறையின் கை தொடா நனவு.திறமையுள்ள இவர்களை உள்ளூர் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் தானே தனித்துவமும் ,சுயதிறமையும் உலகளாவிப் பரவும். இதையெல்லாம் பொருட்படுத்தாத இந்த ஆசிரியச் சொந்தங்கள் நொடி முட்களாய் தங்கள் பணியில் சுழன்று கொண்டேயிருக்கிறார்கள்.

Phonetics படப்பதிவுப் பணியில் ஐயப்பன் ஆசிரியர், முதல் 6 unit களை எடுத்த பின் 7 வது unit ஐ யார் முதலில் எடுப்பது என்ற கேள்வி ஒரு தயக்கமான தேடலாக அமைதி ஊர்வலம் நடத்தியது.நான் எடுக்கிறேன் சார் என்ற தைரியமான முதல் குரலுக்குச் சொந்தமான ஆசிரியர் தான் திருமதி.G,சித்ரா MSC,B.ed அவர்கள்.

ஆழ்ந்த நுட்பம், ஆரவாரமில்லா அணுகுமுறை, தெளிவான முன்நகர்வு என்ற பல பரிமாணங்களோடு தான் எடுத்துக் கொண்ட ஆங்கிலப் பாடத்தை வெளிக்கொணர பெருமுயற்சி எடுத்துக் கொண்டவர்.
குழந்தைகளுக்கு முன்னும்,ஆசிரியர்களுக்கு முன்னும் பாடம் நடத்துவது வேறு.நடிப்பது என்பது வேறு. ஆனால் எதைப் பற்றியும் பெருவிசயமாக எடுத்துக் கொள்ளாமல் எல்லோர் பயத்தையும் போக்கும் முன்னுதாரமாக நடத்தி,நடித்து முடித்தார்.படக்குழுவினர் பாராட்டையும் பெற்றார்.

ஆமூர் நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணி புரிந்து வரும் இவரது பள்ளியில் எடுத்தது தான் இப்பாடலும் கூட, முழு ஒத்துழைப்பும் இவர்தான். இந்த project   முழுவதற்கும் உதவி இயக்குனர் போல் எல்லாப் பணிகளையும் சிரமேற் கொண்டு செய்து முடித்தவர்.
மிகை அலங்காரத்திற்காக நான் எதையும் சொல்ல வில்லை.வீட்டுக் கடமைகளையும் செய்து,பணிக்கான அலுவல்களையும் செய்து,அதையும் மீறி சாதனைக்காக நேரங்களை செலவிடுவது ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு சாதாரண விஷயமல்ல.படப்பதிவு இறுதிக்கட்டத்தில் இரு சக்கர வாகன விபத்தில் கணுக்காலில் அடிப்பட்டு மிகப்பெரிய தொகையையும், இன்னல்களையும் சுமந்தாலும் இந்த project வெளிவர தன்னாலான அத்துனையும் தியாகித்தவர் சித்ரா ஆசிரியர் அவர்கள்.

அவருக்கும் ,அவர் குடும்பத்தாருக்கும் அரசுக் குழந்தைகளின் ஆசீர் என்றென்றும் தென்றலாய் வாழ்த்துகளாய் வருடிக்கொண்டே இருக்கும்.
இதுவரை யாராலும் வாழ்த்தப் பெறாத அவருக்கும் நம் எல்லோரின் சார்பான வாழ்த்துகள்.

இந்த unit -7  ன் கெளரவம் முழுதும் அவர்க்கே உரியதாகட்டும்....

To more videos... Pls Subscribe this You Tube Channel.

Pls share to all.இதுவே ஒரு ஆசிரியர்க்கு நாமளிக்கும் உரமூட்டல்....

அமலன் ஜெரோம்
Phonetics இயக்குநர்

வேலூர் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை

உடனடியாக EMIS இல் செய்ய வேண்டியது- Emis Video Conference- Minutes

அரசுப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய குறும்படம் :



உலக நீர் தினத்தை முன்னிட்டு - பூங்குளம் கனவுப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய " நீர் சேமிப்பு " குறும்படம்.

கனவுப்பள்ளி பூங்குளம் மாணவர்களின்  உலக நீர் தின சிறப்பு பாடல்கள்




அரிய முயற்சி. பாராட்டி பகிர்ந்து ஊக்குவியுங்கள்.

கல்விச்சிகரம்   www.kalvicikaram.blogspot.in பாராட்டுக்கிறது............